சிஎன்ஜி பைக்குனு ஒன்னு விற்பனைக்கு கொண்டு வந்தாங்களே அது விற்பனையாகுதா இல்லையா?.. சத்தமே இல்லாம இருக்கு..
உலகின் முதல் சிஎன்ஜி (CNG)-இல் இயங்கும் பைக் பஜாஜ் ஃப்ரீடம் 125 (Bajaj Freedom 125) ஆகும். இந்த பைக் இந்தியாவில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஆறு மாதங்களே ஆகின்றன. இந்த நிலையிலேயே ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக் எவ்வளவு யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன என்கிற விபரம் தற்போது வெளியாகி இருக்கின்றது. இதுவரை சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் வரையிலேயே பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக் விற்பனையாகி இருக்கின்றது.
இந்த தகவல், சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகேஷ் ஷர்மா ஆட்டோ கார் புரஃபஸ்னலுக்கு அளித்த பேட்டியின் வாயிலாக உறுதியாகி இருக்கின்றது. இதன் வாயிலாக உலகின் முதல் சிஎன்ஜி பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது உறுதியாகி இருக்கின்றது.

இந்தியாவில் இந்த பைக் மொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. என்ஜி04 டிரம் (NG04 Drum), என்ஜி04 டிரம் எல்இடி (NG04 Drum LED) மற்றும் என்ஜி04 டிஸ்க் எல்இடி (NG04 Disc LED) ஆகியவையே அவை ஆகும். இதில் என்ஜி04 டிரம் வேரியண்ட்டே ஆரம்ப நிலை தேர்வாகும்.
இதன் விலை ரூ. 89,997 ஆகும். இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் அதிகபட்ச விலையே ரூ. 1.10 லட்சம் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. சிஎன்ஜியில் இந்த பைக் ஒரு கிலோவிற்கு 102 கிமீ மைலேஜை தரும். அதேவேளையில், பெட்ரோலில் இயங்கும்போது லிட்டருக்கு 65 கிமீ வரையில் தரும்.

இத்தகைய அதிக மைலேஜ் திறன் காரணமாகவே இந்த பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. குறிப்பாக, அடித்தட்டு மக்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு இதற்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 125 சிசி, 4 ஸ்ட்ரோக், ஏர் கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இது அதிகபட்சமாக 9.5 பிஎஸ் பவரையும், 9.77 என்எம் டார்க் ஆற்றலையும் உருவாக்கும் திறன் கொண்டது. இந்த பைக்கில் பிரீமியம் தர அம்சங்களும் பல வழங்கப்பட்டு இருக்கினஅறன. அந்தவகையில், ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட எல்சிடி திரை, 16 அங்குல வீல், எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுபோன்று இன்னும் பல அம்சங்கள் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த மாதிரியான அம்சங்களும், அதிக மைலேஜ் தரும் திறனே இந்த பைக்கிற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பைக் கிடைக்கச் செய்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே தற்போது 40 ஆயிரத்திற்கும் அதிகமாக இந்த சிஎன்ஜி பைக் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
இந்தியாவின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே விற்பனைக்குக் கொண்டிருக்கின்ற போதிலேயே இந்த அளவிற்கு மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியை இந்த பைக் பெற்றிருக்கின்றது. சிஎன்ஜி விநியோகம் பெருமளவில் கிடைத்தும், பைக்கின் விற்பனையை நாடு தழுவிய அளவில் கொண்டு வந்தாலும், ஃப்ரீடம் 125-இன் விற்பனை இன்னும் பலமடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்தே, தற்போது பைக்கிலும் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்பட ஆரம்பித்திருக்கின்றது. விரைவில் சிஎன்ஜியில் இயங்கும் ஸ்கூட்டர்களும் விற்பனைக்கு வர இருக்கின்றன. டிவிஎஸ்ஸே முதல் சிஎன்ஜி ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








