இளைஞர்களை இனி கையிலேயே பிடிக்க முடியாது... பஜாஜ் பல்சர் பைக்னு சொன்னால் நிறைய பேர் நம்ப போறது இல்ல!!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான 2-வீலர் மற்றும் 3-வீலர் நிறுவனம். பல்சர் (Pulsar) பைக்குகள் தான் பஜாஜ் நிறுவனத்தின் அடையாளம் ஆகும். ஆனால் பல்சர் ஆர்.எஸ் (RS200) பைக் மட்டும் ஏனோ மக்களை கவராமலேயே உள்ளது. பல்சர் என்.எஸ்200 (NS200) பைக் அளவிற்கு ஆர்.எஸ்200 பைக் அதிகம் விற்பனையாகுவது இல்லை என்பதுதான் உண்மை. இந்த நிலையில்தான், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய பல்சர் ஆர்.எஸ்200 பைக்கை மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முதல்முறையாக பல்சர் ஆர்.எஸ்200 பைக்கை 2015ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. ஆரம்பத்தில் ஓரளவிற்கு விற்பனையான போதிலும், சந்தையில் போட்டி அதிகமான பின்பு ஆர்.எஸ்200 பைக்கால் தாக்கப்பிடிக்க முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக, யமஹா ஆர்15 (Yamaha R15) பைக் பல்சர் ஆர்.எஸ்200 பைக்கிற்கு பெரிதும் சவாலாக விளங்கியது.

இருப்பினும், மார்க்கெட்டில் தன்னுடைய இடத்தை விட்டுவிட கூடாது என்பதற்காக ஆர்.எஸ்200 பைக்கை அவ்வப்போது பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அப்டேட் செய்து வந்தது. இந்த நிலையில், பல்சர் ஆர்.எஸ்200 பைக்கிற்கு மிக முக்கியமான அப்கிரேட் தற்போது வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆர்.எஸ்200 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 115 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆர்.எஸ்200 பைக்கின் தோற்றம் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கிராஃபிக்ஸ் (Graphics) உடன் புதிய வடிவத்திலான பின்பகுதியை பெற்றுள்ள 2025 ஆர்.எஸ்200 பைக்கில் அதற்கேற்ப ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டெயில்லேம்ப் பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பைக்கின் முன்பக்கத்திலும் எல்இடி டிஆர்எல்-கள் (LED DRLs) உடன் எல்இடி புரோஜெக்டர் ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது.

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், ஒருவழியாக ஆர்.எஸ்200 பைக்கில் ப்ளூடூத் வசதியை பஜாஜ் நிறுவனம் வழங்கியுள்ளது. ப்ளூடூத் வசதி மூலமாக, மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை பைக்கின் ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்பட்டுள்ள எல்சிடி திரையின் வாயிலாக கண்ட்ரோல் செய்வது மட்டுமின்றி, பயணத்திற்கான வழிக்காட்டுதலையும் பெறலாம்.
புதிய ஆர்.எஸ்200 பைக்கின் மற்ற அம்சங்கள் என்று பார்த்தால், ட்யூயல்-சேனல் ஏபிஎஸ், அகலமான புதிய டயர்கள் மற்றும் ரைடிங் மோட்களை சொல்லலாம். இதன்படி, சாலை, மழை மற்றும் ஆஃப்-ரோடு என 3 விதமான ரைடிங் மோட்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இந்த ரைடிங் மோட்கள் ஒவ்வொன்றிலும் பைக்கின் கண்ட்ரோல், பிரேக் மற்றும் பாதுகாப்பு வசதிகளின் தன்மை மாறுப்படும்.

2025 பஜாஜ் பல்சர் ஆர்.எஸ்200 பைக்கில் 199.5சிசி ஃப்யுல்-இன்ஜெக்டட், சிங்கிள்-ஸ்பார்க், 4-வால்வு பிஎஸ்6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அட்வான்ஸ்டு லிக்யுடு-கூல்டு சிஸ்டத்துடன் உள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9750 ஆர்பிஎம்-இல் 24.5 பிஎஸ் மற்றும் 8000 ஆர்பிஎம்-இல் 18.7 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல்சர் பைக்குகளை பவர்ஃபுல்லான என்ஜின் உடன் வழங்க வேண்டும் என்பதில் கடந்த சில வருடங்களாகவே பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தீவிரமாக உள்ளது. அதன் ஒருபகுதியாக 250சிசி மற்றும் 400சிசி பைக்குகளை அறிமுகம் செய்தது. அந்த வகையில் பார்த்தால், பல்சர் ஆர்.எஸ்200 ஆனது பஜாஜின் அடுத்த இலக்காக உள்ளது. அதாவது, பல்சர் ஆர்.எஸ்200 பைக்கின் மீது இப்போதும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நம்பிக்கை வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications









