இந்த வசதி இல்லாம பைக் வாங்காதீங்க! பஜாஜ்-க்கு இப்போ தான் புரிஞ்சிருக்கு... பல்சர் பைக்கை இனி நம்பி வாங்கலாம்
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று. பஜாஜின் அடையாளமே அதன் பல்சர் (Pulsar) பைக்குகள் எனலாம். இதனாலேயே அவ்வப்போது புது, புது பல்சர் பைக்குகளை அறிமுகம் செய்ய பஜாஜ் மறப்பது இல்லை. அந்த வகையில், பல்சர் என்.எஸ்125 (NS125) பைக்கில் புதியதாக ஏபிஎஸ் (ABS) வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பல்சர் என்.எஸ்125 பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் பல்சர் பைக்கை வாங்க விரும்பும் கஸ்டமர்களுக்காக, குறிப்பாக இளம் தலைமுறையினருக்காக கடந்த சில வருடங்களுக்கு முன் பஜாஜ் அறிமுகம் செய்த மாடல் தான், பல்சர் என்.எஸ்125 ஆகும். அதற்கு முன்பு வரையில் என்.எஸ்200 மட்டுமே விற்பனையில் இருந்த நிலையில், என்.எஸ்125 மற்றும் என்.எஸ்160 என தொடர்ச்சியாக பல்சர் என்.எஸ் பைக்குகளை அந்த சமயத்தில் பஜாஜ் அறிமுகம் செய்தது.

என்.எஸ்200 பைக்கை வாங்கும் அளவிற்கு பணம் இல்லாதவர்களுக்கு ஏற்ற பல்சர் பைக்காக என்.எஸ்125 விளங்கியது. இந்த நிலையில், இந்த பல்சர் பைக்கில் புதியதாக ஏபிஎஸ் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய என்.எஸ்125 ஏபிஎஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 453 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஏபிஎஸ் என்பதன் முழு விரிவாக்கம் ஆண்டி-பிரேக்கிங் சிஸ்டம் (Anti-braking System) ஆகும். அதாவது, விபத்து ஏற்பட போகும் நேரங்களில் நமக்கே தெரியாமல் பதற்றத்தில் நாம் கொடுக்கும் பிரேக்கை தடுப்பது இந்த சிஸ்டத்தின் வேலை ஆகும். குறிப்பாக, நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும்போது ஈரமான சாலையினால் வழுக்கிவிட நேரும்போது இந்த அட்வான்ஸ்டு பிரேக்கிங் சிஸ்டம் பெரிதும் உதவியாக இருக்கும்.

சிங்கிள்-சேனல் ஏபிஎஸ், ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் என மோட்டார்சைக்கிள்களில் 2 விதமான ஏபிஎஸ் வழங்கப்படுகின்றன. தற்போது என்.எஸ்125 பைக்கில் வழங்கப்பட்டு இருப்பது சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் ஆகும். இதற்கு முன்பு வரையில், காம்பி-பிரேகிங் சிஸ்டம் (Combi-braking System - CBS) உடன் இந்த 125சிசி பல்சர் பைக் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இனியும், இந்த பிரேக்கிங் சிஸ்டத்துடனும் என்.எஸ்125 பைக் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. சிபிஎஸ் உடன் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 453 ஆகும். என்.எஸ்125 பைக்கில் பிரேக்கிற்கு முன் சக்கரத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் 130மிமீ-இல் ட்ரம் பிரேக்கும் வழங்கப்படுகின்றன.

புதியதாக சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்டை தவிர்த்து, 2025 பல்சர் என்.எஸ்125 பைக்கில் வேறெந்த அப்டேட்டும் கொண்டுவரப்படவில்லை. இந்த பைக்கில் 124.45சிசி, ஏர்-கூல்டு, SOHC, DTS-i Ei என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 12 பிஎஸ் மற்றும் 11 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கான்ஸ்டண்ட் மெஷ் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய பல்சர் என்.எஸ்125 பைக்கில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருப்பது, நிச்சயமாக அதன் போட்டி மாடல்கள் மத்தியில் இந்த பல்சர் பைக்கின் அந்தஸ்த்தை உயர்த்தும். ஏனெனில், இதன் பிரிவில் உள்ள மற்ற 125சிசி பைக்குகளுடன் ஒப்பிடுகையில் என்.எஸ்125 பைக்கின் விற்பனை கொஞ்சம் சுமார் தான். இத்தனைக்கும், அதிகம் விற்பனையாகும் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் ஏபிஎஸ் எதுவும் இதுவரையில் வழங்கப்படுவது இல்லை.


Click it and Unblock the Notifications









