100 கிமீ மைலேஜ் தரும் பைக்கின் விலை வெறும் 65 ஆயிரம்தானா! ஜிஎஸ்டி குறைஞ்சதால தரமட்டத்துக்கு போயிருச்சு!
இந்தியாவில் அதிக மைலேஜ் (Mileage) வழங்கும் அதே நேரத்தில் மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் பைக்குகளுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது. ஆனால் அதிக மைலேஜ் மற்றும் குறைவான விலை என்ற வாடிக்கையாளர்களின் 2 எதிர்பார்ப்புகளையும், ஒரு சில பைக்குகள் மட்டுமே ஒரு சேர பூர்த்தி செய்கின்றன.
இதில், பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina) மிகவும் முக்கியமான ஒரு பைக் ஆகும். இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் பஜாஜ் பிளாட்டினா பைக்கின் விற்பனை எண்ணிக்கை சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் விதிவிலக்கு அல்ல.

பஜாஜ் பிளாட்டினா பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 39,110 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை 41,915 ஆக இருந்தது.
அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 2,805 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 6.69 சதவீத வீழ்ச்சி ஆகும். ஆனால் இது சிறிய அளவிலான வீழ்ச்சி மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

எனவே வரும் மாதங்களில் பஜாஜ் பிளாட்டினா மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பஜாஜ் பிளாட்டினா பைக் மொத்தம் 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100) மற்றும் பஜாஜ் பிளாட்டினா 110 ட்ரம் (Bajaj Platina 110 Drum) ஆகியவை ஆகும்.
இதில், பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் ஆரம்ப விலை வெறும் 65,407 ரூபாயாக மட்டுமே உள்ளது. மறுபக்கம் பஜாஜ் பிளாட்டினா 110 ட்ரம் பைக்கின் ஆரம்ப விலை வெறும் 69,284 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள (Ex-showroom Price) விலை ஆகும்.
ஆனால் முன்பு பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் ஆரம்ப விலை 70,611 ரூபாய் ஆக இருந்தது. அதே நேரத்தில் பஜாஜ் பிளாட்டினா 110 ட்ரம் பைக்கின் விலை 74,771 ரூபாயாக இருந்தது. ஆனால் ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டுள்ள காரணத்தால் (GST Rate Cut), பஜாஜ் பிளாட்டினா பைக்கின் விலை தற்போது வெகுவாக குறைந்துள்ளது.
நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், பஜாஜ் பிளாட்டினா பைக் விலை குறைவானது என்பதுடன், அதிக மைலேஜ் வழங்க கூடியது. இந்த பைக் ஒரு லிட்டருக்கு சுமாராக 70-90 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது என அதன் உரிமையாளர்கள் பலரும் கூறுகின்றனர். இன்னும் ஒரு சிலரோ, ஒரு லிட்டருக்கு 100 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர்.
பைக்கை ஓட்டும் விதம், பைக்கின் கண்டிஷன் மற்றும் சாலைகளின் நிலை போன்ற அம்சங்களை எல்லாம் பொறுத்து, மைலேஜ் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இருப்பினும் ஓரளவிற்கு குறைவான விலையில், அதிக மைலேஜ் வழங்க கூடிய பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, இது நல்ல ஆப்ஷன்தான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: போக்குவரத்து நெரிசலில் தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருபவர்கள் மற்றும் நகர பகுதிகளில் உணவு டெலிவரி போன்ற தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் போன்றவர்களுக்கு, பஜாஜ் பிளாட்டினா பைக் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
பஜாஜ் பிளாட்டினா பைக்கை வாங்குவதுடன், கூடவே சேர்த்து பராமரிப்பதும் மிகவும் எளிமையான ஒரு விஷயம்தான். சர்வீஸ் போன்ற விஷயங்களுக்கு மிகவும் குறைவாகவே செலவு ஆகும். அத்துடன் இது அதிக மைலேஜ் வழங்க கூடியது என்பதால், இதனை இயக்குவதற்கான செலவும் கூட மிகவும் குறைவுதான்.


Click it and Unblock the Notifications








