ஒரு லிட்டருக்கு 100 கிமீ மைலேஜ் குடுக்கும் பைக்கா! உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய நிறுவனத்தின் தயாரிப்பு

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மிகவும் விலை குறைவான, அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்கும் மோட்டார்சைக்கிள்களில் ஒன்று பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina). இந்த பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், 32,040 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 44,578 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 12,538 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Bajaj Platina

இதன் காரணமாக பஜாஜ் பிளாட்டினா பைக் விற்பனையில் 28.13 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த வீழ்ச்சியின் காரணமாக நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 மோட்டார்சைக்கிள்களின் பட்டியலில் (Top 10 Motorcycles Sales November 2025), பஜாஜ் பிளாட்டினா பைக்கிற்கு, 9வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 8 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஷைன், பஜாஜ் பல்சர், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ், டிவிஎஸ் அப்பாச்சி, ராயல் என்பீல்டு கிளாசிக் 350, ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 மற்றும் டிவிஎஸ் ரைடர் ஆகிய பைக்குகள் உள்ளன. இந்த வரிசையில் பஜாஜ் பிளாட்டினா 9வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

Honda Shine 100

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இது இந்தியாவில் அதிக மைலேஜ் வழங்க கூடிய பைக்குகளில் ஒன்றாகும். பஜாஜ் பிளாட்டினா பைக் ஒரு லிட்டருக்கு 90 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக, இந்த பைக்கை பயன்படுத்தி வரும் பலரும் தெரிவிக்கின்றனர். ஆனால் ஓட்டும் விதம், சாலை மற்றும் பைக்கின் நிலைமை ஆகியவற்றை பொறுத்து, மைலேஜ் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை சேர்ந்த பஜாஜ் நிறுவனத்தின் தயாரிப்பான பிளாட்டினா பைக், சிறப்பான மைலேஜிற்காக வாடிக்கையாளர்கள் அனைவராலும் அறியப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்த பைக் இந்திய சந்தையில் 100 சிசி மற்றும் 110 சிசி என மொத்தம் 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில், பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் ஆரம்ப விலை 65,407 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் பஜாஜ் பிளாட்டினா 110 பைக்கின் ஆரம்ப விலை 69,284 ரூபாயாக உள்ளது. இவை பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100), ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் (Hero Splendor Plus) மற்றும் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) ஆகிய பைக்குகளுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக பஜாஜ் பிளாட்டினா திகழ்கிறது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Friday, December 26, 2025, 23:57 [IST]
English summary
Bajaj platina sales report november 2025 28 13 per cent growth
மேலும்... #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+