100 கிமீ மைலேஜை வாரி வழங்கும் பைக் விலை இவ்ளோதானா! செல்போன் ரேட்ல விக்கறதுக்கு பெரிய மனசு வேணும்!

இந்திய சந்தையில் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய, அதே நேரத்தில் ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்க கூடிய ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்குகளுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்தியாவை சேர்ந்த மிடிஸ்-க்ளாஸ் குடும்பங்களின் முதல் சாய்ஸ்-ஆக, ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்குகள் திகழ்கின்றன.

தினசரி அலுவலகம் மற்றும் கல்லூரிகளுக்கு செல்வோர், ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் டெலிவரி ஏஜெண்ட்கள் போன்றவர்கள் பெரும்பாலும் ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்குகளைதான் தேர்வு செய்கின்றனர். இந்தியாவின் ஆரம்ப நிலை கம்யூட்டர் செக்மெண்ட்டில் ஏராளமான பைக்குகள் உள்ளன.

Bajaj Platina 100 Instrument Cluster

இதில், பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina) மிகவும் முக்கியமானது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் என்றாலும் கூட, நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம், விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது நமக்கு தெரிய வந்துள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 33,101 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 25,662 ஆக குறைந்துள்ளது. இது 22.47 சதவீத வீழ்ச்சி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Bajaj Platina

இதன் காரணமாக நடப்பு 2025ம் ஆண் ஜூன் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 பைக்குகளின் பட்டியலில் (Top 10 Bikes June 2025), பஜாஜ் பிளாட்டினா பைக் 10வது மற்றும் கடைசி இடத்தை மட்டுமே பிடித்துள்ளது. ஆனால் வரும் மாதங்களில் பஜாஜ் பிளாட்டினா இந்த சரிவில் இருந்து மீண்டு வந்து விடும் என நாம் நம்பலாம்.

ஏனெனில் இது ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்க கூடிய, அதிக மைலேஜ் வழங்கும் பைக் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் விலை 70,611 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இந்த மாடலில், 7.9 பிஎஸ் பவர் மற்றும் 8.3 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 102 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மறுபக்கம் பஜாஜ் பிளாட்டினா 110 பைக்கின் விலை 74,771 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இந்த மாடலில் 6.33 kW பவர் மற்றும் 9.81 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 115.45 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செய்தியில் கூறப்பட்டுள்ள அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரு சில செல்போன்களின் விலையை விட, இது குறைவானது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் பிளாட்டினா பைக் ஒரு லிட்டருக்கு 70-90 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. இது பஜாஜ் பிளாட்டினா பைக்கின் உரிமையாளர்கள் பலரும் தெரிவிக்கும் மைலேஜ் ஆகும். இன்னும் ஒரு சிலரோ, மிகவும் சிறப்பான பைக் ஓட்டும் திறன்கள் மூலம், பஜாஜ் பிளாட்டினா பைக்கில் ஒரு லிட்டருக்கு 100 கிலோ மீட்டர் மைலேஜ் வரை பெற்றுள்ளதாக தெரிவித்து நம்மை ஆச்சரியப்படுத்துகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு புதிய பைக்கை வாங்க வேண்டும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் பிளாட்டினா மிகவும் நல்ல ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Thursday, July 24, 2025, 23:13 [IST]
English summary
Bajaj platina sales report june 2025 22 47 per cent down
மேலும்... #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+