இவ்ளோ கம்மியான விலையில் 130 கிமீ ஓடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா! எதோ செல்போன் வாங்கற மாதிரி ஆளாளுக்கு வாங்கறாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் (Electric Scooters) ஒன்று ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta). கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இதன் டெலிவரி பணிகள் 2024ம் ஆண்டு ஜூலை மாதம்தான் தொடங்கப்பட்டன.
அதாவது ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டு இன்னும் ஒரு வருடம் கூட முடியவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே 1 லட்சம் ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி விட்டன. இந்த பிரம்மாண்டமான விற்பனை மைல்கல்லை (Sales Milestone) ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த மே மாதம் எட்டியுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஒட்டுமொத்தமாக 99,691 ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. எஞ்சிய 309 ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் டெலிவரி செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் 1 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மிக பிரம்மாண்டமான விற்பனை மைல்கல்லை ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்துள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்படும் ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாக ரிஸ்டா மாறியுள்ளது.

ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குடும்பங்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இருக்கைக்கு அடியில், பொருட்களை வைத்து கொள்வதற்கு ஏதுவாக, 34 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன.
அவை 2.9 kWh மற்றும் 3.7 kWh ஆகியவை ஆகும். இதில், 2.9 kWh பேட்டரியின் ரேஞ்ச் 105 கிலோ மீட்டர்கள் ஆகும். அதே நேரத்தில் 3.7 kWh பேட்டரியின் ரேஞ்ச் 127 கிலோ மீட்டர்கள் ஆகும். தற்போதைய நிலையில் ஏத்தர் ரிஸ்டாவின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 1.11 லட்ச ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டின் விலை 1.52 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதுகின்றனர். இதன் காரணமாகவே அதன் விற்பனை எண்ணிக்கை பிரம்மாண்டமாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro), டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube), விடா வி1 (Vida V1) மற்றும் பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு எல்லாம், ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








