தமிழ்நாட்டில் திரும்பும் பக்கம் எல்லாம் சார்ஜிங் ஸ்டேஷன்ஸ்... ஓசூரில் உருவாகும் ஸ்கூட்டர்களை தைரியமா வாங்கலாம்

ஏத்தர் எனர்ஜி (Ather Energy), இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலர்கள் (Electric 2-Wheelers) விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களுள் ஒன்று. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டாலும், ஓசூரில் தான் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்திற்கு தொழிற்சாலை உள்ளது. இதனாலேயே, பெங்களூருவை சுற்றியுள்ள பகுதிகளில் தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவதுடன், தமிழ்நாட்டிலும் தொடர்ச்சியாக தனது மார்க்கெட்டை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விரிவுப்படுத்தி வருகிறது.

எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்வதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், அவற்றிற்கு தேவையான சார்ஜிங் (Charging) வசதிகளையும் ஏற்படுத்துவது ஆகும். அதாவது, பெட்ரோல் பங்க்களை போன்று எளிதாகவும், விரைவாகவும் அணுகக்கூடியதாக சார்ஜிங் வசதிகள் இருந்தால்தான் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை வளர்ச்சி அடையும்.

ather grid fast charging points

இதனாலேயே, ஒவ்வொரு எலக்ட்ரிக் வாகன நிறுவனங்களும் தங்களுக்கு என பிரத்யேகமாக சார்ஜிங் நெட்வொர்க்கை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 'ஏத்தர் கிரிட்' (Ather Grid) என்கிற பெயரில் சார்ஜிங் நிலையங்களை நாடு முழுவதும் நிறுவி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் ஏத்தர் கிரிட் சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன் மூலமாக, தமிழ்நாட்டில் ஏத்தர் கிரிட் மையங்களின் எண்ணிக்கையில் 400 என்கிற எண்ணிக்கையை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் ஏத்தர் நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) பயன்படுத்துவதும், அவற்றை சார்ஜ் செய்வதும் எளிமையானதாகவும், ரேஞ்ச் குறித்த அச்சமின்றி பயன்படுத்தவும் முடியும்.

ather grid fast charging points

ஏத்தர் கிரிட் சார்ஜிங் மையங்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் ஷோரூம் (Showroom) மற்றும் சர்வீஸ் செண்டர் (Service Centre) மையங்களை நிறுவுவதிலும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் முனைப்புடன் உள்ளது. கடந்த 2025 ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் 44 எக்ஸ்ப்ரீயன்ஸ் ஷோரூம்களையும், 42 சர்வீஸ் செண்டர்களையும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கொண்டுள்ளது.

இந்த ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் செண்டர்கள் தமிழ்நாட்டின் 35 நகரங்களில் செயல்படுகின்றன. அதுவே, ஏத்தர் கிரிட் சார்ஜிங் மையங்கள் தமிழ்நாட்டில் 38 பகுதிகளில் தற்சமயம் உள்ளன. குன்னூர், ஏலகிரி மற்றும் ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில்தான் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது கிரிட் சார்ஜிங் நிலையங்களை நிறுவியது.

தமிழ்நாட்டில் சென்னை- பாண்டிச்சேரி, சென்னை- திருச்சி, மதுரை- கன்னியாக்குமரி, கோயம்புத்தூர்- பழனி மற்ற்ம் கோயம்புத்தூர்- பெங்களூரு செல்லும் முக்கியமான வழித்தடங்களில் ஏத்தர் கிரிட் சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டு உள்ளன. ஏத்தர் கிரிட் சார்ஜிங் மையங்கள் எங்கு எங்கெல்லாம் உள்ளன என்பதை கூகுள் (Google) வரைப்படத்தின் மூலமாகவும் அடையாளம் காண முடியும்.

இதற்காக, தமிழ்நாட்டில் பல தனியார் நிறுவனங்கள் உடன் கூட்டணி சேர்ந்துள்ள ஏத்தர் எனர்ஜி நிறுவனம், அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் கிரிட் சார்ஜிங் நிலையங்களை நிறுவி வருகிறது. இந்தியா முழுவதும் மொத்தம் 3,300க்கும் அதிகமான ஏத்தர் கிரிட் சார்ஜிங் நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) நிலையங்களை கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து ஏத்தர் நிறுவனம் நிறுவி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் அதிகம் வாங்க வைக்க வேண்டுமெனில், அதற்கேற்ப சார்ஜிங் வசதிகள் பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்க வேண்டியது அவசியமாகும். இருப்பினும், ஏத்தர் எனர்ஜி போன்ற பெரும்பாலான இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வட இந்தியாவை நோக்கி தங்களது நெட்வொர்க்கை பெரிதுப்படுத்தி வரும் நிலையில், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தென்முனையை நோக்கி நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 13, 2025, 16:01 [IST]
English summary
Ather energy crosses 400 ather grid fast charging points milestone in tamilnadu
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+