102 கிமீ மைலேஜ்! ஆனா விலை இவ்ளோதானா! உலகையே மிரள வைத்த இந்திய நிறுவனத்தின் பைக்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று பஜாஜ் ஃப்ரீடம் (Bajaj Freedom). உலகின் முதல் சிஎன்ஜி பைக் (World's First CNG Bike) என்ற பெருமை இதற்கு உண்டு. கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம்தான், பஜாஜ் ஃப்ரீடம் பைக், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பஜாஜ் ஃப்ரீடம் பைக்கின் செயல்திறனை பொறுத்தவரையில், 124.58 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 9.7 என்எம் டார்க் திறனையும், 9.5 பிஎஸ் பவரையும் உருவாக்க கூடிய வகையில் பஜாஜ் ஃப்ரீடம் பைக்கின் இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் சிஎன்ஜி மூலமாக மட்டுமல்லாது, பெட்ரோல் மூலமாகவும் இயங்கும்.

Bajaj Freedom 125 CNG Side Design

தற்போதைய நிலையில் மொத்தம் 3 வேரியண்ட்களில் பஜாஜ் ஃப்ரீடம் பைக் கிடைக்கும். அவை என்ஜி04 ட்ரம், என்ஜி04 ட்ரம் எல்இடி மற்றும் என்ஜி04 டிஸ்க் ஆகியவை ஆகும். இதில், என்ஜி04 ட்ரம் வேரியண்ட்டின் விலை 90,976 ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் என்ஜி04 ட்ரம் எல்இடி வேரியண்ட்டின் விலை 1,03,468 ரூபாயாக உள்ளது.

மறுபக்கம் என்ஜி04 டிஸ்க் வேரியண்ட்டின் விலை 1,07,026 ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே பஜாஜ் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக பஜாஜ் ஃப்ரீடம் கருதப்படுகிறது.

Bajaj Freedom 125 CNG

பஜாஜ் ஃப்ரீடம் பைக்கில், 2 லிட்டர் பெட்ரோல் டேங்க்கும், 2 லிட்டர் சிஎன்ஜி டேங்க்கும் கொடுக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் மூலமாக இயங்கும்போது இந்த பைக் ஒரு லிட்டருக்கு 64 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது இந்த பைக் ஒரு கிலோவிற்கு 102 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய அதே நேரத்தில் ஓரளவிற்கு விலை குறைவான பைக்குகளில் ஒன்றாக இருந்தாலும் கூட, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், பஜாஜ் ஃப்ரீடம் பைக்கின் விற்பனை மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. பஜாஜ் ஃப்ரீடம் பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்திய சந்தையில் வெறும் 2,152 பஜாஜ் ஃப்ரீடம் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 30,051 பஜாஜ் ஃப்ரீடம் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 27,899 பஜாஜ் ஃப்ரீடம் பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 92.84 சதவீத வீழ்ச்சி ஆகும். எனினும் வரும் மாதங்களில், பஜாஜ் ஃப்ரீடம் பைக் இந்த சரிவில் இருந்து மீண்டு, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் சிஎன்ஜி மூலமாக இயங்கும் டூவீலர்கள் விற்பனைக்கு வர தொடங்கியிருப்பது சிறப்பான விஷயமாக கருதப்படுகிறது. பஜாஜ் ஃப்ரீடம் சிஎன்ஜி பைக்கை தொடர்ந்து, டிவிஎஸ் ஜூபிடர் மற்றும் சுஸுகி ஆக்ஸஸ் ஆகிய ஸ்கூட்டர்களின் சிஎன்ஜி வெர்ஷன்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 3, 2025, 23:28 [IST]
English summary
Bajaj freedom sales report october 2025 92 84 per cent down
மேலும்... #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+