இன்னும் கொஞ்ச நாள்ள ரோடு முழுக்க இந்த பைக் தான் ஓட போகுது! பஜாஜின் தயாரிப்புனா சும்மாவா!!

உலகின் முன்னணி இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான பஜாஜ் ஆட்டோ லிமிடெட் (Bajaj Auto Limited), தனது புகழ்பெற்ற பல்சர் 150 (Pulsar 150) பைக்கில் புதிய மேம்பாடுகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் பலரது விருப்பமான பெர்ஃபார்மன்ஸ் மோட்டார்சைக்கிளான பல்சர் 150-இன் புதிய மேம்படுத்தப்பட்ட வெர்சனின், டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.1,08,772-இல் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

புதிய பல்சர் 150 பைக்குகள் வரிசையில், பல்சர் 150 எஸ்டி (SD) ரூ.1,08,772, பல்சர் 150 எஸ்டி யுஜி (SD UG) ரூ.1,11,669 மற்றும் பல்சர் 150 டிடி யுஜி (TD UG) ரூ.1,15,481 என்ற விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய பல்சர் 150 பைக்கில் தோற்றத்தில் மட்டுமே குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

updated bajaj pulsar 150 bike launched

இதன்படி, புதிய LED ஹெட்லேம்ப் மற்றும் LED பிளிங்கர்கள் உள்ளிட்டவை தெளிவான பார்வையை மேம்படுத்துவதோடு, பல்சர் 150 இந்திய சாலைகளில் ஒரு நிலையான ஐகானாக நிலைத்திருக்க காரணமான காலத்தால் அழியாத தோற்றத்தையும் பாதுகாக்கின்றன. புதிய பல்சர் 150 ஆனது தனது வழக்கமான செயல்திறன், வசதி மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றைத் தொடர்ந்து வழங்குகிறது.

DTS-i தொழில்நுட்பத்துடன் கவர்ச்சியான வடிவமைப்பு மற்றும் கூர்மையான டைனமிக்ஸ் உடன் 'நேக்கட் ஸ்போர்ட்ஸ்' (naked sports) பைக்காக புதிய பல்சர் 150 மிளிர்கிறது. இருப்பினும், பைக்கின் தொழில்நுட்ப அம்சங்களில் பெரியதாக எந்த மேம்பாடுகளும் கொண்டுவரப்படவில்லை. வடிவமைப்பைப் பொறுத்தவரை, புதிய பல்சர் 150 அதன் பாரம்பரியமான மஸ்குலர் தோற்றத்தை அப்படியே தக்கவைத்துள்ளது.

updated bajaj pulsar 150 bike launched

பைக்கிற்கு நவீன தொடுதலை வழங்கும் வகையில் புதிய கலர் ஆப்ஷன்களையும், புதுப்பிக்கப்பட்ட கிராபிக்ஸ் ஸ்டிக்கர்களையும் பஜாஜ் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, புதிய எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் சேர்க்கப்பட்டிருப்பது, டிரைவருக்கு பார்வைத்திறனை மேம்படுத்துவதோடு, பைக்கிற்கு ஒரு நவீன தோற்றத்தையும் அளிக்கிறது.

இந்த மேம்பாடுகளில் மிக முக்கியமான அம்சம், பல்சர் என்150 மற்றும் என்160 பைக்குகளில் காணப்படுவது போன்ற ஒரு புதிய முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகும். இது கியர் நிலை, நிகழ்நேர எரிபொருள் திறன், சராசரி எரிபொருள் நுகர்வு, டேங்கில் மீதமுள்ள பெட்ரோல் மற்றும் டிஜிட்டல் கடிகாரம் போன்ற அத்தியாவசிய தகவல்களைக் காட்டுகிறது.

updated bajaj pulsar 150 bike launched

மேலும், இந்த டிஜிட்டல் கிளஸ்டர் திரை ஆனது பஜாஜ் ரைடு கனெக்ட் செயலி மூலம் ப்ளூடூத் இணைப்பையும் ஆதரிக்கிறது. இதன் மூலம் பைக்கை ஓட்டுபவர்கள் தங்களது மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை கிளஸ்டர் திரை வாயிலாகவே அணுக முடியும். இந்த அம்சங்கள் மூலம் பல்சர் 150 பைக் இன்றைய டிஜிட்டல் தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

இதன் இயந்திரப் பாகங்களில் பஜாஜ் நிறுவனம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இதனால், அதே 149.5சிசி, ஏர்-கூல்டு என்ஜின் தொடர்கிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 13.8 பிஎச்பி பவரையும், 13.25 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. இது பிஎஸ்6 ஃபேஸ்-2 (BS6 Pace-2) விதிமுறைகளுக்கு இணங்கக்கூடியது மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. பைக்கின் என்ஜின் ஆனது இரட்டை தொட்டில் சட்டகத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

updated bajaj pulsar 150 bike launched

டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் ட்வின் கேஸ்-சார்ஜ்டு ரியர் ஷாக் அப்சார்பர்கள் கொண்ட 17 இன்ச் அலாய் சக்கரங்கள் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளன. புதிய பல்சர் 150 பைக்கின் சிங்கிள் டிஸ்க் வேரியண்ட்டில் முன்பக்கத்தில் 260 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் உள்ளது. விலையுயர்ந்த ட்வின் டிஸ்க் வேரியண்ட்டில் முன்பக்கத்தில் 260 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக் கிடைக்கும். இந்த பைக்கின் ARAI அறிவித்த மைலேஜ் 47.5 கி.மீ/லி ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய பஜாஜ் பல்சர் 150 தனது தனித்துவமான க்ளாசிக் தோற்றத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. மேலும், புதிய இளமையான கலர் ஆப்ஷன்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கிராஃபிக்ஸ் ஆகியவை மோட்டார்சைக்கிளின் வழக்கமான வடிவமைப்பை மாற்றாமல், நவீன கவர்ச்சியைச் சேர்த்துள்ளன. தினசரி பயணங்களுக்கான மலிவு விலையில் செயல்திறனை வழங்கும் பஜாஜ் பல்சரின் வாக்குறுதியை புதிய பல்சர் 150 தொடர்ந்து பின்பற்றி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 25, 2025, 5:00 [IST]
English summary
Bajaj auto launches new updated pulsar 150 bike in india price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X