திடீரென பல்சர் பைக்கின் விற்பனையை நிறுத்திய பஜாஜ்! அதிர்ச்சியில் உறைஞ்சிட்டாங்க!

பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் என் 150பைக்கை தற்போது விற்பனையில் இருந்து நீக்கியுள்ளது. இந்த பைக் விற்பனைக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது இதை விற்பனையில் இருந்து நீக்கியுள்ளது. இதற்கான காரணம் என்ன?ஏன் விற்பனை நிறுத்தப்பட்டது? முழுமையான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பஜாஜ் நிறுவனம் பல்சர் என்ற பைக்கை நீண்ட ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறது. இதில் வேறு வகையான பைக்குகளை தயாரித்து விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் என்150 என்ற பைக்கை அறிமுகப்படுத்தியிருந்தது. என் 160 ஸ்டைலில் பல்சர் பி150 இன்ஜினை கொண்டு இந்த பைக்கை உருவாக்கியது.

Bajaj Pulsar N150

Img: Pulsar N 150

கடந்த 2 ஆண்டுகளாக இந்த பைக் நன்றாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விற்பனை பெரிய அளவில் இல்லை என கூறப்படுகிறது. இதனால் இந்த பைக்கை தற்போது தனது அதிகாரப்பூர்வமான தளத்திலிருந்து நீக்கியுள்ளது. ஆட்டோ ஹிந்துஸ்தான் தளத்தின் உள்ள தரவுகளின்படி இந்த பைக் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே டீலர் ஷிப்களில் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டது. இருந்தாலும் ஸ்டாக்கை காலி செய்ய சில மாதம்ஆகியுள்ளது.

தற்போது ஸ்டாக் தீர்ந்ததால் இந்நிறுவனம் வெப்சைட்டிலிருந்து இந்த பைக்கை நீக்கி அதிகாரப்பூர்வமாக இந்த பைக் விற்பனையிலிருந்து நீக்கப்பட்டதாக அறவித்துள்ளது. இந்த பல்சர் என்150 பைக்கை பொருத்தவரை ரூ1.18 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 149 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 14.3 பிஎச்பி பவரையும் 13.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Bajaj Pulsar N150

Img: Pulsur N160

இந்தபைக்கிங் முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் மோனோஷாக் சன்பென்சன் செட்டப் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் புரோஜெக்டர் ஹெட்லைட்டுகள், ஆங்குலர் பாடி பேனல்கள் உள்ளது. இந்த பைக்கில் சிங்கிள் பீஸ் சீட் உள்ளது. பின்பக்கம்பெரிய அகலமான டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்ப்க்கம் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

பல்சர் என்160 பைக் மார்கெட்டில் ரூ1.23 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வரும் நிலையில் அதை விட இந்த பைக் விலை சுமார் 5 ஆயிரம் தான் குறைவு என்பதால் மக்கள் பலர் என்160 பைக்கை அதிகம் தேர்வு செய்ய துவங்கிவிட்டனர். இதனால் இந்த பைக்கின் விற்பனை சரிவடைந்ததாக கூறப்படுகிறது.

Bajaj Pulsar N150

img: Pulsar N160

கடந்த சில மாதங்களாகவே இந்த பைக்கின் விற்பனை இல்லாமல் இருந்தது. இந்த பைக்கை விரும்பி கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இருக்கும் ஸ்டாக்கில் இருந்து பைக்கை விற்பனை செய்து வந்தனர். தற்போது முற்றிலுமாக ஸ்டாக் தீர்ந்த நிலையில் இந்த பைக்கை தற்போது பஜாஜ் நிறுவனம் முழுவதுமாக விற்பனையில் இருந்து நீக்கியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் பல்சர் பைக்கிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பல இளைஞர்களின் கனவு பைக்காக இந்த பைக் இருக்கும் நிலையில் இதன் ஒரு குறிப்பிட்ட வகை மட்டுமே தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற பல்சர் பைக்குள் எல்லாம் தற்போது சிறப்பாக விற்பனையாகி வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 16, 2025, 16:40 [IST]
English summary
Bajaj pulsar n150 discontinued in india removed from website
மேலும்... #bajaj auto
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X