இவ்ளோ கம்மியான விலையில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா! ஒரு டைம் சார்ஜ் பண்ணா கோவைல இருந்து சேலம் போயிரலாம்!

இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்று ஏத்தர் (Ather). இதற்கு ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

ஏனெனில் இதுதான் ஏத்தர் நிறுவனம் விற்பனை செய்வதிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Most Affordable Ather Electric Scooter) ஆகும். தற்போதைய நிலையில் ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Ather Rizta

இதில், S வேரியண்ட்டின் ஆரம்ப விலை வெறும் 1,04,999 ரூபாயாக மட்டுமே உள்ளது. மறுபக்கம் Z வேரியண்ட்டின் ஆரம்ப விலை 1,30,447 ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே ஏத்தர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரைடிங் ரேஞ்ச் (Riding Range) அதிகபட்சமாக 159 கிலோ மீட்டர்களாக உள்ளது (இது கிட்டத்தட்ட சேலம்-கோவை இடையேயான தொலைவு ஆகும்). அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிலோ மீட்டர்களாக உள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை, ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், வெறும் 4.7 வினாடிகளிலேயே எட்டி விடும்.

Ather Rizta EV

ஏத்தர் க்ரிட் மூலம் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்தால், வெறும் 10 நிமிடங்களில், 30 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யும் அளவிற்கு, பேட்டரியை நிரப்பி விட முடியும். நாங்கள் இங்கே கூறியுள்ள ரைடிங் ரேஞ்ச், டாப் ஸ்பீடு, ஆக்ஸலரேஷன், மற்றும் சார்ஜ் செய்வதற்கான நேரம் ஆகியவை எல்லாம் 2 வேரியண்ட்களுக்கும் பொதுவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற சிறப்பம்சங்கள் காரணமாக, ஒவ்வொரு மாதமும் ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல. ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின், நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 18,919 ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து ஏத்தர் நிறுவனம் அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், வெறும் 9,867 ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 9,052 ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் 91.74 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில் (Top 10 Scooters September 2025), ஏத்தர் ரிஸ்டா 10வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 9 இடங்களில் முறையே ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜூபிடர், சுஸூகி ஆக்ஸஸ், டிவிஎஸ் என்டார்க், டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், சுஸுகி பர்க்மேன், யமஹா ரேஇஸட்ஆர் மற்றும் ஹோண்டா டியோ ஆகியவை உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உலகத்தரம் வாய்ந்தவை. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை மிகவும் குறைவான விலையில் வாங்க விரும்பினால், உங்களுக்கு ரிஸ்டா மிகவும் சரியான ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 29, 2025, 18:40 [IST]
English summary
Ather rizta sales report september 2025 91 74 per cent growth
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+