இந்த இந்திய தயாரிப்பு தான் வேணும் கேட்டு வாங்கும் வெளிநாட்டு மக்கள்! நமக்கு தான் அருமை தெரியல!

கடந்த ஜூலை மாதம் பஜாஜ் நிறுவனம் மொத்தம் 3,66,000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது உள்ளூர், மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி ஆகிய இரண்டு விற்பனையும் சேர்த்ததாக இருக்கிறது. இந்நிறுவனம் டூவீலர் மற்றும் கமர்ஷியல் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ள நிலையில் வரிசையாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த ஜூலை மாத விற்பனை விபரங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாத விற்பனை விபரங்களை பஜாஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 3,66,000 வாகனங்கள் விற்னையாகியுள்ளது.

Bajaj Sales July 2025

இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் வெறும் 3,54,169 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தத ஜூன் மாதம் 3,60,806 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதை எல்லாம் ஒப்பிடும் போது வருடாந்திர விற்பனையிலும், மாதாந்திர விற்பவனையிலும் வளர்ச்சியை பெற்றுள்ளது.

இதில் டூவீலர் விற்பனையில் இந்நிறுவனம் உள்நாட்டில் 1,39,279 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 1,68,847 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 18 சதவீத விற்பனை வீழ்ச்சியாகும். ஏற்றுமதியை பொருத்தவரை கடந்த ஜூலை மாதம் 1,56,968 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 1,28, 694 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 22 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.

Bajaj Sales July 2025

கமர்ஷியல் செக்மெண்டை பொருத்தவரை கடந்த ஜூலை மாதம் உள்நாட்டில் 43,864 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 42,150 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 4 சதவீத விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதியை பொருத்தவரை 25,889 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இதுவே கடந்த 2024 ஜூலை மாதம் 14,478 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது. இது 79 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

ஒட்டு மொத்த விற்பனையை பொருத்தவரை இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 3,66,000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டில் 1,83,143 வாகனங்களும், ஏற்றுமதியில் 1,82,857 வாகனங்களும் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 2,10,997 வாகனங்கள் உள்நாட்டிலும், 143,172 வாகனங்கள் வெளிநாட்டிலும் விற்பனையாகியுள்ளது. மொத்தம் 3,54,169 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதை ஒப்பிடும் போது தற்போது 3 சதவீதம் விற்பனையாகியுள்ளது.

Bajaj Sales July 2025

இதை பார்க்கும் போது இந்தியாவில் இந்த வாகனத்தின் விற்பனை குறைந்துள்ளது. அதே நேரம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் எண்ணிக்கை கணிசமாக அதிகமாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கணிசமான அளவு பஜாஜ் பைக்குளை இந்தியாவில் வாங்கவில்லை. வெளிநாட்டில் வாங்கி குவிக்கிறார்கள் என்பது தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனம் உள்நாட்டை விட வெளிநாட்டில் கவனம் செலுத்தியதால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.இனி தன் தயாரிப்புகளை உள்நாட்டு தேவைகளுக்கு தகுந்தார் போல மாற்றினால் விற்பனைஅதிகமாகும். அத நேரம் ஏற்றுமதியும் சிறப்பாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 1, 2025, 16:30 [IST]
English summary
Bajaj sales july 2025 domestic drop export growth report
மேலும்... #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X