ஏத்தர் ஸ்கூட்டரில் இனி தமிழும் வரும்.. ஆங்கிலம் தெரியாதவர்களும் பயன்படுத்த ஏத்தரின் தரமான நடவடிக்கை..

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy)-யும் ஒன்றாகும். இந்த நிறுவனம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டே இயங்கி வருகின்றது. ஆனால், நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ச் சேர்ந்த நிறுவனம் ஆகும். ஆனால், நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தமிழகத்தின் ஓசூரிலேயே அமைந்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த நிறுவனம் தன்னுடைய இரண்டு சக்கர வாகனங்களில் தமிழ் மொழியைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதியை அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தமிழக மக்களைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, தமிழ் மட்டுமே தெரியும் மற்ற மொழிகள் தெரியாது என்பவர்களுக்கு இந்த தகவல் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் தமிழ் மொழியை மட்டுமல்ல இன்னும் பல மொழிகளை தன்னுடைய இரண்டு சக்கர வாகனங்களிச் சேர்த்திருக்கின்றது.

Ather introduces multi-language dashboard

அந்தவகையில், மற்ற மாநில மொழிகளான மராத்தி, குஜராத்தி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கர்நாடகா உள்ளிட்டவற்றையும் அது சேர்த்திருக்கின்றது. இந்த மொழிகளை நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான ரிஸ்தா இசட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலேயே ஏத்தர் சேர்த்திருக்கின்றது. இந்தியாவில் தாய் மொழியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

சமீபத்திய புள்ளி விபரங்களும் இதையே உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களின் சொந்த மொழியைப் பயன்படுத்தியே இடுகையை பகிர்ந்து வருகின்றனர். இந்த மாதிரியான சூழலைக் கருத்தில் கொண்டே ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் குறிப்பிட்ட முக்கிய மொழிகளை இரண்டு சக்கர வாகனத்தில் சேர்த்திருக்கின்றது.

இது அந்த மொழியை அதிகம் நேசிப்போரைக் கவரும் விதமாக அமைந்திருக்கின்றது. இந்த வசதியை ஏத்தர் ரிஸ்தா இசட் பயன்பாட்டாளர்கள் ஓடிஏ சாஃப்ட்வேர் அப்டேட் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும். நிறுவனம் ரிஸ்தா இசட் ஸ்கூட்டரில் பன்முக சிறப்பு வசதிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ஆட்டோ ஹோல்டு, வாட்ஸ்-அப் தகவலை அறியும் வசதி, லைவ் லொகேஷனை பகிரும் வசதி, அலெக்சா என ஏகப்பட்ட வசதிகளை அது வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தற்போது பன்முக மொழிகளை ரிஸ்தா இசட்-இல் சேர்த்திருக்கின்றனர். ஏத்தர் ரிஸ்தா ஓர் குடும்பங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும்.

ரிஸ்தா-வின் உயர்நிலை தேர்வே ரிஸ்தா இசட் ஆகும். ரிஸ்தா இசட்-டை இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் நம்மால் வாங்கிக் கொள்ள முடியும். ஒன்றில் 2.9 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கும், மற்றொன்றில் 3.7 kWh பேட்டரி பேக் ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது.

முதல் ஒன்று ரூ. 1.26 லட்சத்திற்கும், இரண்டாவது ஒன்று ரூ. 1.46 லட்சத்திற்கும் விற்கப்படுகின்றது. அதேவேளையில், இந்த ரிஸ்தா ஸ்கூட்டரை ரூ. 1.09 லட்சத்திற்கும் வாங்கிக் கொள்ள முடியும். ரிஸ்தா எஸ் எனும் தேர்வே இந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுவே ஆரம்ப நிலை தேர்வாகும்.

மேலும், மேலே பார்த்த அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஓர் முழு சார்ஜில் 2.9 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கைக் கொண்ட தேர்வுகள் 123 கிமீ ரேஞ்சையும், 3.7 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும் தேர்வு 159 கிமீ ரேஞ்சையும் வழங்கும் என்பது வழங்கும் கவனிக்கத்தகுந்தது.

ஆனால், மூன்றின் டாப் ஸ்பீடும் மணிக்கு 80 கிமீ மட்டுமே ஆகும். இதேபோல் சிறப்பம்சங்கள் சிலவற்றிலும் இந்த மூன்று தேர்வுகளும் ஒேரே மாதிரியாகவே இருக்கும். குறிப்பாக மூன்றிலும் 7 அங்குல திரையே வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், ரிஸ்தா இசட்-இல் டிஎஃப்டி வகை திரை வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது ஓர் குடும்பங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் என்பதால் பெரிய இருக்கை, அதிக ஸ்டோரேஜ் வசதி, பேக் ரெஸ்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மாதிரியான இ-ஸ்கூட்டரின் பக்கம் வாடிக்கையாளர்களை வளைத்துப் போடும் பணியிலேயே தற்போது ஏத்தர் எனெர்ஜி களமிறங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, January 24, 2025, 5:00 [IST]
English summary
Ather energy launches multi language dashboard for rizta z scooters tamil also available
மேலும்... #ather energy #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+