பெட்ரோல் ஸ்கூட்டரை விட இந்த இவி விலை ரொம்ப கம்மி! ஒரு தடவை சார்ஜ் போட்டா 127 கி.மீ போகலாம்!
பஜாஜ் நிறுவனம் தனது சேத்தக் என்ற எலெக்ட்ரிக் வாகன அணிவகுப்பில் சேத்தக் 3001 என்ற பெயரில் புதிய என்ட்ரி லெவல் வாகன அணிவகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் ரூ1 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இப்படியாக இந்த ஸ்கூட்டரில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பஜாஜ் நிறுவனத்தின் புதிய சேத்தக் 3001 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தவரை 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் முழு சார்னில் 127 கி.மீ பயணிக்கம் என தெரிவித்துள்ளது. இது ஐடிசி ரேஞ்சா அல்லது ரியல் வேர்ல்டு ரேஞ்சா என்பது இதுவரை தெரியவில்லை. இந்த பேட்டரியை சார்ஜ் ஏற்ற 750 வாட்ஸ் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பேட்டரி 3 மணி நேரம் 50 நிமிடத்தில் 0-80 சதவீத பேட்டரி சார்ஜ் ஏறிவிடுகிறது.

இந்த சேத்தக் 3001 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சேத்தக் 35 மாடலை கொண்டே வடிவமைக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் தான் காஸ்ட்லியான ஸ்கூட்டராக இருகு்கிறது. இந்த ஸ்கூட்டரில் 35 லிட்டர் ஸ்டோரேஜ் கொள்ளவு ருக்கிறது. சேத்தக் 3503யில் உள்ளது போலே இந்த ஸ்கூட்டரிலும் 63 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் இரண்டு வீல்களிலும் டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரில் எல்சிடி ஸ்கிரீன் இருக்கிறது. இதில் மியூசிக் கண்ட்ரோல் கால், கைடு மீ ஹோம் லைட் ஆப்ஷன், ரிவர்ஸ் லைட் ஆட்டோ பிளாஷிங் டெயில் லைட் உள்ளிட்ட அம்சங்கள் உளு்ளது. இதற்கு டெக்பேக் சப்ஸ்கிரிப்ஷனை பெற வேண்டும். இந்த பேக்கிற்கான சப்ஸ்கிரிப்ஷன் கட்டணம் குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த சேத்தக் 3001 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளுது. இந்த ஸ்கூட்டர் ரூ99,990 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் விற்பனையாகி வரும் 125 சிசி பெட்ரோல் ஸ்கூட்டருக்க போட்டியான விலையில் சொல்லப்போனால் அதை விட குறைவா விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த ஸ்கூட்டரை பொருத்தவரை மொத்தம் 3 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வந்துள்ளது. அதன்படி சிவப்பு, மஞ்சள், நீளம் ஆகிய நிறங்களில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் இந்த ஸ்கூட்டரின் டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்கூட்டர் நிச்சயம் மார்கெட்டில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும். சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது சிறப்பாக விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்கூட்டர் சிறப்பாகவிற்பனையாகி வருகிறது. இந்த சேத்தக் ஸ்கூட்டரை மக்கள் அதிகமாக வாங்கி வருகின்றனர். எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் ஓலா நிறுவனம் தான் சிறப்பாக விற்பனையை பெற்று வந்தது. தற்போது ஓலா நிறுவனத்தின் பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப், ஏத்தர் ஆகிய வாகனங்களும் போட்டியாக விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சேத்தக் எலெக்டரிக் ஸ்கூட்டர்கள் நன்றாக விற்பனையாகி வரும் நிலையில் மேலும் விற்பனையை அதிகரிக்க குறைந்த விலையில் பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இந்த ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இது நிச்சயம் மிகப்பெரிய விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









