டிமாண்டில் கோல்டுக்கே டஃப் கொடுக்குது! மொத்த மார்கெட்டில் 29 சதவீத பங்கை வளச்சு போட்ட பஜாஜின் ஒற்றை ஸ்கூட்டர்!

இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உலகில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ஓர் பிராண்டாக உள்ளது, பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto). இந்த நிறுவனத்தின் ஓர் டூ-வீலர் மாடலே மொத்த மார்கெட்டில் 29 சதவீத பங்கினைத் தன் வசம் வளைத்துப் போட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பஜாஜ் நிறுவனம், மின்சார இரண்டுசக்கர வாகன பிரிவில் பங்களிப்பை வழங்கும் விதமாக சேத்தக் (Chetak) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடலை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதுவே இப்போது இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். அதுமட்டுமல்ல மார்க்கெட்டின் மின்சார டூ-வீலர் பிரிவின் 29 சதவீத பங்கினை பஜாஜ் சேத்தக் இ-ஸ்கூட்டரே பிடித்திருக்கின்றது. நிதியாண்டு 2024-25இன் நான்காம் காலாண்டிலேயே இந்த சிறப்புமிக்க சாதனையை சேத்தக் படைத்திருக்கின்றது.

Bajaj chetak s 29 per cent market share in e2w

இதுமட்டுமல்ல இந்தியாவின் மொத்த கிரீன் ஃப்யூவல் வாகன பிரிவில் நிறுவனத்தின் சிஎன்ஜி மூன்று சக்கர வாகனம் மற்றும் எலெக்ட்ரிக் டூ-வீலர் 28 சதவீத பங்கினைப் பிடித்திருப்பதாகவும் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சேத்தக் செய்திருக்கும் சாதனை என்பது ஒட்டுமொத்த மார்க்கெட்டையும் வியப்பில் ஆழ்த்தக் கூடியதாக அமைந்திருக்கின்றது.

மொத்தமாக 2024இல் மட்டும் 2 லட்சம் யூனிட்டுகளை அது விற்பனைச் செய்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் வாயிலாக பஜாஜ் சேத்தக் இ-ஸ்கூட்டர் இந்தியர்களின் பிரியமான டூ-வீலர் என்பது உறுதியாகி உள்ளது. மேலும், ஓலா எலெக்ட்ரிக், ஏத்தர் மற்றும் டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் மின்சார டூ-வீலர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறியிருப்பதும் தெரிய வந்திருக்கின்றது.

இன்றைய நிலவரப்படி பஜாஜ் சேத்தக் மொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சேத்தக் 3501 (Chetak 3501), சேத்தக் 3502 (Chetak 3502) மற்றும் சேத்தக் ப்ளூ 2903 (Chetak 2903) ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் பஜாஜ் சேத்தக் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதில் விலை அதிகமான தேர்வாக சேத்தக் 3501 உள்ளது. இதன் விலை ரூ. 1.43 லட்சம் ஆகும். இது சென்னை ஆன்-ரோடு விலை ஆகும். இதைவிட குறைவான விலைக் கொண்டதாக சேத்தக் 3502 உள்ளது. இதன் விலை ரூ. 1.30 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது.

கடைசியாக இருப்பது ப்ளூ 2903 மாடல். இது எக்ஸ்-ஷோரூமில் ரூ. 98 ஆயிரத்து 498க்கு விற்கப்படுகின்றது. சேத்தக் 35 சீரிஸ்-இல் 3.5 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கும், சேத்தக் 29 சீரிஸில் 2.9 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது கவனிக்கத்தகுந்தது.

3.5 kWh பேட்டரி பேக்கில் ஓர் முழு சார்ஜில் 150 கிமீ ரேஞ்சையும், 2.9 kWh பேக்கில் ஓர் முழு சார்ஜில் 123 கிமீ ரேஞ்சையும் வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்துடன் டெக்-பேக் எனும் அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதியையும் பஜாஜ் நிறுவனம் ஆப்ஷனாக வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

இதன் வாயிலாக நேவிகேஷன், மியூசிக் கன்ட்ரோல், முக்கிய ஆவணங்களைச் சேகரித்தல் உள்ளிட்டவற்றைச் செய்துக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல, செல்போனுக்கு வரும் அழைப்பை நிர்வகிக்கும் வசதியையும் பெற்றுக் கொள்ள முடியும். கூடுதலாக ரிமோட் இம்மொபிலைசேஷன், ஜியோ ஃபென்சிங் மற்றும் திருட்டை தவிர்க்கும் வசதி போன்றவற்றையும் டெக்-பேக் வாயிலாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த மாதிரியான அம்சங்களைக் கொண்டிருப்பதாலேயே பஜாஜ் சேத்தக் இ-ஸ்கூட்டரின் விலை சற்றே காஸ்ட்லியாக உள்ளது. இந்த அம்சங்கள் இல்லாத ஆப்ஷன் ஒன்றையும் பஜாஜ் நிறுவனம் சேத்தக்-கில் விரைவில் சேர்க்க இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. சமீபத்திலேயே அது சாலை சோதனையோட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கேமிராவின் கண்களில் சிக்கியது.

12 அங்குல அலாய் வீல், வட்ட வடிவ ஹெட்லைட், முட்டை வடிவ ரியர் வியூ கண்ணாடிகள், டிரம் பிரேக் செட்-அப் உள்ளிட்டவற்றை அது தாங்கியிருந்ததை ஸ்பை படங்கள் வெளிக்காட்டுகின்றது. இந்த அம்சங்களை வைத்தே இது மலிவு விலை சேத்தக் என்பது உறுதியாகி இருக்கின்றது.

இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவில் மிகப் பெரிய புரட்சியை அது செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவின் பெஸ்ட் செல்லிங் இ-ஸ்கூட்டர் மாடலாக இன்னும் சில மாதங்களுக்கு சேத்தக்கை வைத்திருக்க இந்த மலிவு விலை தேர்வு உதவும் என நம்பப்படுகின்றது.

மேலும், ஓலா எலெக்ட்ரிக், டிவிஎஸ் மற்றும் ஏத்தர் எனெர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இரட்டிப்பான போட்டியை வழங்கவும் இந்த மலிவு தேர்வு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் வருகை எப்போது இந்தியாவில் அரங்கேறும் என்பது பற்றிய விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இருப்பினும், இது இப்போது விற்பனையில் இருக்கும் பஜாஜ் சேத்தக்கின் மற்ற தேர்வுகளைக் காட்டிலும் குறைவான அம்சங்களை தாங்கியதாகவும், குறைந்த வேகத்தை வெளிப்படுத்தக் கூடியதாகவும் மற்றும் குறைவான ரேஞ்சைத் தரக் கூடியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், ஓர் முழு சார்ஜில் 100 கிமீட்டருக்கும் குறைவான ரேஞ்சையும், டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீட்டருக்கும் குறைவாகவே இருக்கும் என்று யூகிக்கப்படுகின்றது.

ஆனால், பஜாஜ் சேத்தக்கின் இந்த மலிவு விலை தேர்வு பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் இதுவரை வெளியாகவில்லை. கூடிய விரைவில் அதுபற்றிய அத்தனை விபரங்களையும் பஜாஜ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த நாளுக்காகவே இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரியர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, மலிவு விலையில் பஜாஜ் சேத்தக்கை வாங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இருப்பவர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இது மாறி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஏற்கனவே பஜாஜ் சேத்தக் இ-ஸ்கூட்டரானது டிவிஎஸ் ஐக்யூப், ஏத்தர் எனெர்ஜி மற்றும் ஓலா எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்களின் எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கு விற்பனையில் மிகப் பெரிய சவாலை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதை மலிவு விலை சேத்தக் இரட்டிப்பாக்கும் என்றே நாங்கள் நம்புகின்றோம். ஆனால், இது என்ன மாதிரியான போட்டியை வழங்கப் போகின்றதை என்பதைக் காண நாம் இன்னும் சில நாட்களுக்கு காத்திருக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 8, 2025, 21:24 [IST]
English summary
Bajaj chetak achieves 29 percent market share in electric two wheeler segment
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+