ஒரு லிட்டர் பெட்ரோல்ல கோவைல இருந்து ஈரோடு போயிரலாம்! 100 கிமீ மைலேஜ் தரும் பைக்கின் விலை இவ்ளோதானா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina). கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பஜாஜ் பிளாட்டினா பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தால், அறிமுகம் செய்யப்பட்ட 8 மாதங்களிலேயே, 5 லட்சத்திற்கும் அதிகமான பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு விட்டன.
தற்போது பஜாஜ் பிளாட்டினா பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 20 வருடங்களாகி விட்டன. ஆனால் இன்னமும் ஒவ்வொரு மாதமும் பஜாஜ் பிளாட்டினா பைக் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதமும் விதிவிலக்கு அல்ல.

பஜாஜ் பிளாட்டினா பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், பஜாஜ் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், 52,734 பிளாட்டினா பைக்குகளை விற்பனை செய்துள்ளது.
ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 61,689 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 8,955 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 14.52 சதவீத வீழ்ச்சி ஆகும்.

பஜாஜ் பிளாட்டினா பைக் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்திருந்தாலும் கூட, விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்திருப்பது வருத்தமான ஒரு விஷயம்தான். ஆனால் இது ஓரளவிற்கு சிறிய அளவிலான வீழ்ச்சிதான் என்பதால், கூடிய விரைவிலேயே பஜாஜ் பிளாட்டினா பைக், மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 பைக்குகளின் பட்டியலில் (Top 10 Bikes October 2025), பஜாஜ் பிளாட்டினா பைக் 7வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் 6 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor), ஹோண்டா ஷைன் (Honda Shine), பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar), ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe), டிவிஎஸ் அப்பாச்சி (TVS Apache), டிவிஎஸ் ரைடர் (TVS Raider) ஆகிய பைக்குகள் உள்ளன.
இந்த வரிசையில் 7வது இடம் பிடித்துள்ள பஜாஜ் பிளாட்டினா பைக் தற்போதைய நிலையில் மொத்தம் 100 சிசி மற்றும் 110 சிசி என மொத்தம் 2 வெர்ஷன்களில் கிடைத்து வருகிறது. இதில், 100 சிசி மாடலின் ஆரம்ப விலை வெறும் 65,407 ரூபாய் ஆக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் 110 சிசி வெர்ஷனின் விலையும் கூட வெறும் 69,284 ரூபாயாக மட்டுமே இருக்கிறது.
இவை பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்திய சந்தையில் ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஷைன் மற்றும் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் போன்ற பைக்குகளுக்கு எல்லாம் பஜாஜ் பிளாட்டினா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பைக்குகளில் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய பைக்குகளில் ஒன்றாக பஜாஜ் பிளாட்டினா திகழ்கிறது. இந்த பைக் ஒரு லிட்டருக்கு சுமார் 100 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக (இது கிட்டத்தட்ட ஈரோடு-கோவை இடையேயான தொலைவு ஆகும்) அதன் உரிமையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். ஆனால் ஓட்டும் விதம், பைக் மற்றும் சாலையின் கண்டிஷன் போன்ற விஷயங்களை பொறுத்து, மைலேஜ் மாறுபடலாம்.
இருப்பினும் இது மிகவும் சிறப்பான மைலேஜை வழங்க கூடிய பைக்குகளில் ஒன்றுதான். எனவே ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் பிளாட்டினா மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








