சோகத்துக்கே சோகம் தரும்.. பஜாஜ் நிறுவனத்துக்கு யாராச்சும் சூன்யம் வச்சுட்டாங்களா? வரிசையாக அகற்றப்படும் பைக்!
இந்தியாவைச் சேர்ந்த முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) உள்ளது. இந்த நிறுவனமே தொடர்ச்சியாக தன்னுடைய இரண்டு சக்கர வாகனங்களை விற்பனையில் இருந்து அகற்றி வருவதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் புத்தாண்டின் தொடக்கத்தை புதிய வாகனங்களால் வரவேற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தமாதிரியான சூழலில் பஜாஜ் மட்டும் இந்த விநோத நடவடிக்கையில் களமிறங்கி இருக்கின்றது. இது பஜாஜ் டூ-வீலர் பிரியர்களைச் சோகத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
நிறுவனம், பல்சர் (Pulsar) வரிசையில் விற்பனைக்குக் கிடைத்து வந்த பல்சர் எஃப்250 (Pulsar F220) மாடலை விற்பனையில் இருந்து அகற்றியதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்றையே தினமே இந்த தகவல் வெளியானது. இந்த அதிர்ச்சியின் அதிர்வலைகள் ஓய்வதற்குள்ளாக அந்த நிறுவனம் இன்னும் சில பைக் மாடல்களையும் விற்பனையில் இருந்து வெளியேற்றி இருப்பதாக கூடுதல் ஷாக்கான தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிளாட்டினா 110 ஏபிஎஸ் (Platina 110 ABS), சிடி 125எக்ஸ் (CT125X) ஆகிய மாடல்களையே அது விற்பனையில் இருந்து அகற்றி இருக்கின்றது. இந்த புத்தாண்டு மூன்று நாட்கள் முழுமையாக முடிவடைவதற்குள்ளாக நிறுவனம் மூன்று முன்னணி பைக் மாடல்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றி இருக்கின்றது.
இந்த தகவல் இரண்டு சக்கர வாகன காதலர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய வாகன உலகத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. மலிவான விலையில் ஏபிஎஸ் வசதியுடன், அதாவது, ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டத்துடன் விற்பனைக்குக் கிடைத்து வந்ததே பிளாட்டினா 110 ஏபிஎஸ் இது விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டு இருப்பதுதான் அதிர்ச்சியின் உச்சம்.

இதுமட்டுமில்லைங்க, ஏழை மற்றும் எளிய மக்கள் அதிகம் விரும்பி வந்த பைக் மாடல்களில் ஒன்றாக சிடி 125எக்ஸ் இருக்கின்றது. இதுவும் தற்போது விற்பனையில் இருந்து அகற்றப்பட்டு இருப்பதும் அதிர்ச்சியின் உச்சகட்டமாக உள்ளது. ஆகையால், 2025 ஆம் ஆண்டின் தொடக்கமே பஜாஜ் நிறுவனத்திற்கும், அதன் ரசிகர்களுக்கும் மிகவும் மோசமானதாக அமைந்திருக்கின்றது.
விற்பனை வரவேற்புக் குறைவு என்கிற காரணத்தினாலேயே இவை மூன்றும் தற்போது விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றன. இந்த மூன்று பைக் மாடல்களும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு உள்ளாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டவை என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, பல்சர் எஃப்220 மாடலை சென்ற ஆண்டின் மத்தியிலேயே பல்வேறு புதிய அம்சங்களைச் சேர்த்து விற்பனைக்குக் கொண்டு வந்தது.

இருப்பினும், அதனால் இந்தியர்களின் மனதைக் கவர முடியவில்லை. இதன் விளைவு தற்போது அது விற்பனையில் இருந்தே அகற்றப்பட்டு இருக்கின்றது. இவற்றின் வெளியேற்றத்திற்கு மிக முக்கியமான காரணமே வரவேற்பு இல்லாததுதான். தொடர்ந்து, வரவேற்பு இல்லாத பைக் மாடல்களை அகற்றிவிட்டு வரவேற்புக் கிடைக்கும் வாகனங்கள் மீது முக்கியத்துவம் செலுத்த வேண்டும் என்பதும் பஜாஜின் நோக்கமாக உள்ளது.
இதன் விளைவாகவே அதிரடியாக ஆண்டின் தொடக்கம் என்றும் பார்க்காமல் அதிரடியாக அடுத்தடுத்து என மூன்று பைக் மாடல்களை பஜாஜ் ஆட்டோ விற்பனையில் இருந்து வெளியேற்றி இருக்கின்றது. இந்தியாவில் பிளாட்டினா 110 ஏபிஎஸ் 125 சிசி பைக்குகள் பிரிவிலேயே விற்பனைக்குக் கிடைத்து வந்தது.
ரூ. 72,224 என்கிற மிகவும் குறைவான விலையிலேயே அது விற்பனைக்குக் கிடைத்தது. இதன் முதல் அறிமுகம் 2022 ஆம் ஆண்டிலேயே அரங்கேறியது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே தற்போது அப்பைக் மாடல் வெளியேற்றப்பட்டு இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக சிடி 125எக்ஸ் மாடல் உள்ளது. இதுவும் ஓர் 125சிசி பைக் மாடல் ஆகும்.
100 மற்றும் 110 ஆகிய சிசி பைக் மாடல்களைக் காட்டிலும் அதிகம் பிரீமியம் அம்சங்களைத் தாங்கியதாகவே இது விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது. இந்தியாவில் 125 சிசி பைக் பிரிவிற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதைக் கருத்தில் கொண்டே நிறுவனம் இந்த பைக்குகளை விற்பனைக்குக் கொண்டு வந்தது. ஆனால், சந்தை இதற்கு போதிய வரவேற்பை வழங்கவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனத்திடம் இருந்து மூன்று பைக் மாடல்கள் விற்பனையில் இருந்து அகற்றப்பட்டு இருந்தாலும், விரைவில் இன்னும் சில புதமுக மற்றும் சிறந்த பைக் மாடல்கள் விற்பனைக்கு வர காத்திருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் சமீபத்தில்கூட புதிய பைக்கின் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக ஓர் டீசர் வீடியோவை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









