ஒரு லிட்டருக்கு 108 கிமீ மைலேஜ்! செல்போன் விலையில் புது பைக்! மொத்த கூட்டமும் ஷோரூம்லதான் இருக்கு!
இந்தியாவில் விலை குறைவான, அதே நேரத்தில் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய பைக்குகளை, வாடிக்கையாளர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். எனவே அனைத்து நிறுவனங்களும், குறைவான விலையில், அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய போட்டி போடுகின்றன.
ஆனால் இதில் ஒரு சில பைக்குகள் மட்டுமே வாடிக்கையாளர்களின் மனதை கவர்கின்றன. அப்படி குறைவான விலை மற்றும் அதிக மைலேஜ் ஆகிய 2 முக்கியமான காரணங்களுக்காக இந்திய வாடிக்கையாளர்களின் மனதை வென்ற ஒரு சில பைக்குகளில், பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina) மிகவும் முக்கியமானது.

பஜாஜ் பிளாட்டினா பைக் கடந்த 2006ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அதன் ஆரம்ப விலை வெறும் 34 ஆயிரம் ரூபாய் மட்டுமே. அந்த சமயத்தில் வெளியான விளம்பரங்களில் பஜாஜ் பிளாட்டினா பைக் ஒரு லிட்டருக்கு 108 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என கூறப்பட்டது.
இதன் காரணமாக வெறும் 8 மாதங்களிலேயே, 5 லட்சத்திற்கும் அதிகமான பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் விற்பனையாகி விட்டன. பஜாஜ் பிளாட்டினா பைக் அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகி விட்ட போதிலும், முன்பு போலவே, இன்னமும் அந்த பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது.

நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 62,260 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம், வெறும் 49,774 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.
அதாவது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 12,486 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பஜாஜ் பிளாட்டினா பைக், விற்பனையில் 25.09 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 பைக்குகளின் பட்டியலில் (Top 10 Bikes September 2025), பஜாஜ் பிளாட்டினா 5வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 4 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஷைன், பஜாஜ் பல்சர் மற்றும் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் ஆகிய பைக்குகள் உள்ளன.
இந்த வரிசையில் 5வது இடம் பிடித்துள்ள பஜாஜ் பிளாட்டினா பைக் தற்போதைய நிலையில் 100 மற்றும் 110 என 2 வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதில், 100 வெர்ஷனின் ஆரம்ப விலை 65,407 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் 110 வெர்ஷனின் ஆரம்ப விலையும் கூட வெறும் 69,284 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பஜாஜ் பிளாட்டினா பைக் ஒரு லிட்டருக்கு 108 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஆரம்பத்தில் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் நடைமுறை பயன்பாட்டில் 90 கிலோ மீட்டர் மைலேஜ் வரை கிடைப்பதாக, அதன் உரிமையாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் மட்டும் 100 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைப்பதாக கூறுகின்றனர். ஓட்டும் விதம், பைக் மற்றும் சாலையின் கண்டிஷன் ஆகியவற்றை பொறுத்து மைலேஜ் மாறுபடலாம்.


Click it and Unblock the Notifications








