ஓலா எல்லாம் ஒரம் போ! கம்மி விலை, பராமரிப்பு செலவு ரொம்ப கம்மி! ஏத்தர் வெளியிடப்போகும் புதிய ஸ்கூட்டர் இதான்

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இன்று தனது வாடிக்கையாள்களுக்கான நாளாக கம்யூனிட்டி தினம் என்ற நாளை கொண்டாடியுள்ளது.இந்த நிகழ்வில் அந்நிறுவனம் தனது புதிய வாகனங்களை தயாரிக்கும் ஃபிளாட்பார்மை உருவாக்கியுள்ளது. குடும்பத்துடன்பயணிக்க ஏற்ற வாகனங்களை உருவாக்கும் வகையில் இந்த பிளாட்ஃபார்ம் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் EL (enlightened) என்ற பிளாட்ஃபார்மை இன்று தனது வருடாந்திர நிகழ்வான ஏத்தர் கம்யூனிட்டி தினத்தில் அறிமுகப்படுத்தியள்ளது. இந்த பிளாட்ஃபார்மின் பிரதான நோக்கமே இதில் மார்டனான பைக்கை உருவாக்க முடியும். குறைவான விலை, சர்வீஸ் மற்றும் பராமரிப்பு செலவு குறைவாக இருக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

ather community day

இதில் உருவாக்கப்பட்ட முதல் வாகனத்தின் புரோட்டோ டைப்பையும் காட்சிப்படுத்தியுது. இதற்கு EL01 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது குடும்ப பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து லைட்டுகளும், எல்இடி லைட்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. இதன் சீட்டிற்கு அடியில் 2 ஹெல்மெட்களை வைக்கும் அளவிற்கு இட வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பெரிய ஃப்ளோர் போர்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் 14 இன்ச் வீல் வழங்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக இந்த ஸ்கூட்டரின் உள்ளேயே ஏசி-டிசி மாடுல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்கூட்டருக்க தனியாக சார்ஜர் எடுத்து செல்ல தேவையில்லை. ஸ்கூட்டரின் உள்ளேயே சார்ஜர் ஒயர் இருக்கும் அதை எடுத்து நேரடியாக கனெக்ட் செய்து பயன்படுத்த முடியும்.

ather community day

அந்நிறுவனம் தற்போது தயாரிக்கும் ஏத்தர் ரிஸ்டா, 450 சிரீஸ் ஸ்கூட்டர்கள் தயாராகும் பிளாட்ஃபார்மை விட இது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. இந்த EL பிளாட்ஃபார்மில் ஸ்டீல் ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அளவு கொண்ட ஏத்தர் பேட்டரிகளை பொருத்த முடியும். ஏத்தர் நிறுவனத்திடம் தற்போது 2kWh முதல் 5kWh வரை அளவு கொண்ட பேட்டரிகள் உள்ளது. இந்த ஸ்கூட்டர் யூனி பாடி சேஸ் கொண்ட ஸ்கூட்டராக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த யூனி பாடி சேஸ் காரணமாக உதிரி பாகங்கள் மிக குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. இதனால் இதற்கான சர்வீஸ் செலவு மிக குறைவாக இருக்கும். இந்த ஸ்கூட்டரில் மாடுலர் முறையில் பல்வேறு மாடல்களை சுலபமாக அந்நிறுவத்தால் தயாரிக்க முடியும். மேலும் இந்நிறுவனம் இந்த பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் மேக்ஸி மற்றும் ஸ்போர்ட்டி ஸ்கூட்டர்களின் டீசர் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் ஸ்கூட்டர்கள் என்டரி லெவல் ஸ்கூட்டர்களாக குறைந்த விலையில் விற்பனைக்க வரும் என எதிர்பார்க்கலாம். ரிஸ்டாவை விட இந்த ஸ்கூட்டர்கள் குறைவா விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் ஸ்கூட்டர் அடுத்தாண்டு பண்டிகை காலத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏத்தர் நிறுவனம் இந்த ஸ்கூட்டரை மகாராஷ்டிரா மாநிலத்தில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

ஏத்தர் நிறுவனம் இந்த EL அடிப்படையிலான ஸ்கூட்டரை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதன் பராமரிப்பு செலவு குறைவு என்பது மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது. மேலும் இந்த ஸ்கூட்டருக்கான புதிய பிரேக்கிங் சிஸ்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தேய்மானம் மிக குறைவாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏத்தர் நிறுவனம் சர்வீஸ் சென்டர்களை குறைவாக வைத்தாலும் வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனை இருக்காது என இது கொண்டு வரப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் நிறுவனம் குறைந்த விலையில் , குறைந்த பராமரிப்பு செலவுடன் கூடிய ஸ்கூட்டரை கொண்டு வந்தால் நிச்சயம் இது மார்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மார்கெட்டில் இந்த ரக வாகனங்களுக்கு தான் அதிக டிமாண்ட் இருக்கிறது. இந்த பிளாட்ஃபார்ம் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 30, 2025, 14:20 [IST]
English summary
Ather community day el01 concept el platform highlights
மேலும்... #ather energy #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+