டிவிஎஸ், பஜாஜிற்கு எமனாக மாறிய புது ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் கண்ண மூடிட்டு வாங்கறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் (Electric Scooters) ஒன்று ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta). கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 20 மாதங்கள்தான் ஆகின்றன.

ஆனால் அதற்குள்ளாகவே 2 லட்சம் ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக ஏத்தர் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 20 மாதங்களில் 2 லட்சம் ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது என்பது மிகவும் பிரம்மாண்டமான ஒரு விற்பனை மைல்கல் (Sales Milestone) என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

Ather Rizta

1 லட்சம் ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை என்ற மைல்கல் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம்தான் கடக்கப்பட்டது. ஆனால் அதற்குள்ளாகவே தற்போது 2 லட்சம் ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை என்ற மைல்கல் கடக்கப்பட்டுள்ளது. ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை மிக வேகமாக உயர்ந்து வருவதை இது மிகவும் தெளிவாக எடுத்து காட்டுகிறது.

ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போதைய நிலையில் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை ஏத்தர் ரிஸ்டா எஸ் (Ather Rizta S) மற்றும் ஏத்தர் ரிஸ்டா இஸட் (Ather Rizta Z) ஆகியவை ஆகும். இவற்றின் ரைடிங் ரேஞ்ச் (Riding Range) 123 கிலோ மீட்டர்கள் மற்றும் 159 கிலோ மீட்டர்களாக உள்ளது.

Ather Rizta EV

இதில், ஏத்தர் ரிஸ்டா எஸ் வேரியண்ட்டின் ஆரம்ப விலை 1.05 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் ஏத்தர் ரிஸ்டா இஸட் வேரியண்ட்டின் ஆரம்ப விலை 1.30 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே ஏத்தர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 56 லிட்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் வழங்கப்படுகிறது. இதில் 34 லிட்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருக்கைக்கு அடியிலும், 22 லிட்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் முன் பக்க ஃப்ரங்க் பகுதியிலும் வழங்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களது பொருட்களை வைத்து கொள்ள இந்த இடவசதி பெரிதும் உதவி செய்கிறது.

ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 2 வேரியண்ட்களுக்கும் 8 ஆண்டுகள் வரை பேட்டரி வாரண்டி வழங்கப்படுகிறது. சிறப்பான ரைடிங் ரேஞ்ச் மற்றும் சரியான விலை நிர்ணயம் போன்ற காரணங்களால்தான் ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் மிகவும் வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro), டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube) மற்றும் பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு எல்லாம் ஏத்தர் ரிஸ்டா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Thursday, December 11, 2025, 18:40 [IST]
English summary
Ather rizta 2 lakh sales milestone check all details here
மேலும்... #ather energy #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+