பஜாஜும் விலை குறைப்பை அறிவிச்சிடுச்சு! எந்த அளவுக்கு 2-வீலர் விலை குறைய போகுது?

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று. புனேவில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், அதன் 2-வீலர்களின் விலைகளை குறைக்க போவதாக அறிவித்துள்ளது. மத்திய அரசு ஜிஎஸ்டியில் கொண்டுவரும் மாற்றங்களை தொடர்ந்து இந்த நடவடிக்கையை பஜாஜ் கையில் எடுக்கிறது.

உலகின் முன்னணி இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ லிமிடெட், அண்மையில் ஜிஎஸ்டி வரியில் செய்யப்பட்ட குறைப்பின் முழுப் பலனையும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பஜாஜ் மற்றும் கேடிஎம் (KTM) மோட்டார்சைக்கிள்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் குறிப்பிட்ட மாடல்களுக்கு இந்தக் குறைப்பு பொருந்தும்.

bajaj full gst reduction benefits

வருகிற செப்டம்பர் 22 முதல் அரசின் இந்த ஜிஎஸ்டி திருத்த நடவடிக்கை அமலுக்கு வருவதால், நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்களில் வாகனங்களின் விலை குறைக்கப்பட்டு வருகிறது. பண்டிகைக் காலம் நெருங்கும் வேளையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தக் குறைப்பு, கோடிக்கணக்கான குடும்பங்கள், தினசரி பயணர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களுக்கு கணிசமான பணத்தைச் சேமிக்க உதவும்.

மலிவான, திறமையான மற்றும் நம்பகமான போக்குவரத்துத் தீர்வுகளைச் சார்ந்துள்ளவர்களுக்கு இது ஒரு பெரிய பலனைத் தரும். ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பெரிதும் பாராட்டுகிறது. இது கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு போக்குவரத்தை மேலும் மலிவாகவும், எளிதாகவும் அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலம் நேரடியாகப் பலனளிக்கிறது.

bajaj full gst reduction benefits

ஜிஎஸ்டி குறைப்பு குறித்து பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ஷர்மா கருத்துத் தெரிவிக்கையில், "பெரும்பாலான இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்கும் அரசின் முடிவு ஒரு துணிச்சலான நடவடிக்கை. இது அவற்றின் தேவையை அதிகரிக்கும் மற்றும் தொழில்துறையை ஒரு உறுதியான வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும்.

கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் மேம்படுத்தும் இந்த முயற்சிக்கு இந்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனப் போக்குவரத்து மக்களின் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பாகவும், பல குடும்பங்களின் கனவுகளை நிறைவேற்றுவதாகவும் உள்ளது. பண்டிகைக் காலம் தொடங்கும் வேளையில், எங்கள் வாகனங்களை மேலும் மலிவாக்குவதன் மூலம் இந்த முயற்சிக்கு ஆதரவளிப்பதில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது.

bajaj full gst reduction benefits

சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சீர்திருத்தம் நிச்சயமாக நுகர்வோர் மனநிலையை உயர்த்தி, பண்டிகை உற்சாகத்தை அதிகரிக்கும்!" என்றார். இந்த முயற்சியின் மூலம், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் போக்குவரத்து வசதியை எளிதாக்குவதிலும், அதே நேரத்தில் பண்டிகைக் கால மகிழ்ச்சி நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கும் வணிகங்களுக்கும் எதிர்பார்த்ததை விட விரைவாக சென்றடைவதை உறுதி செய்வதிலும் தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி சீர்திருத்தத்தினால், பஜாஜ் ஆட்டோவின் இருசக்கர வாகனங்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.20,000 வரையிலும், மூன்று-சக்கர வாகனங்களின் விலைகள் ரூ.24,000 வரையிலும் குறைக்கப்பட உள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், இந்த விலை குறைப்பானது பஜாஜ் 2-வீலர்களுக்கு மட்டுமின்றி, பஜாஜ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கேடிஎம் பைக்குகளுக்கும் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகை காலம் நெருங்கி வருவதால், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிவித்துள்ள இந்த விலை குறைப்புகள் அதன் விற்பனையை பெரிதும் அதிகப்படுத்தலாம். இதே போன்று மற்ற 2-வீலர் நிறுவனங்களும் விலை குறைப்பை அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், வரும் மாதங்களில் புதியதாக 2-வீலர்களை பலர் வாங்குவதை அதிகமாக பார்க்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 10, 2025, 10:48 [IST]
English summary
Bajaj auto announced full gst reduction benefits to customer by price cut
மேலும்... #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X