பணத்தை தண்ணி போல் செலவு செய்யாமல் வாங்கக்கூடிய இ-ஸ்கூட்டர்! 1 லட்சம் பேரது நம்பிக்கையில்!

ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனத்தில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter), ரிஸ்டா (Rizta) ஆகும். 2020ஆம் ஆண்டில் இருந்து '450' என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்துவந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் குறைந்த விலையில் அனைவரும் வாங்கக்கூடிய வகையிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் முயற்சியாக ரிஸ்டாவை கொண்டுவந்தது. இந்த நிலையில், ரிஸ்டா ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

உலகின் மற்ற நாடுகளை போன்று இந்தியாவிலும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நம் நாட்டில் கடந்த சில வருடங்களில் அதிக தேவை உருவாகியுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியாக மார்க்கெட்டில் பல புதிய இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தோன்றியுள்ளன.

rizta electric scooters sales

அதேநேரம், ஏத்தர் எனர்ஜி போன்ற செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கிவந்த நிறுவனங்களும் குறைந்த விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்க தயாராகின. இந்த வகையில், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிமுகம் செய்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தான், ரிஸ்டா ஆகும். 2024 ஏப்ரல் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஏத்தர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரிகள் கடந்த ஆண்டு ஜூலையில் இருந்து துவங்கப்பட்டன.

இந்த வகையில் பார்த்தால், டெலிவிரிகள் துவங்கப்பட்டு இன்னும் 1 வருடம் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையில் 1 லட்சம் என்கிற இமாலய மைல்கல்லை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலையில் இருந்து கடந்த 2025 மார்ச் மாதம் வரையில் 89 ஆயிரத்து 639 ரிஸ்டா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

rizta electric scooters sales

அதனை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் 10 ஆயிரத்து 52 ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏத்தர் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த வகையில் பார்த்தால், கடந்த ஏப்ரல் மாதம் வரையில் மொத்தமாக 99 ஆயிரத்து 691 ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, 1 லட்சத்திற்கு வெறும் 309 ஸ்கூட்டர்கள் மட்டுமே குறைவாகும்.

ஆனால், இந்த 309 ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கடந்த 2025 மே மாதத்தின் முதல் சில நாட்களிலேயே விற்பனை செய்யப்பட்டு இருக்கும். அதாவது, கடந்த மே மாதத்தின் துவக்கத்திலேயே ரிஸ்டாவின் விற்பனையில் 1 லட்சம் என்கிற மைல்கல்லை ஏத்தர் நிறுவனம் கடந்திருக்கும். ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஒட்டுமொத்தமாக கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2025 மார்ச் மாத வரையில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 205 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.

இதில், 89 ஆயிரத்து 639 ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடங்குகின்றன என்பதில் இருந்து ஏத்தர் நிறுவனத்தின் விற்பனையில் ரிஸ்டாவின் பங்களிப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறியலாம். அதாவது, கடந்த 2024-25 நிதியாண்டில் ஏத்தர் எனர்ஜியின் விற்பனையில் 58 சதவீத பங்களிப்பை ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுள்ளது.

ரிஸ்டாவுக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 450எக்ஸ் ஆகும். கடந்த 2024 ஏப்ரல்- 2025 மார்ச் வரையில் 44 ஆயிரத்து 391 ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 18 ஆயிரத்து 999 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை இல்லாமல், 2,376 ஏத்தர் 450 அபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் இந்த 1 வருடத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விபரங்கள் அனைத்தையும் இந்திய ஆட்டோமொபைல் வாகன உற்பத்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் இருந்து, ஏத்தர் எனர்ஜி நிறுவனத்திற்கு எந்த அளவிற்கு ரிஸ்டா முக்கியமான தயாரிப்பாக மாறி வருகிறது என்பதை அறியலாம். ரிஸ்டா போன்றதான புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மேலும் கொண்டுவந்தால், ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் விற்பனை மேலும் அதிகரிக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, June 2, 2025, 11:24 [IST]
English summary
Ather rizta electric scooters sales crossed 1 lakh units in just 10 months
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+