2 லட்சம் பேர் இந்த வண்டியை நம்பி வாங்கிட்டாங்க! தரமான வண்டினா காசு பார்க்கமா வாங்கிடுவாங்க!
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ரிஸ்டா என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 2 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளததாக தற்போது தெரிவித்துள்ளது. இது சாதவனை எப்படி நிகழ்ந்தது? 2 லட்சம் பேர் வாங்கும் அளவிற்கு இந்த வாகனத்தில் என்ன இருக்கிறது? விரிவாக காணலாம் வாருங்கள்.
ஏத்தர் நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற வாகனமாக ரிஸ்டா என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.இந்த வாகனம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதிக பொருட்களை எடுத்து செல்ல முடியும். குடும்பத்துடன் பயணிக்க முடியும் என்பதால் பலர் இந்த வாகனத்தை விரும்பி வாங்கினர்.

ஏத்தர் நிறுவனம் 450 சிரீஸில் ஸ்போர்ட்டி லுக் உடன் வாகனத்தை களம் இறக்கியது. அதற்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் குடும்பத்துடன் பயணிக்க அது ஏற்றதாக இல்லை. இதை கருத்தி கொண்டு குடும்பத்துடன் பயணிக்கும் ரக வாகனங்களை விரும்புபவர்களுகு்கு ஏற்றவாறு ரிஸ்டா என்ற வாகனத்தை கொண்டு வந்தது. இந்த வாகனம் நல்ல வேற்றீப்பை பெற்றளு்ளது.
தற்போது ஏத்தர் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 70 சதவீதம் ரிஸ்டா வாகனம் தான் உள்ளது. இது மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் விற்பனையை இரு மடங்காக்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 8 சதவீதமாக இருந்த மார்கெட் பங்கு 15 சதவீதமாக உயர்ந்துள்ளது. உ.பி மாநிலத்தில் 4 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏத்தர் நிறுவனம் சமீபத்தில் தான் 5 லட்சம் எலெக்டரிக் ஸ்கூட்டர் என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ளது.

இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் உள்ள தகவலின்படி இந்தியா முழுவதும் 524 விற்பனவை மையங்களை நடத்தி வருகிறது. இதன் மூலம் சிறப்பாக விற்பனை நடக்கிறது. ரிஸ்டா ஸ்கூட்டரை பொருத்தவரை ரிஸ்டா எஸ் மற்றும் ரிஸ்டா இசட் என்ற வேரியன்ட்கள் உள்ளன. ரிஸ்டா எஸ் 123 கி.மீ ரேஞ்சையும், ரிஸ்டா இசட் 159 கி.மீ ரேஞ்சையும் வழங்குகிறுது.
இந்த ஸ்கூட்டரில் 56லிட்டர் ஸ்டோரேஜ் அளவு இருக்கிறது. இதில் 34 லிட்டர் சீட்டிற்கு அடியில் ஸ்டேரேஜ் அவும், 22 லிட்டர் முன்பக்கமும் ஸ்டோரேஜ் வசதி இரக்கிறது. கார் வைக்கவும் அல்ல இட வசதி இருக்கிறத. இது போக பாதுகாப்பிற்காக ஸ்கிட் கண்டரோல் உள்ளது. இது போக ஃபாஸ் சேஃப், எமர்ஃஜென்ஸி ஸ்டாப் சிக்னல், தெஃப்ட் டோ அலர்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.
ஏத்தர் 450 சிரீஸ் வாகனம் உருவாக்கிய நற்பெயரை இந்த ரிஸ்டா மேலும் மேம்படுத்தி அறுவடை செய்கிறது என்றே சொல்லலாம். இந்த வாகனம் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் வரும் காலங்களில் இதில் பல புதிய வேரியன்ட்களையும், அதே நேரம் புதிய அப்டேட்களையும் ்ந்நிறுவனம் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏத்தர் நிறுவனம் குடும்பத்துடன் பயணிக்க குறைந்த விலையில் வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தினாலும் ஆச்சரியப்பட ஒன்று இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தரமான ஸ்கூட்டர்களை தயாரித்து ஏத்தர் நிறுவனம் சிறப்பாக வளர்ச்சியடைந்து வருகிறுது. இந்நிறுவனம் சிறப்பான தயாரிப்பை வெளியிட்டுள்ளது. இது நிச்சயம் மிகப்பெரிய அளவில் அந்நிறுவனத்திற்கு உதவியாக இருக்கப்போகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








