5 லட்சம் பேர் இந்த வண்டிய நம்பி வாங்கிட்டாங்க! அப்படி இதுல என்னதாங்க இருக்குது?
பஜாஜ் நிறுவனத்தின் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இதுவரை 5 லட்சத்திற்குள் அதிகமான மக்கள் வாங்கி பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சாதனை மைல் கல்லை அந்நிறுவனம் வெறும் 5 ஆண்டுகளிலேயே சாதித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பஜாஜ் நிறுவனம் சேத்தக் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது. அப்பொழுது கொரோனா காரணமாக ஒட்ட மொத்த ஆட்டோமொபைல் உலகமே மந்தமான நிலையில் இருந்து. அதிலிருந்து தற்போது மீண்டு வந்து வளர்ச்சியை சந்தித்துள்ள நிலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் புதிய சாதனை மைல் கல்லை எட்டி பிடித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிறுவனம் மொத்தம் 5,10,000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த 10 மாதங்களில் மட்டும் இதில் 40 சதவீதமான விற்பனையை செய்துள்ளது. அதாவது 2,06,366 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிட்டதக்கது.
தற்போது சப்ளை செயின் சவால்கள் மற்றும் ரேர் எர்த் மேக்னட் தட்டுபாடு ஆகிய சூழ்நிலையில் இந்த வாகனத்தின் தயாரிப்பு பாதிக்கப்பட்ட போதிலும் இந்த சாதனையை அந்நிறுவனம் படைத்துள்ளது. இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இது மாறியுள்ளது. டிவிஎஸ் ஐக்யூப்பையும் தாண்டி முதலிடம் பிடித்தது. ஆனால் தற்போது தயாரிப்பு பாதிக்கப்பட்டதால் விற்பனை குறைந்தது. ஆனால் மீண்டும் முழு வீச்சில் தயாரிப்பு துவங்கியுள்ளது.

இந்த அதிக விற்பனைக்கு முக்கியமான காரணம் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல்வேறு வேரியன்ட்களை அந்நிறுவனம் வெளியிட்டது தான். இது பல்வேறு விதமான மக்களின் தேவையை பூர்த்தி செய்வதால் விற்பனை அதிகரித்தது.இந்தியா முழவதும் 3800 ஷோரூம்கள் மூலம் இந்த வாகனம் விற்பைன செய்யப்படுகிறது
கடந்த 20 மாதங்களில் மட்டும் 3,48,251 வாகனங்களும், கடந்த 10 மாதங்களில் 2 லட்சம் வாகனங்களையும் தயாரித்து டீலர் ஷிப்களுக்கு அந்நிறுவனம் அனுப்பியுள்ளது. மிக அதிக அளவில் இந்த வாகனம் விற்பனையாகி வருகிறது. பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தவரை 4 மாடல்களில் 2 விதமான பேட்டரி ஆப்ஷன்களுடன் வருகிறது.

அதன்படி சேத்தக் 3001 மாடல் 3kWh பேட்டரியிலும், 3501,3502,3503 ஆகிய மாடல்கள் 3.5KWH பேட்டரி பேக் உடனும் விற்பனைக்கு வருகிறது. இந்த வாகனம் மார்கெட்டில் ரூ99,900 முதல் ரூ1.35 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த விலை மற்றும் சிறந்த அம்சங்கள், நல்ல டிசைன், மற்றும் மக்களின் தேவையை அறிந்து வழங்கப்பட்ட வசதிகள் ஆகியவைதான் இந்த அதிக விற்பனைக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.
மார்கெட்டில் ஒலா, டிவிஎஸ் ஐக்கயூப் ஆகிய வாகனங்கள் இந்த பஜாஜ் சேத்தக்கிற்கு போட்டியாக இருக்கிறது. இந்த போட்டியையும் தாண்டி மார்கெட்டில் தேவை அதிகமாக இருப்பதால் இந்த வாகனத்தின் விற்பனை அதிகரிக்கிறது. அதே நேரம் போட்டி தயாரிப்புகளின் விற்பனையும் கணிசமாக அதிகரித்து தான் வருகிறது. இதன் மூலம் மார்கெட் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. இதனால் எதிர்காலத்தில் இவி டூவீலர் மார்கெட் மிக முக்கியமான மார்கெட்டாக இந்தியாவில் மாறப்போகிறது என்பதை இப்பொழுதே நமக்கு தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மக்கள் பலர் இதை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிறுவனம் அடுத்தடுத்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களம் இறக்கினால் நிச்சயம் பெரிய அளவில் இதன் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









