ரூ. 20,000 குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கு புதிய பஜாஜ் சேத்தக்!.. ஸ்மார்ட்ஃபோனை இணைச்சுக்க முடியுமா!!
பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Bajaj Chetak Electric Scooter) மாடலில் புதிய வேரியண்ட் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஏற்கனவே விற்பனையில் இருந்த மற்ற வேரியண்டுகளைக் காட்டிலும் ரூ. 20 ஆயிரம் குறைவான விலையே இதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் புகழ்பெற்று விளங்கிக் கொண்டிருக்கும் பஜாஜ் (Bajaj) நிறுவனம், சென்ற ஆண்டின் இறுதியில் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் புதிய '35' சீரிஸை புதிதாக அறிமுகப்படுத்தியது.
மூன்று விதமான வேரியண்டுகளில் அது அறிமுகம் செய்யப்பட்டது. சேத்தக் 3501, சேத்தக் 3502 மற்றும் சேத்தக் 3503 ஆகியவையே அவை ஆகும். இதில் முதல் இரண்டு வேரியண்டுகளின் விலையையும் டிசம்பரில் அரங்கேறிய அறிமுக நிகழ்வின்போதே பஜாஜ் நிறுவனம் அறிவித்துவிட்டது. ஆனால், 3503 வேரியண்டின் விலையை மட்டும் அது அறிவிக்கவில்லை.

இதன் விலையையே இப்போது அறிவித்து அதை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது பஜாஜ் ஆட்டோ. சேத்தக் 3503 வேரியண்டிற்கு ரூ. 1.10 லட்சம் விலையே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது சேத்தக் 3501 வேரியண்டைக் காட்டிலும் ரூ. 20 ஆயிரம் குறைவாகும்.
மேலும், இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. சற்றே விலை குறைவானதாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருந்தாலும், அதில் சிறப்பம்சங்களை பஜாஜ் நிறுவனம் வாரி வழங்க தவறவில்லை. அந்தவகையில், வண்ண எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதற்காக ப்ளூடூத் தொழில்நுட்பமும் இந்த திரையில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமல்ல, செல்போனுக்கு வரும் அழைப்புகளையும் இந்த திரை வாயிலாக மேனேஜ் செய்துக் கொள்ள முடியும். இத்துடன், ஹில் ஹோல்டு அசிஸ்ட், மியூசிக் கன்ட்ரோல் போன்ற அம்சங்களையும் இதில் பஜாஜ் நிறுவனம் வழங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
ரைடிங் மோட்களைப் பொருத்த வரை ஈகோ மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. ஆனால், முன் பக்கத்தில் டிஸ்க் பிரேக், டச் ஸ்கிரீன் போன்ற வசதிகளை இந்த ஸ்கூட்டரில் வழங்கவில்லை. விலையை குறைவாக வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த அம்சங்களை பஜாஜ் நிறுவனம் நீக்கி உள்ளது.

அதேநேரத்தில் ஓர் முழு சார்ஜில் 150 கிமீ ரேஞ்சை தரும் பெரிய பேட்டரி பேக்கை சேத்தக் 3503 வேரியண்டில் பஜாஜ் வழங்கி இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. 3.5 kWh பேட்டரி பேக்கே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 63 கிமீ ஆகும்.
தொடர்ந்து, இந்த ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் 35 லிட்டர் அளவில் பொருட்களை வைத்துக் கொள்வதற்கான இட வசதியையும் பஜாஜ் வழங்கி இருக்கின்றது. இந்த அம்சங்கள் மற்றும் குறைவான விலை ஆகியவை பஜாஜ் சேத்தக் 3503 வேரியண்டிற்கு இந்தியாவில் நல்ல டிமாண்டை ஏற்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் சேத்தக் விற்பனையை இரட்டிப்பாக்க புதிய சேத்தக் 3503 வேரியண்டின் வருகை பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. ஏற்கனவே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இதற்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே 35 சீரிஸில் இருப்பதிலேயே விலை குறைவான வேரியண்டாக இது விற்பனைக்கு வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









