90 கிமீ மைலேஜை வாரி வழங்கும் பைக்கோட விலை இவ்ளோதானா! அடிமாட்டு ரேட்ல வித்து தள்ளீட்டு இருக்காங்க!
இரு சக்கர வாகனங்களை வாங்கும் இந்திய வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு இரண்டே இரண்டுதான். ஒன்று விலை (Price) குறைவாக இருக்க வேண்டும். மற்றொன்று நல்ல மைலேஜ் (Mileage) கிடைக்க வேண்டும். இந்த 2 எதிர்பார்ப்புகளையும் ஒரே சேர பூர்த்தி செய்யும் பைக்குகளில் ஒன்றுதான் பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina).
ஆனால் பஜாஜ் பிளாட்டினா பைக்கிற்கு நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சரியாக அமையவில்லை. ஆம், விற்பனையில் மிக கடுமையான வீழ்ச்சியை பஜாஜ் பிளாட்டினா சந்தித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது நமக்கு தெரிய வந்துள்ளது.

இதன்படி பார்த்தால் பஜாஜ் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29,689 பிளாட்டினா பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 44,054 ஆக இருந்தது. அதாவது 14,365 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது 32.61 சதவீத வீழ்ச்சி ஆகும். விற்பனை மிக கடுமையான சரிவை சந்தித்துள்ள நிலையில், நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 பைக்குகளின் பட்டியலில் (Top 10 Bikes), பஜாஜ் பிளாட்டினா 7வது இடத்தை பிடித்துள்ளது.

முதல் 6 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஷைன், பஜாஜ் பல்சர், டிவிஎஸ் அப்பாச்சி, டிவிஎஸ் ரைடர் மற்றும் ஹெச்எஃப் டீலக்ஸ் ஆகிய பைக்குகள் உள்ளன. இந்த வரிசையில் பஜாஜ் பிளாட்டினா பைக் இந்த பட்டியலில் 7வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.
இந்திய சந்தையில் பஜாஜ் பிளாட்டினா பைக் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) உடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை பஜாஜ் பிளாட்டினா 100 மற்றும் பஜாஜ் பிளாட்டினா 110 ஆகியவை ஆகும். இதில், பஜாஜ் பிளாட்டினா 100 மாடலில், 102 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 5.8 kW பவர் மற்றும் 8.3 Nm டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் விலை 68,890 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. மறுபக்கம் பஜாஜ் பிளாட்டினா 110 மாடலில், 115.45 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6.33 kW பவர் மற்றும் 9.81 Nm டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் பஜாஜ் பிளாட்டினா 110 பைக்கின் விலை 71,558 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
பஜாஜ் பிளாட்டினா பைக் விலை குறைவானது என்பதுடன், அதிக மைலேஜ் வழங்க கூடியது. பஜாஜ் பிளாட்டினா பைக் ஒரு லிட்டருக்கு 70-90 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குவதாக, அதன் உரிமையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். இருப்பினும் ஓட்டும் விதம் உள்ளிட்ட அம்சங்களை பொறுத்து மைலேஜ் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏராளமான பைக்குகள் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. எனவே பஜாஜ் பிளாட்டினா பைக்கின் சரிவு தற்காலிகமானதாக இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். அதாவது பஜாஜ் பிளாட்டினா கூடிய விரைவில் இந்த சரிவில் இருந்து மீண்டு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








