குடும்பங்கள் கொண்டாடும் பைக்காக மாறிய பல்சர் 160! இந்த பைக்குல இப்படி ஒரு வசதியா?

பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் தனது பல்சர் என் 160 பைக்கின் புதிய வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது.இதில் தலைகீழாக பொருத்தப்பட்ட யூஎஸ்டி ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளுது. இந்த பைக் ரூ1.23 லட்சம் என்ற விலையிலங் விற்பனைக்கு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பஜாஜ் நிறுவனம் தனது 160 சிசி செக்மெண்டை விரிவாக்கும் வகையில் புதிய வேரியன்டை வெளியிட்டுள்ளது. இந்த செக்மெண்டில் விற்பனைக்கு அதிகமான வாய்ப்பு இருக்கும் காரணத்தாலும், இந்த செக்மெண்டில் போட்டி வரும் என்ற காரணத்தலா்ல புதிய வேரியன்டை வெளியிட்டுள்ளது. இதில் முக்கியமாக தங்க நிற யூஎஸ்டி ஃபோர்க் தலை கீழாக பொருத்தப்பட்டுள்ளுது. மேலும் இதில் ஸ்பிளிட் சீட் இல்லாமல் சிங்கிள் சீட் வழங்கப்பட்டுள்ளது.

Bajaj Pulsar N160

இதில் மாற்றப்பட்ட யூஎஸ்டி ஃபோர்க் முன்பக்க சஸ்பென்சனில் ரைடருக்கன செளகரியத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் பயன்படுத்த ஏற்ற பைக்காக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதன் ஃபிளாட்ஃபார்மை மாற்றாமல் சில மெக்கானிக்கல் அம்சங்களை மட்டும் மாற்றியுள்ளனர்.

இந்த பைக் என்-சிரீஸ் டிசைன் மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது. தங்க நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட யூஎஸ்டி ஃபோர்க், விஷூவலாக வித்தியாசத்தை காட்டுகிறது. இது போக இந்த பைக் 4 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பியர்ல் மெட்டாலிக் ஒயிட், ரேஸிங் ரெட், போலார் ஸ்கை ப்ளூ, பிளாக் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்கள் உள்ளது. இந்த பைக் என் சிரீஸ் ரேஞ்சில் உள்ள பைக்காக உள்ளுது.

பஜாஜ் நிறுவனம் நடத்திய ஆய்வில் பல்சர் என்160 பைக்கைவாங்குபவர்கள் பெரும்பாலும் குடும்பஸ்தர்களாக உள்ளனர். அவர்கள் சிங்கிள் பீஸ் சீட்டை தான் விரும்புகின்றனர். அவர்களுக்கு ஸ்பிளிட் சீட் அசெளகரியமாக இருப்பதாக கண்டறிந்தனர். இதனால் இந்த பைக்கில் சிங்கிள் பீஸ் சீட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை அதே 164 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் தான் வழங்கப்ப்டடுள்ளுது. இது 15 எச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த பைக் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளுது. இதன் பிரேக்கிங் அம்சங்களை பொருத்தவரை முன்பக்கம் 300 மிமி டிஸ்க் மற்றம் பின்பக்கம் 230 மிமீ டிஸ்க் வழங்கப்ப்டடுளு்ளது. இது போக ஏபிஎஸ், பின்பக்கம் நிட்ராக்ஸ் மோனோஷாக் சஸ்பென்சன் 17 இன்ச் வீல் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இது போக இந்த பைக்கில் எல்இடி லைட்டிங், டர்ன் பை டர்ன் நேவிகேஷன்ல, ஏபிஎஸ் மோடுகள், யூஎஸ்பி கனெக்டிவிட்டி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. டுயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட தனி வேரியன்ட் உள்ளது. இந்த பைக் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கலாம். பல்சர் என்160 பைக்கைவாங்குபவர்கள் பெரும்பாலும் குடும்பஸ்தர்களாக உள்ளனர். இதனால் குடும்பங்கள் கொண்டாடும் பைக்காக இந்த பைக் மாறினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று 160 சிசி செக்மெண்ட் குடும்பத்தினருக்க ஏற்ற வாகனமாக மாறிவிட்டது. இதனால் அதற்கு ஏற்றார் போல மாற்றங்கள் செய்யப்பட்டது வரவேற்க்கதக்கதுதான் இந்த பைக் விற்பனை விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, December 5, 2025, 15:59 [IST]
English summary
Bajaj pulsar n160 new variant usd forks price details
மேலும்... #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+