2 கோடி யூனிட் சேல்ஸாகிருச்சா! சைலண்டா சாதனை படைத்த பஜாஜ் பைக்.. இதை கொண்டாட ஆஃபரை வாரியிறைச்சிருக்காங்க!

இந்தியாவின் இரண்டு சக்கர வாகனப் பிரிவில் தலைமைப் பதவியை வகிக்கும் நிறுவனங்களில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto Ltd)-வும் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் தயாரிப்பிற்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நம் நாட்டில் மட்டுமல்ல உலக நாடுகள் சிலவற்றிலும் பஜாஜின் தயாரிப்பிற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில், இது டூ-வீலர்களை மட்டுமல்ல மூன்று சக்கர வாகன உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே இந்த நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று 2 கோடி யூனிட்டுகளைக் கடந்து விற்பனையாகிக் கொண்டிருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிறுவனத்தின் பல்சர் (Pulsar) பைக் மாடலே இந்த மாபெரும் சாதனையைப் படைத்திருக்கும் டூ-வீலர் மாடல் ஆகும். இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலேயே இந்த 2 கோடி எனும் விற்பனை எண்ணிக்கையை அது எட்டி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. ஆமாங்க, இந்தியாவில் மட்டுமில்லைங்க உலகளவில் 50 நாடுகளில் பல்சர் பைக் மாடல் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Bajaj pulsar celebrates 2 crore sales milestone

இதனாலேயே இந்த பைக்கால் 2 கோடி யூனிட்டுகள் விற்பனை எனும் அசாத்தியமான சாதனையை எட்டியிருக்கின்றது. இந்த அளவிற்கு பல்சர் பைக்கிற்கு வரவேற்புக் கிடைக்க அதன் மலிவு விலையும் ஓர் முக்கிய காரணமாக உள்ளது. இதுமட்டுமல்ல இந்த பைக்கின் ஸ்போர்ட்டி தோற்றமும் அதற்கு அமோக வரவேற்பு இந்தியா மற்றும் உலக நாடுகளில் கிடைத்துக் கொண்டிருக்க காரணமாக இருக்கின்றது.

அதாவது, மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்போர்ட்டி லுக் பைக்கே இந்த பல்சர் ஆகும். இதுமட்டுமல்ல பிரீமியம் அம்சங்களையும் அது மிக தாராளமாகக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், பன்முக அவதாரங்கள் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதாவது, வெவ்வேறு சிசி திறன்களுடன் பல்சர் பைக் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டுள்ளது.

Bajaj pulsar ns125 abs

மேலும், இப்போது எட்டி இருக்கும் 2 கோடி யூனிட் விற்பனையை ஒட்டி பல்சர் வரிசையில் உள்ள அனைத்து மாடல்களுக்கும் சிறப்பு சலுகையை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. 1,184 ரூபாய் தொடங்கி 7,379 ரூபாய் வரை சேமிப்பை வழங்கக் கூடிய சிறப்பு சலுகையையே அது அறிவித்து இருக்கின்றது.

பல்சர் 125 நியான், 125 கார்பன் ஃபைபர், பல்சர் 150 சிங்கிள் டிஸ்க், பல்சர் 150 ட்வின் டிஸ்க், பல்சர் என் 160 யுஎஸ்டி, பல்சர் என்எஸ் 125 பேஸ் வேரியண்ட், பல்சர் என்எஸ் 125 ஏபிஎஸ், பல்சர் 160 டிடி சிங்கிள் சீட் மற்றும் பல்சர் 220 எஃப் ஆகிய மாடல்களுக்கே சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

Bajaj pulsar ns125 abs

வரும் நாட்களில் பல்சரின் பக்கம் கூடுதல் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கிலேயே தற்போது சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. பஜாஜ் பல்சர் பைக் இந்தியாவில் 2001 ஆம் ஆண்டில் இருந்து விற்பனையில் உள்ளது. இந்த பைக் முதல் ஒரு கோடி யூனிட் விற்பனையை 2018 ஆம் ஆண்டிலேயே எட்டியது.

அதாவது, முதல் ஒரு கோடி யூனிட் விற்பனையாக பல்சருக்கு 17 ஆண்டுகள் வரை ஆகின. ஆனால், அடுத்த ஒரு கோடி விற்பனையை எட்ட அதற்கு 6 ஆண்டுகளே போதுமானதாக அமைந்திருக்கின்றது. 2019 தொடங்கி நடப்பு 2025 ஆம் ஆண்டிற்குள்ளாகவே அது 2 கோடி யூனிட் விற்பனையை எட்டியுள்ளது.

சிறப்பு சலுகை பற்றிய விபரம் பட்டியலாக:

பஜாஜ் பல்சர் எக்ஸ்-ஷோரூம் விலை
(டெல்லி)
சேமிப்பு
125 நியான் ₹84,493 ₹1,184
125 கார்பன் ஃபைபர் ₹91,610 ₹2,000
150 சிங்கிள் டிஸ்க் ₹1,12,838 ₹3,000
150 ட்வின் டிஸ்க் ₹1,19,923 ₹3,000
என்160 யுஎஸ்டி ₹1,36,992 ₹5,811
என்எஸ் 125 பேஸ் வேரியண்ட் ₹99,994 New Attractive
Prices
என்எஸ் 125 ஏபிஎஸ் ₹1,06,739
என் 160 டிடி சிங்கிள் டிஸ்க் ₹1,22,722
பல்சர் 220 எஃப் ₹7,379 சேவிங்ஸ் கிடைக்கும்.
மஹராஷ்டிரா, பிஹார் & மேற்கு வங்கம் மாநிலத்திற்கு மட்டுமே

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவை போலவே உலகின் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் முதல் மற்றும் நம்பர் 2 ஆகிய இடங்களை பல்சர் பைக் மாடல் பிடித்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் விளைவாகவே இந்த பைக் மாடல் மொத்த டூ-வீலர் மார்கெட்டையும் மிரட்டிவிடும் வகையில் 2 கோடி யூனிட் விற்பனையை எட்டி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 1, 2025, 22:17 [IST]
English summary
Bajaj pulsar celebrates 2 crore sales milestone with special pricing for enthusiasts
மேலும்... #bajaj auto #bajaj pulsar #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X