ஏத்தர் இவ்ளோ நல்ல பிராண்டா!.. ஏழைகளும் இ-ஸ்கூட்டர பயன்படுத்தனும்றதுக்காக பெரிய வேலையை பாக்குது!

இந்தியாவின் முன்னணி மின்சார இரண்டுசக்கர வாகன (Electric Two Wheeler) உற்பத்தி நிறுவனங்களில் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy)-யும் ஒன்றாகும். டிவிஎஸ் (TVS) மற்றும் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியான இடத்தில் இந்த பிராண்டே இப்போது மின்சார டூ-வீலர் விற்பனையில் உள்ளது. ஏற்கனவே இது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை விற்பனையில் பின்னுக்கு தள்ள தொடங்கிவிட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய பிராண்டே தன்னுடைய நிலையை மேலும் முன்னணி இடத்திற்கு எடுத்துச் செல்லும் பணியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது மலிவு விலை இ-ஸ்கூட்டர்களை விற்பனைக்குக் கொண்டு வந்து, அதன் வாயிலாகவே விற்பனையில் முன்னணி இடத்தைப் பிடிக்க திட்டமிட்டு இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த நிறுவனம் பிரத்யேகமாக புதிய விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்வதற்கான புதிய தளத்தை உருவாக்கும் பணியில் களமிறங்கி இருப்பதாகவே இப்போது புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Ather announces development of el platform

நிறுவனம் இஎல் பிளாட்பாரம் (EL Platform) மற்றும் ஜெனித் பிளாட்பாரம் (Zenith Platform) எனும் இரண்டு தளங்களையே தயார் செய்துக் கொண்டிருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் முதல் ஒன்றே மலிவு விலை மின்சார ஸ்கூட்டர்களுக்கான பிளாட்பாரம் ஆகும்.

இரண்டாவது ஒன்று எலெக்ட்ரிக் பைக்கிற்கான தளம் ஆகும். இதன் வாயிலாக ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் விரைவில் இ-பைக்கின் உற்பத்தி பணிகளையும் தொடங்க இருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், விரைவிலேயே இந்த பிராண்டின்கீழ் விரைவில் மிகவும் விலை குறைவான இ-ஸ்கூட்டர் மற்றும் பைக்குகள் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Ather 450x pic

இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின்கீழ் 450 சீரிஸ் (450 Series) மற்றும் ரிஸ்தா (Rizta) ஆகிய இரண்டு மின்சார ஸ்கூட்டர் மாடல் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றின் வரிசையிலேயே இன்னும் சில புதுமுக மின்சார வாகனங்கள் இணைக்கப்பட இருக்கின்றன. ஆனால், அவை எப்போது விற்பனைக்கு வரும் என துல்லியமான தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

விரைவிலேயே இதுபற்றிய விரிவான தகவல்கள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி ரிஸ்தாவின் இ-ஸ்கூட்டருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இது ஓர் ஃபேமிலிக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். நிறுவனத்தின் மலிவு விலை இ-ஸ்கூட்டராகவும் இதுவே இருக்கின்றது.

Ather 450x rear pic

ரூ. 99,999 என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதைவிட குறைவான விலையிலேயே புதிய இ-ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் ஏத்தர் களமிறங்கியுள்ளது. நிறுவனம் ரிஸ்தாவை போலவே ஏத்தர் 450 சீரிஸின்கீழ் 450 எஸ், 450 எக்ஸ் மற்றும் 450 அபெக்ஸ் ஆகியவற்றை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ரூ. 1.19 லட்சம் தொடங்கி ரூ. 1.89 லட்சம் வரையிலான விலையில் இவை விற்பனைக்குக் கிடைக்கின்றன. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. அதிக பிரீமியம் மற்றும் அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கியிருக்கின்ற காரணத்தினாலேயே 450 சீரிஸ் சற்றே அதிக விலையில் விற்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்களின் மனம் கவர்ந்த எலெக்ட்ரிக் டூ-வீலர் பிராண்டாக இப்போது ஏத்தர் எனெர்ஜி மாறியிருக்கின்றது. இந்த நிலையிலேயே மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாயிலாக தன்னுடைய சந்தையை மேலும் விரிவுப்படுத்தும் முயற்சியில் அந்நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. ஆனால், அவை எப்போது விற்பனைக்கு வரும் என்கிற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, April 24, 2025, 23:28 [IST]
English summary
Ather develops el platform for affordable e scooters and zenith platform for e motorcycles
மேலும்... #ather energy #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X