பல்சர் பைக்கை வாங்க என்றே ஒரு கூட்டம் இருக்குது! அவங்க தான் மொத டார்க்கெட்டே!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவின் முன்னணி ஆட்டோ நிறுவனங்களுள் ஒன்று. புனேவில் தொழிற்சாலை அமைத்து செயல்படும் பஜாஜ் நிறுவனத்தின் அடையாளமாக இருப்பது, பல்சர் (Pulsar) பைக்குகள் ஆகும். இன்னும் சொல்லப்போனால், பஜாஜ் நிறுவனத்தை தெரியாதவர்கள் கூட இருப்பர். ஆனால், பஜாஜ் நிறுவனத்தை தெரியாதவர்கள் கூட இருப்பர். ஆனால், பல்சர் பைக்குகளை பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டர் என்கிற அளவிற்கு நாடு முழுவதும் பல்சர் பைக்குகளுக்கு பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் உள்ளது. இதனாலேயே, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது புது, புது பல்சர் பைக்குகளை அறிமுகம் செய்வதை பஜாஜ் நிறுவனம் மறப்பதில்லை.
இதன் காரணமாகவே, தற்சமயம் 125சிசி-இல் இருந்து 400சிசி வரையிலான என்ஜின்கள் உடன் பல்சர் பைக்குகள் விற்பனையில் உள்ளன. புதிய பல்சர் பைக்குகளை அறிமுகம் செய்வதுடன், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பல்சர் பைக்குகளையும் தவறாமல் அவ்வப்போது பஜாஜ் நிறுவனம் மேம்படுத்தி அறிமுகம் செய்துவிடுகிறது.

அந்த வகையில் தற்போது 2025 பல்சர் என்.எஸ்160 பைக் புதிய அப்டேட்கள் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பல்சர் என்.எஸ்160 பைக்க்கில் முக்கிய அம்சமாக ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, சாலை, மழை மற்றும் ஆஃப்-ரோடு என 3 விதமான ரைடிங் மோட்களை இந்த பைக்கில் பெறலாம்.
விற்பனையில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி (TVS Apache RTR160 4V) மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் (Hero Xtreme 160R) உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக விளங்கும் பல்சர் என்.எஸ்160 பைக்கின் புதிய வெர்சனில் சிறந்த செயல்படுதிறனை பெறலாம். இதன் மூலமாக எந்தவொரு சாலைக்கு கொண்டு செல்லக்கூடியதாக பல்சர் என்.எஸ்160 பைக் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய பைக்கில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரைடிங் மோட்கள் அதற்கேற்ப பைக்கின் ஏபிஎஸ் (ABS) சிஸ்டத்தை மாற்றும். புதிய 3 ரைடிங் மோட்களில் சாலை மோட் ஆனது ஸ்டாண்டர்ட்டான ஏபிஎஸ் உடன் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றதாக உள்ளது. அதுவே, மழை மோட் ஆனது மழைக்காலத்தில் ஈரமான சாலைகளில் பைக்கை கொண்டு செல்வதற்கு ஏற்றதாக இருக்கும்.
கடைசி ரைடிங் மோட் ஆன ஆஃப்-ரோடு மோட்-இல் பின் சக்கரத்தில் ஏபிஎஸ்-இன் தலையீடு குறைவாக இருக்கும். இதனால், கரடு, முரடான மற்றும் சகதி மிகுந்த பாதைகளில் பைக்கை கொண்டு செல்லும்போது கூடுதல் கண்ட்ரோல் கிடைக்கும். 160சிசி பைக்குகளுக்கு ரைடிங் மோட்கள் பெரியதாக அவசியம் இல்லாதது போல் தோன்றலாம். ஆனால், இது நிச்சயமாக இளம் தலைமுறையினரை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கில் கூட ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன. புதிய பல்சர் என்.எஸ்160 பைக்கில் மற்ற அம்சங்களாக டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், பெட்ரோலின் அளவீடு, கியர் பொசிஷன் இண்டிகேட்டர், சராசரியான மைலேஜ் அளவீடு மற்றும் ரியல்-டைமில் பயன்படுத்தப்படும் எரிபொருளின் உள்ளிட்ட விபரங்களை வழங்கக்கூடிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது.
அத்துடன், பைக்கை ப்ளூடூத் உடன் இணைப்பதன் மூலம் மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை கண்ட்ரோல் செய்யலாம். இவற்றுடன், யுஎஸ்பி மொபைல் சார்ஜிங் வசதியும் பல்சர் என்.எஸ்160 பைக்கில் வழங்கப்படுகிறது. இவை எல்லாமே ஏற்கனவே பல்சர் என்.எஸ்160 பைக்கில் வழங்கப்படுபவை ஆகும். புதியதாக ரைடிங் மோட்களை தவிர்த்து பைக்கின் மெக்கானிக்கல் பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்றைய கால மாடர்ன் பைக்குகளில் ரைடிங் மோட்கள் சாதாரணமாகி விட்டன. இதனாலேயே இப்போது உள்ள இளம் தலைமுறையினர் பைக் வாங்க முற்பட்டாலே அவற்றில் ரைடிங் மோட்கள் உள்ளிட்டவை உள்ளனவா என்பதை முக்கியமாக பார்க்கின்றன. இதன் காரணமாகவே, பஜாஜ், டிவிஎஸ் நிறுவனம் உள்ளிட்டவை எல்லாம் தங்களது விலை குறைவான பைக்குகளில் கூட ரைடிங் மோட்களை வழங்குகின்றன.


Click it and Unblock the Notifications









