மேட்-இன்-தமிழ்நாடு ஸ்கூட்டர் தான் எல்லா நாட்டுக்கும்... ஏத்தர் கம்பெனியின் அடுத்த சிக்ஸர்!

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஏத்தர் எனர்ஜி லிமிடெட், இலங்கையில் அதன் மார்க்கெட்டை பெரிதுப்படுத்தும் வகையில் புதிய ரிஸ்டா (Rizta) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டிற்கான மோட்டார் கண்காட்சியில் ஏத்தர் ரிஸ்டா வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஏத்தரின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான எவல்யூஷன் ஆட்டோ பிரைவேட் லிமிடெட் (Evolution Auto Pvt. Ltd) நிறுவனத்துடன் இணைந்து இந்த நாட்டில் ரிஸ்டா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வெளியீடு ஆனது, பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏத்தரின் சர்வதேச வளர்ச்சி யுக்தியின் ஒரு பகுதியாகும். முக்கிய சர்வதேச சந்தைகளில் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதை அதிகப்படுத்துவதிலும், சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதிலும் ஏத்தர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. ஏத்தர் நிறுவனம் 2024 டிசம்பரில் ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உடன் இலங்கையில் நுழைந்தது.

ather rizta electric scooter in sri lanka

தற்போது, எவல்யூஷன் ஆட்டோ பிரைவேட் லிமிடெட் மூலம் 40 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் உடன், தனது இருப்பை அங்கு நிலைநிறுத்தியுள்ளது. மேலும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தும் நோக்கில், கிரிட் (Grid) ஃபாஸ்ட் சார்ஜர்களையும் இலங்கையில் ஏத்தர் நிறுவியுள்ளது. இது இலங்கையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வசதியாகவும் நம்பகத்தன்மையுடனும் பயன்படுத்த உதவுகிறது.

இந்த வெளியீடு குறித்துப் பேசிய ஏத்தர் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி திரு.ராவ்னீத் சிங் போகேலா, "கடந்த ஆண்டு இலங்கையில் நுழைந்ததில் இருந்து, இது எங்களுக்கு வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக மாறியுள்ளது. ரிஸ்டா உடன் எங்கள் தயாரிப்பு வரம்பை இங்கு விரிவுபடுத்துவது ஒரு இயல்பான அடுத்தக்கட்ட படியாகும். ரிஸ்டா இந்தியாவில் ஒரு வருடத்திற்கும் மேலாகவும், சமீபத்தில் நேபாளத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ather rizta electric scooter in sri lanka

இது இலங்கை ஓட்டுநர்களின் தேவைகளுக்கும் ஏற்றதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதன் பாதுகாப்பு மற்றும் கனெக்டெட் அம்சங்கள் தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக விளங்குகின்றன. இந்த வெளியீட்டின் மூலம், இலங்கையில் எங்கள் இருப்பை ஆழப்படுத்துவதையும், எலெக்ட்ரிக் வாகன சுற்றுச்சூழல் அமைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.

இலங்கையில் ஏத்தர் 450 வரிசைக்கு கிடைத்த நேர்மறையான வரவேற்பைத் தொடர்ந்து, ஏத்தர் இப்போது அழகான இலங்கையில் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ரிஸ்டா ஒரு பெரிய மற்றும் வசதியான இருக்கையையும், 34 லிட்டர் கொள்ளளவில் இருக்கைக்கு அடியில் சேமிப்பு இடத்தையும் வழங்குகிறது. ரிஸ்டாவின் ஃப்ளோர்போர்டு ஓட்டுநருக்கு போதுமான கால் வைக்கும் இடத்தை வழங்குகிறது.

ather rizta electric scooter in sri lanka

கூடுதலாக, ஸ்கிட் கண்ட்ரோல் (SkidControlTM) போன்ற அம்சங்களுடன் ஓட்டுநரின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படும் ஏத்தர் ரிஸ்டாவில் 7 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே டேஷ்போர்டு உள்ளது. மேலும், கூகுள் மேப்ஸ் நேவிகேஷன், மியூசிக் & மொபைல் போன் அழைப்பு கண்ட்ரோல் (ரிஸ்டா இசட் வேரியண்ட்டில் கிடைக்கும்) போன்ற அம்சங்களுடன் கனெக்டிவிட்டி அனுபவத்தை வழங்குகிறது.

ஏத்தர் தனது முதல் சர்வதேச சந்தையான நேபாளத்தில் 2023 நவம்பரில் நுழைந்தது. அங்கு 9 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களையும் 7 சேவை மையங்களையும் விரிவுபடுத்தியுள்ளது. 2024 டிசம்பரில், ஏத்தர் தனது இரண்டாவது சர்வதேச சந்தையாக இலங்கையில் நுழைந்து, தனது இருப்பை வணிக ரீதியாக விரிவுப்படுத்தியுள்ளது. 2025 செப்டம்பர் 30 நிலவரப்படி, இந்தியாவில் ஏத்தர் 524 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களையும், 3,643 ஏத்தர் கிரிட் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களையும் கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெங்களூருவில் தலைமையகத்தை கொண்டிருப்பினும், தமிழ்நாட்டின் ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்துக்கு அருகாமையில் உள்ள இலங்கைக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கொண்டு செல்வது எளிதானதாக உள்ளது. இதனாலேயே, இலங்கையில் தனது நெட்வொர்க்கை வேகமாக விரிவுப்படுத்திவரும் ஏத்தர் நிறுவனம், அதன் தொடர்ச்சியாக தற்போது குடும்ப ஸ்கூட்டர் என அழைக்கப்படும் தனது ரிஸ்டாவை இலங்கையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, November 21, 2025, 22:43 [IST]
English summary
Ather energy launches rizta electric scooter in srilanka expands its portfolio
மேலும்... #ather energy #electric scooter #srilanka
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X