இதுதான் நடக்க கூடாதுனு நெனைச்சிட்டு இருந்தோம்... இந்த வருஷத்திற்குள் ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு செம்ம லக்கு!!

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏத்தர் எனர்ஜி (Ather Energy), தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடல்களின் விலையை உயர்த்தவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த விலை ஆனது வருகிற 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. ஸ்கூட்டர் மாடல்களுக்கு ஏற்ப ரூ.3,000 வரை விலை அதிகரிக்கப்படும் என்று ஏத்தர் எனர்ஜி தெரிவித்துள்ளது.

உலக அளவில் மூலப்பொருட்கள், அந்நிய செலாவணி மற்றும் முக்கிய எலெக்ட்ரானிக் பாகங்களின் விலை அதிகரிப்பே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என ஏத்தர் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. எனவே, தற்போது ஏத்தர் ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு, விலை உயர்வுக்கு முன்னதாக தற்போதைய விலையில் வாங்குவதற்கு இந்த டிசம்பர் மாதம் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

ather electric scooters prices hike

அதுமட்டுமின்றி, ஏத்தரின் 'எலெக்ட்ரிக் டிசம்பர்' (Electric December) சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள் கூடுதல் பலன்களைப் பெறலாம். குறிப்பிட்ட நகரங்களில் ரூ.20,000 வரையிலான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் உடனடி கிரெடிட் கார்டு EMI தள்ளுபடிகள், ரொக்க ஊக்கத்தொகைகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு 8 ஆண்டு நீட்டிக்கப்பட்ட பேட்டரி உத்தரவாதம் (Eight70TM) ஆகியவை அடங்கும்.

மூன்றாவது ஆண்டாக நடைபெறும் 'எலெக்ட்ரிக் டிசம்பர்' சலுகை, ஆண்டு இறுதி விற்பனை காலங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு நீண்டகால மதிப்பை வழங்குவதற்கான ஏத்தரின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. தொடர்ச்சியான ஹார்டுவேர்-மென்பொருள் ஒருங்கிணைப்பு மற்றும் நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய சேவையின் மூலம் இது சாத்தியமாகிறது.

ather electric scooters prices hike

ஏத்தரின் தற்போதைய தயாரிப்பு வரிசையில், செயல்திறன் மிக்க ஏத்தர் 450 ஸ்கூட்டர்களும், ஏத்தரின் முதல் குடும்ப ஸ்கூட்டரான ரிஸ்டா (Rizta)-வும் அடங்குகின்றன. 450 சீரிஸ் ஸ்கூட்டர்கள் மல்டி-மோட் டிராக்‌ஷன் கன்ட்ரோல், மேஜிக்ட்விஸ்ட் (MagicTwistTM) போன்ற அம்சங்களுடன், கூகுள் மேப்ஸ் நேவிகேஷன், டேஷ்போர்டில் வாட்ஸ்அப் மற்றும் மொபைல் போன் அழைப்பு/மியூசிக் கண்ட்ரோல் போன்ற கனெக்டட் அம்சங்களையும் கொண்டுள்ளன.

ரிஸ்டா, புதிய வெளிநாட்டு சந்தைகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இது சமீபத்தில் 2 லட்சம் விற்பனை மைல்கல்லைக் கடந்து, ஏத்தரின் விரிவாக்கத்திலும், சில்லறை விற்பனை நெட்வொர்க்கை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளது. இது வசதிக்கும் நடைமுறை பயன்பாட்டிற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ather electric scooters prices hike

ரிஸ்டா ஸ்கூட்டர் 56 லிட்டர் ஸ்டோரேஜ் இடவசதிகளை வழங்குகிறது. அதன்படி, இருக்கைக்கு அடியில் 34 லிட்டரும், ஹேண்டில்பாருக்கு கீழே 22 லிட்டர் ஃபிரங்க் பகுதியும் இதில் அடங்கும். அகலமான இருக்கை மற்றும் விசாலமான ஃபுட்போர்டு குடும்பப் பயன்பாட்டிற்கு மிகவும் பொருத்தமானதாக அமைகிறது.

மேலும், ஸ்கிட் கன்ட்ரோல் (SkidControlTM), ஸ்கூட்டர் ஒருபக்கமாக சாய்வதற்கான பாதுகாப்பு (Fall SafeTM), அவசரகால நிறுத்தத்திற்கான சிக்னல் (ESS), திருட்டு & ஸ்கூட்டர் இழுத்துச் செல்லப்படுகிறது என்பதற்கான எச்சரிக்கைகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளன. ஏத்தர் கம்யூனிட்டி டே 2025 அன்று, ரிஸ்டா இசட் ஸ்கூட்டருக்கு டச் ஸ்கிரீன் வசதியுடன் கூடிய பெரிய அப்கிரேட் அறிவிக்கப்பட்டது. ஏத்தர் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் தவிர, அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் வழியாகவும் ஏத்தர் ஸ்கூட்டர்களை வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம், இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமாக விளங்குகிறது. மேலும் ஏற்கனவே கூறியதுபோல், நேபாளம், இலங்கை போன்ற இந்தியாவிற்கு அருகே உள்ள மற்ற நாடுகளிலும் ஏத்தர் தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி உள்ளது. இத்தகைய நிறுவனம் வருகிற ஜனவரி 1 முதல் விலை அதிகரிப்பை கொண்டுவருவது இதன் விற்பனையை குறைக்கும் என்றாலும், இதனை சமாளிக்கும் விதமாக ஜனவரியில் சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 23, 2025, 10:49 [IST]
English summary
Ather energy to hike prices of its electric scooters from 1st january 2026 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X