ஓசூரில் ஃபேக்ட்ரி வெச்சவங்க தோற்று போனதா சரித்தரமே இல்ல! ஒரு கோடி இல்ல, 2 கோடி இல்ல... ரூ.940 கோடி வருவாய்!

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான ஏத்தர் எனர்ஜி (Ather Energy), கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் துவங்கிய 2025-26ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சிறப்பான விற்பனை மூலமாக இந்தியாவின் எலெக்ட்ரிக் 2-வீலர் சந்தையில் குறிப்பிடத்தக்க பங்கை பெற்றிருப்பதுடன் பொருளாதார அடிப்படையிலும் ஏத்தர் எனர்ஜி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது.

ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் விரிவடையும் நெட்வொர்க், பல்வகைப்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் சிறப்பான தொழில்நுட்ப அமசங்கள் ஆகியவை இந்த நிறுவனம் கடந்த 3 மாதங்களில் அடைந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாகும். ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் சந்தையில் மொத்தம் 65 ஆயிரத்து 595 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

ather energy 2025-26 q2 sales report

இது, கடந்த மூன்று மாதங்களில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யப்பட்ட எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையில் 17.4% ஆகும். அதுவே, 2024-25ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இது 12.1% ஆகவும், 2025-26ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 14.3% ஆகவும் இருந்தது. ஏத்தர் எனர்ஜியில் இருந்து தற்போதைக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதால், கடந்த 3 மாதங்களில் ஏத்தர் விற்பனை செய்த 65 ஆயிரத்து 595 வாகனங்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும்.

ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் லாப விகிதம் ஆண்டுக்கு ஆண்டு சுமார் 1,100 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து (10%) உள்ளது. 2025 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2025-26ஆம் நிதியாண்டின் 2ஆம் காலாண்டில், ஏத்தர் எனர்ஜியின் மொத்த வருவாய் ரூ.940.7 கோடியாக பதிவாகி உள்ளது. இது கடந்த 2024ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட 57% அதிகரிப்பாகும்.

ather energy 2025-26 q2 sales report

அதேபோல், 2025 ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டை விட இரண்டாம் காலாண்டில் 40% அதிகரிப்பும் ஆகும். ஏத்தரின் மென்பொருள் சந்தாக்கள், சார்ஜிங் கட்டணங்கள், உதிரிபாகங்கள் மற்றும் சேவை போன்ற சூழலியல் அமைப்பின் மூலம் கிடைத்த வருவாய் ஆனது நிறுவனத்தின் மொத்த வருவாயில் 12% பங்களித்துள்ளது. ஏத்தர் நிறுவனம் 2026-இன் இரண்டாம் காலாண்டில் மொத்த லாபமாக ரூ.210.6 கோடியை ஈட்டியுள்ளது.

இது கடந்த ஆண்டை விட 84% அதிகமாகும். செலவினக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்தக் காலாண்டில் ஏத்தரின் EBITDA கணிசமாக மேம்பட்டுள்ளது. லாப விகிதங்கள் 2024-25ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டை விட 1,100 அடிப்படைப் புள்ளிகளுக்கும் மேலாகவும், 2025-26ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டை விட 600 அடிப்படைப் புள்ளிகளாகவும் அதிகரித்து (10%)-ஐ எட்டியுள்ளது.

ather energy 2025-26 q2 sales report

அதே நேரத்தில், ஏத்தரின் EBITDA இழப்புகள் ரூ.90.7 கோடியாகக் குறைந்துள்ளன. வரியையும் சேர்த்தால் இழப்பு ரூ.154.1 கோடி ஆகும். இந்த முன்னேற்றம், ஏத்தரின் நிதி செயல்திறன் மற்றும் விரைவான வளர்ச்சிக்கு இணையாக லாபத்தை நோக்கிய நிலையான பாதையைக் காட்டுகிறது. ஜூலை- செப்டம்பர் வரையிலான 3 மாதங்களில் ஏத்தர் நிறுவனம் விற்பனை செய்த 65 ஆயிரம் 595 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், 2024ஆம் ஆண்டின் இதே 3 மாத காலக்கட்டத்தில் ஏத்தர் விற்பனை செய்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை காட்டிலும் 67% அதிகமாகும்.

ஏனெனில், 2024-25ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 39 ஆயிரத்து 305 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே ஏத்தர் விற்பனை செய்திருந்தது. அதேபோல், கடந்த ஏப்ரல்- ஜூன் வரையிலான 2025-26ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏத்தர் விற்பனை செய்த 46 ஆயிரத்து 78 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடுகையிலும் ஏத்தர் எனர்ஜியின் விற்பனை 42% அதிகரித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தென்னிந்தியாவில் ஏத்தர் எனர்ஜி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இதன் மூலமாக, இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் 2-வீலர் நிறுவனமாக வளர்ந்துள்ள ஏத்தர் எனர்ஜியின் சந்தை பங்கு 2024-25 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 19.1% ஆக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 25% ஆக அதிகரித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 11, 2025, 22:19 [IST]
English summary
Ather energy expands national market share to 17 point 4 percent check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X