இந்த பேரை வச்சதுக்காகவே வாங்கலாம்! அந்த காலத்துல நம்ம அப்பா, தாத்தாலாம் ஓட்டன வண்டி!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak). ஒரு காலத்தில் இந்திய சாலைகளை ஆட்சி செய்த பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரின் பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இதற்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பஜாஜ் சேத்தக் பதிவு செய்து வருகிறது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல. பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

TVS iQube vs Bajaj Chetak

இதன்படி பார்த்தால், பஜாஜ் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 30,558 சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28,517 பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 2,041 பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை, 7.16 சதவீதம் உயர்ந்துள்ளது.

Ather Rizta

அத்துடன் இந்த வளர்ச்சியின் காரணமாக, நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில் (Top 10 Scooters September 2025), பஜாஜ் சேத்தக் 6வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் முறையே ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜூபிடர், சுஸூகி ஆக்ஸஸ், டிவிஎஸ் என்டார்க் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் ஆகிய ஸ்கூட்டர்கள் உள்ளன.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போதைய நிலையில் மொத்தம் 4 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கிறது. இதில், பஜாஜ் சேத்தக் 3001 வேரியண்ட்டின் விலை 1,02,400 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதில், 3.0 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் ரைடிங் ரேஞ்ச் (Riding Range) 127 கிலோ மீட்டர்கள் ஆகும்.

அதே நேரத்தில் பஜாஜ் சேத்தக் 3501 வேரியண்ட்டின் விலை 1,34,500 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதில், 3.5 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் ரைடிங் ரேஞ்ச் 153 கிலோ மீட்டர்களாக உள்ளது. மறுபக்கம் பஜாஜ் சேத்தம் 3502 வேரியண்ட்டின் விலை 1,22,499 ரூபாயாக உள்ளது. இதிலும் 3.5 kWh பேட்டரிதான் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ரைடிங் ரேஞ்ச்சும் 153 கிலோ மீட்டர்களாகதான் உள்ளது.

அதே நேரத்தில் பஜாஜ் சேத்தக் 3503 வேரியண்ட்டின் விலை 1,09,500 ரூபாயாக உள்ளது. இதிலும் 3.5 kWh பேட்டரிதான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் ரைடிங் ரேஞ்ச் 151 கிலோ மீட்டர்கள் ஆகும். இவை அனைத்துமே பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மற்றும் ரைடிங் ரேஞ்ச் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டிவிஎஸ், ஏத்தர் மற்றும் ஓலா போன்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக பஜாஜ் சேத்தக் கருதப்படுகிறது. ஒரு பிரீமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, பஜாஜ் சேத்தக் மிகச்சிறந்த ஆப்ஷன்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 28, 2025, 20:34 [IST]
English summary
Bajaj chetak sales report september 2025 7 16 per cent growth
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+