90 கிமீ மைலேஜ் தர்ற பைக்கை இந்த ரேட்ல விக்கறாங்களா! மிடில்-க்ளாஸ் மக்கள் தலையில தூக்கி வெச்சு கொண்டாடுறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு பைக்கை வாங்க வேண்டும் என்றால், பலரின் சாய்ஸ் ஆக இருப்பது பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina) ஆகும். இது இந்திய சந்தையில் கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பைக் ஆகும்.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட எட்டே மாதங்களில், அதாவது 2006ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே, 5 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை பஜாஜ் பிளாட்டினா கடந்து விட்டது. இது விலை குறைவானது என்பதுடன், அதிக மைலேஜ் வழங்க கூடியது என்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணம்.

Bajaj Platina

அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளான பின்னரும் கூட, இன்றளவும் பஜாஜ் பிளாட்டினா பைக்கின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் பஜாஜ் பிளாட்டினா பைக் விற்பனையில் சற்றே சறுக்கியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இது தெரிய வந்துள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம், பஜாஜ் நிறுவனம் 27,919 பிளாட்டினா பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம், 30,239 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 2,320 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Bajaj Platina 100 Instrument Cluster

இது 7.67 சதவீத வீழ்ச்சி ஆகும். இதன் காரணமாக நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 மோட்டார்சைக்கிள்களின் பட்டியலில் (Top 10 Motorcycles May 2025), பஜாஜ் பிளாட்டினா 9வது இடத்தை மட்டுமே பிடித்துள்ளது.

ஆனால் இது சிறிய அளவிலான வீழ்ச்சி மட்டுமே என்பதால், பஜாஜ் பிளாட்டினா பைக் கூடிய விரைவிலேயே மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என கருதப்படுகிறது. பஜாஜ் பிளாட்டினா பைக் தற்போதைய நிலையில் 100 மற்றும் 110 என மொத்தம் 2 மாடல்களில் கிடைத்து வருகிறது.

இதில், பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் விலை 68,262 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. மறுபக்கம் பஜாஜ் பிளாட்டினா 110 பைக்கின் விலை 71,558 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக பஜாஜ் பிளாட்டினா கருதப்படுகிறது.

அத்துடன் பஜாஜ் பிளாட்டினா பைக் ஒரு லிட்டருக்கு 70-90 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது. இது பஜாஜ் பிளாட்டினா பைக்கை பயன்படுத்தி வரும் உரிமையாளர்கள் பலரும் தெரிவிக்கும் மைலேஜ் (Mileage) ஆகும். இந்த சிறப்பான மைலேஜூம் பஜாஜ் பிளாட்டினா பைக்கின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் (Hero Splendor Plus), ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe), ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100) மற்றும் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் (TVS Star City Plus) ஆகிய பைக்குகளுக்கு எல்லாம் பஜாஜ் பிளாட்டினா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, June 22, 2025, 20:58 [IST]
English summary
Bajaj platina sales report may 2025 8 per cent down
மேலும்... #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+