1 கிமீ-க்கு 1 ரூபாய் தான் கட்டணமா... ஓசூரில் உற்பத்தி செய்யப்படும் ஸ்கூட்டரை வாங்க இதைவிட என்ன காரணம் வேணும்?

ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனத்தில் இருந்து '450' என்கிற செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2020ஆம் ஆண்டு சமயத்திலேயே அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் 'ரிஸ்டா' (Rizta) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை குறைந்த விலையில் அறிமுகம் செய்து ஏத்தர் நிறுவனம் மார்க்கெட்டில் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், ஏத்தர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை மேலும் குறைக்கும் விதமாக BaaS திட்டத்தை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. BaaS என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்காக, அதனை பற்றி சுருக்கமாக பார்க்கலாம். BaaS என்பது Battery-as-a-Service என்பதன் சுருக்கம் ஆகும்.

ather battery-as-a-service plans

இதன் அர்த்தம் என்னவென்றால், எலக்ட்ரிக் வாகனத்திற்கான பேட்டரியை குத்தகை முறையில் பெறலாம். அதாவது, வாகனத்துடன் வழங்கப்படும் பேட்டரியில் சார்ஜ் காலியானால் அதனை அருகில் உள்ள பேட்டரி சுழற்சி மையத்தில் கொடுத்து சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரியாக பெற்றுக் கொள்ளலாம். எந்த அளவிற்கு சார்ஜை பயன்படுத்தினோமோ அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.

இது சார்ஜிங் நேரத்தை குறைப்பதுடன், குறைந்த விலையில் எலக்ட்ரிக் வாகனத்தை விற்க உதவுவதால் சமீப காலத்தில் நிறைய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் BaaS திட்டத்தை பின்பற்ற ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் இதன் மூலமாக எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனையில் கவனிக்கத்தக்க வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.

ather battery-as-a-service plans

இதே ஃபார்முலாவை ஏத்தர் எனர்ஜி நிறுவனமும் பின்பற்ற துவங்கி உள்ளது. இதன் மூலமாக, ஏற்கனவே விலை குறைவான ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்கும் ரிஸ்டாவின் விலை குறைந்திருப்பது மட்டுமின்றி, ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகளும் வெகுவாக குறைந்துள்ளன. இதன்படி, ரிஸ்டா ஸ்கூட்டரை இனி ரூ.75 ஆயிரத்து 999இல் இருந்து வாங்கலாம்.

அதேபோல், ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் ரூ.84 லட்சத்து 341 என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-showroom Price) இருந்து வாங்கலாம். BaaS திட்டத்தில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குபவர்கள் 1 கிமீ பயணத்துக்கு 1 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும் என ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

மற்ற நிறுவனங்களை காட்டிலும் BaaS திட்டத்தில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அட்வான்ஸாக யோசித்து கால வரையறைகளை நிர்ணயித்துள்ளது. அதாவது, 3-வருடங்கள் மற்றும் 4-வருடங்கள் என திட்டத்திற்கான காலத்தை ஏத்தர் எனர்ஜி நிர்ணயித்துள்ளது. இதில், 4 வருட காலத்தை தேர்வு செய்தால், உரிமையாளர்கள் 1 கிமீ-க்கு 1 ரூபாய் என்கிற கட்டணத்தில் மாதத்திற்கு ஆயிரம் கிமீ தொலைவிற்கு தங்களது ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்யலாம்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் அதில் பொருத்தப்படும் பேட்டரியை பொறுத்து பேட்டரியை பயன்படுத்துவதற்கான கட்டணம் மாறுப்படும் என ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. BaaS திட்டத்தை வழங்குவதற்கு முன்பே, கடந்த சில வருடங்களாகவே ஏத்தர் நிறுவனம் அதன் கஸ்டமர்களுக்கு 1 வருடத்திற்கான இலவச ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சேவையை வழங்கி வருகிறது. இதன்படி, இந்தியா முழுவதும் நிறுவப்பட்டுள்ள 3,300க்கும் அதிகமான ஏத்தர் கிரிட் (Ather Grid) ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களில் 1 வருடத்திற்கு இலவசமாக சார்ஜ் நிரப்பிக் கொள்ளலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: BaaS திட்டத்தை பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பின்பற்ற ஆரம்பித்துள்ளன என்றாலும், இந்த விஷயத்தில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்துள்ளது. வித்தியாசமாக யோசித்துள்ளது என சொல்வதை காட்டிலும், தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கஸ்டமர்கள் அதிகம் பயன்படுத்த BaaS திட்டத்தின் மூலம் ஊக்கப்படுத்தி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏத்தரின் BaaS திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள ஏத்தர் டீலர்ஷிப் ஷோரூமை அணுகவும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 15, 2025, 22:31 [IST]
English summary
Ather energy announced battery as a service plans for rizta and 450 electric scooters
மேலும்... #ather energy #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+