30 நாளில் 3 லட்சம் வண்டிகளை இந்த கம்பெனி வித்துடுச்சு! அப்படி இதுல என்ன இருக்கிறது?
கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் சுமார் 3 லட்சம் வாகனங்களை தயாரித்து பஜாஜ் நிறுவனம் மிக முக்கியமான சாதனையை படைத்துள்ளது. அதன்படி இந்நிறுவனம் உள்நாட்டில் எவ்வளவு விற்பன செய்துள்ளது. வெளிநாட்டிற்கு எவ்வளவு வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஜூலை மாதம் துவங்கியுள்ள நிலையில் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக தங்கள் ஜூன் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இந்நிறுவனம் 30 நாட்களில் 3 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளனர். இது அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை பெற்றுள்ளது.

இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மொத்தம் 3,60,806 வாகனங்களை விற்பனையை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் மொத்தம் 3,58,477 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது சுமார் 1 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் ஏற்றுமதி தான். உள்ளூர் விற்பனை குறைந்துள்ளது.
டூவீலர் செக்மெண்டில் பஜாஜ் நிறுவனம் 1,77,207 வாகனங்களை கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் விற்பனை செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஜூன் மாதம் மொத்தம் 1,49,317 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இது 16 சதவீதம் வீழ்ச்சியை பெற்றுள்ளது. அதே நேரம் ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 1,26,439 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. இதுவே கடந்த ஜூன் மாதம் 1,49,167 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 18 சதவீதம் அதிகம் ஆகும். ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை சேர்த்து மொத்தமாக 2,98,484 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.
அதே நேரம் கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை வேறு விதமாக இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 39,143 வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு நடந்த விற்பனையை விட 101 வாகனங்கள் மட்டுமே விற்பனை குறைந்துள்ளது. இது உள்நாட்டு விற்பனை தான். ஏற்றுமதியை பொருத்தவரை கடந்தாண்டு 15,587 கார்களாக இருந்த நிலையில் தற்போது 23,179 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளது. 49 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.
ஒட்டு மொதமாக சேர்த்து 1,88,460 வாகனங்கள் உள்நாட்டில் விற்பனையை பெற்றுள்ளது. கடந்தாண்டு 2,16,451 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 13 சதவீதம் விற்பனை குறைத்துள்ளது. அதே நேரம் ஏற்றுமதியில் 1,72,346 வாகனங்கள்கடந்த மாதம் ஏற்றுமதியாகியுள்ளது.கடந்தாண்டு 1,42,026 வாகனங்கள் ஏற்றுமதியாகியள்ளது. 21 சதவீதம் அளவிற்கு ஏற்றுமதி அதிகமாகியுள்ளது.
இந்த 2026ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்தம் 11,11,237 வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 11,02,056 வாகனங்களை தயாரித்திருந்தது. இது 1 சதவீதம் அளவிற்கு வளர்ச்சியை சந்தித்துள்ளது.இந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இது நிச்சயம் அந்நிறுவனத்திற்கு பாசிட்டிவான விஷயம் தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்தின் மீது மக்கள் அதிக நம்பிக்கையை வைத்துள்ளது. இந்நிலையில் 30 நாளில் 3 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை தயாரித்து இந்நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








