'ஜெயிச்சுட்டோம் மாறா'.. ஃபீலில் பஜாஜ்! ஓலா-க்கு பெத்த சைஸ்ல அடி விழுந்திருக்கு.. இத வாழ்நாள் முழுக்க மறக்காது

இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன (Electric Two Wheeler) பிரிவை முழுமையாக ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து வந்தது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், இந்த இடத்தை தற்போது அது பஜாஜ் (Bajaj) இடம் விட்டுக் கொடுத்திருக்கின்றது. விட்டுக் கொடுத்திருக்கின்றது என்பதற்கு பதிலாக அந்த இடத்தை தன்னுடைய விடா முயற்சியினால் பஜாஜ் பிடித்திருக்கின்றது என்று கூறலாம். இத்தனைக்கும் பஜாஜ் நிறுவனம் சேத்தக் (Chetak) எனும் ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதுவே இந்தியாவின் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன பிராண்டு என்கிற மகுடத்தை ஓலாவிடம் இருந்து தட்டி பறித்து பஜாஜ்-க்கு வாங்கிக் கொடுத்திருக்கின்றது. வருடக் கணக்கில் இந்த அந்தஸ்த்தை ஓலா தாங்கி வந்தது என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. 2024 டிசம்பர் மாத விற்பனையிலேயே இந்த சாதனையை பஜாஜ் சேத்தக் இ-ஸ்கூட்டர் படைத்திருக்கின்றது.

Bajaj chetak becomes india s top electric two-wheeler

இது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு மட்டுமல்ல, டிவிஎஸ்-ஸையும் விற்பனையில் பின்னுக்கு தள்ளி இருக்கின்றது. விற்பனைக்கு வந்ததில் இருந்து இப்போதே முதல் முறையாக பஜாஜ் சேத்தக் இந்த இடத்தை அலங்கரிக்கின்றது என்பது. ஆகையால், ஒட்டுமொத்த வாகன உலகமும் தற்போது ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கின்றது.

புள்ளி விபரங்களின்படி சொல்ல வேண்டும் என்றால், போன டிசம்பர் மாதத்தில் மட்டும் பஜாஜ் நிறுவனத்தின் மின்சார இரண்டு சக்கர வாகனங்கள் 18 ஆயிரத்து 276 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாகவே 17,212 யூனிட்டுகளுடன் டிவிஎஸ் (TVS) நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது.

இந்த இரண்டு இந்திய நிறுவனங்களுக்கு அடுத்த இடத்திலேயே ஓலா எலெக்ட்ரிக் உள்ளது. அதாவது, முதல் இடத்தில் இருந்து சரிந்து நேராக மூன்றாவது இடத்திற்கு ஓலா எலெக்ட்ரிக் நகர்ந்திருக்கின்றது. அதன் தயாரிப்புகள் 2024 டிசம்பரில் 13,769 யூனிட்டுகள் வரை மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன.

இதற்கு அடுத்தபடியாக 4 ஆவது இடத்தில் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) இருக்கின்றது. இதன் மின்சார இரண்டு சக்கர வாகனங்கள் 10,421 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன. விரைவில் விற்பனையில் மாபெரும் வளர்ச்சியைக் கண்டு ஓலா எலெக்ட்ரிக்கை இதுவும் பின்னுக்கு தள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதைத்தொடர்ந்து, வெறும் 2,795 யூனிட்டுகளுடன் ஐந்தாவது இடத்தை கிரீவ்ஸ் எலெக்ட்ரிக்
(Greaves Electric Mobility) பிடித்திருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக ஆறாவது இடத்தில் பிகாஸ் ஆட்டோ (Bgauss Auto), ஏழாவது இடத்தில் பர் எனெர்ஜி (Pur Energy) மற்றும் எட்டாவது இடத்தில் பவுன்ஸ் எலெக்ட்ரிக் (Bounce Electric) ஆகியவை உள்ளன.

இவற்றின் மின்சார இரண்டு சக்கர வாகனங்கள் 1,000 தொடங்கி 1,100 யூனிட்டுகள் வரையில் மட்டுமே விற்பனையாகி உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக ஆயிரத்திற்கும் குறைவான யூனிட்டுகளை விற்பனைச் செய்து ஒன்பதாவது இடத்தில் ரிவோல்ட் மோட்டார்ஸ் (Revolt Motors)-ம், பத்தாவது இடத்தில் வார்டுவிசார்டும் இன்னோவேஷன்ஸ் (Wardwizard Innovations) நிறுவனங்களும் உள்ளன.

இவையே இந்தியாவின் 2024 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் டாப் 10 மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆகும். இந்த புள்ளி விபரங்கள் அனைத்தும் வாஹன் (Vahan) தளம் வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் வழங்கப்பட்டவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பெத்த சைஸ் (பெரிய அளவில்) அடங்கி வாங்கி இருக்கின்றது. இதற்கு நிறுவனத்தின் மீது இந்தியர்கள் ஏற்பட்ட வெறுப்புணர்வே காரணம் ஆகும். குறிப்பாக, நிறுவனம் டெலிவரி செய்த புதிய வாகனங்களே பழுது மற்றும் பாதிப்புக்கு ஆளாகி டெலிவரி வழங்கியதே இதன் இந்த அளவு மாபெரும் வீழ்ச்சிக்கு காரணம் என நம்பப்படுகின்றது. இந்த பெரிய அடியில் இருந்து சீக்கிரமே ஓலா எலெக்ட்ரிக் மீளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 2, 2025, 5:00 [IST]
English summary
Bajaj chetak leads indian electric two wheeler market in december 2024 outpacing ola and tvs
மேலும்... #bajaj auto #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+