பைக்குல போகும் போதே கிரிக்கெட் ஸ்கோர் பார்க்கலாம்! ஏத்தரில் வந்தது சிறந்த அப்டேட்!

ஏத்தர் நிறுவனத்தின் கம்யூனிட்டி தினம் இன்று கொண்டாடப்பட்டது. அப்பொழுது அந்நிறுவனம் தனது ஏத்தர் ஸ்டாக் 7 என் அப்டேட்டை வழங்கியுள்ளது. இதில் பல்வேறு அப்டேட்கள் கொண்டு வரப்பட்டள்ளன. முக்கியமாக வாய்ஸ் மூலம் கண்ட்ரோல் செய்வது, சாலைகளில் குழிகள் இருப்பதற்கான அலார்ட் , கிரிக்கெட் ஸ்கோர் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது ஸ்டாக் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் ஸ்டாக் 7 அப்டேட்டை இன்று ஏத்தர் கம்யூனிட்டி தினத்தில் வழங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் புதிய பிளாட்ஃபார்ம், கான்செப்ட் ஸ்கூட்டர், அப்டேட் செய்யப்பட்ட ஹாலோ ஹெல்மெட், ஏத்தர் ஸ்டாக் அப்டேட்டை வழங்கியது.

Ather Stack 7

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இதுவரை 4.5 லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர்கள் எல்லாம் சேர்ந்து இதுவரை 760 கோடி கி.மீகள் இந்திய சாலைகள் பயணித்துள்ளன. இந்த தரவுகளை வைத்து ஏத்தர் நிறுவனம் சாலைகளில் உள்ள குழிகளை கண்காணிக்த்து அலர்ட் செய்யும் தொழிற்நுட்பத்ை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்கும் போது குண்டும் குழியுமான சாலைகள் இருந்தால் அதை முன்னரே வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இது ஏத்தர் ஹாலோ ஹெல்மூலம் சாத்தியமாகிறது. இந்த ஹெல்மெட்டை அணிந்து செல்லும் போது மேடுபள்ளம் நிறைந்த சாலை இருப்பதால் கவனமாக செல்லும் படி எச்சரிக்கை விடுருக்கும்.

Ather Stack 7

இந்த குண்டும் குழியுமான சாலை தரவுகள் பெங்களூரு, டில்லி, மும்பை, புனே, மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் உள்ள சாலைகளின் தரவுகளை மட்டுமே பெற்றுள்ளது. இது மட்டுமல்ல நீங்கள் மேப் மூலம் செல்ல வேண்டிய இடத்தை தேடும் போது உங்களுக்கு குண்டு குழிகள் இல்லாத அல்லது குறைவாக இருக்கும் சாலைகளை தேர்வு செய்யும் வாய்ப்பையும் இது வழங்குகிறது.

ஏத்தர் ஸ்டாக் 7 அப்டேட்டில் கிராஷ் டிடெக்ஷன் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் வாகனத்தில் பயணிக்கும் போது வாகனம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினவிட்டால் வாகனத்தின் லைவ் லோக்கேஷன் மற்றும் நோட்டிஃபிகேஷன் முன்னரே பதிவு செய்த 3 நபர்களுக்கு சென்றுவிடும்.

Ather Stack 7

அடுத்தாக இந்த அப்டேட்டில் பார்க்கிங் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஏத்தர் ஸ்கூட்டர் நிறுத்தப்பட்டு அது போலீசாரால் எடுத்து செல்பட்ட தகவல்களை வைத்து ரைடர்களுக்கு குறிப்பிட்ட இடத்தில் வாகனத்தை பார்க்கிங் செய்யக்கூடாது என முன்னரே எச்சரிக்கும் வகையில் புதிய அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்தாக திருட்டை தடுக்கும் அம்சம் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளுது.

ஏத்தர் ஏனர்ஜி நிறுவனம் லாக் சேஃப் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வாகனம் திருடப்படுவது கண்டறியப்பட்டால் இது குறித்து வாகனத்தின் உரிமையாளருக்கு மெசேஜ் செல்லும். வாகனத்தின் உரிமையாளர் . உடனே வாகனம் செயல்படாமல் நிறத்திவிட முடியும். இதை அவர் தனது கையில் உள்ள செல்போன் மூலமே செய்துவிட முடியும். இது சாவியை ஓவர் ரைடு செய்து வாகனத்தை கண்ட்ரோல் செய்யும்.

ஏத்தர் ஸ்டாக் 7 அப்டேட்டில் வாகனத்தின் சார்ஜிங்கை செல்போன் ஆப் மூலமே ஆப் செய்யும் ஆப்ஷனும் கொண்டு வரப்படுகிறது. வாகன உரிமையாளர் எழுந்து சென்று சார்ஜிங்கை ஆஃப் செய்து பிளக்கை உருவ வேண்டிய கட்டாயம் கிடையாது. அதே நேரம் செல்போன் ஆப் மூலமே வாகனத்தை ஷட் டவுண் செய்யவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போக முக்கிய அப்டேட்டாக இந்த ஏத்தர் ஸ்டாக் 7 அப்டேட்டில் ரியல் டைமில் டேஷ் போர்டில் கிரிக்கெட் ஸ்கோர்கள் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓடிக்கொண்டிருக்கும் போது கீழ்பக்கம் ஒரு முக்கில் முக்கிய தகவல் மட்டுமே காட்டப்படும். வாகனம் பார்க் செய்யப்படும் போது மட்டுமே முழு ஸ்கிரீனில் ஸ்கோரை பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஏத்தர் ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் இந்த ஸ்டாக் 7 அப்டேட் மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அப்டேட்டாக உள்ளது. பாதுகாப்பு அம்சங்கள், வசதிகள், பொழுதுபோக்கு என பல அப்டேட்கள் வந்துள்ளது. இது பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 30, 2025, 22:20 [IST]
English summary
Ather stack 7 voice pothole cricket alerts new features
மேலும்... #ather energy #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X