கம்பேக் கொடுக்கும் பஜாஜின் பழைய பைக் மாடல்.. அதுவா இருக்குமோ... இல்ல இதுவா இருக்குமோ.. டீசர் என்ன சொல்கிறது?..

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), நிறுவனத்தின் பழைய பைக் மாடல் ஒன்று இந்தியாவில் சீக்கிரமே கம்பேக் (Comeback) கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதாவது, முன்னதாக நிறுவனத்தின் கீழ் விற்பனையில் இருந்த பைக் மாடல் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறங்க இருக்கின்றது. சமீபத்தில், பஜாஜ் நிறுவனம் ஓர் டீசர் (Teaser)-ஜ வெளியிட்டு இருந்தது. அந்த டீசர் நிறுவனத்தின் புதிய பைக்கின் வருகையை உறுதிப்படுத்தும் இருந்தது. மேலும், டீசர் படத்தை வெளியீட்டைத் தொடர்ந்து பலரும் பல்வேறு விதமான கருத்துகளை முன் வைத்தனர்.

மிக முக்கியமாக இந்த டீசர் படம் 'ஆர்எஸ் 400இசட்' (RS 400Z) மாடலுக்கானது என்றும், விரைவில் இதையே பஜாஜ் ஆட்டோ விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இந்த நிலையிலேயே தற்போது மீண்டும் ஓர் புதிய டீசர் வெளியாகி இருக்கின்றது.

Bajaj teases upcoming new pulsar

இந்த டீசர் படமே முன்னதாக விற்பனையிலிருந்து அகற்றப்பட்ட பைக் மாடலை பஜாஜ் மீண்டும் புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றது. ஆனால், இதுகுறித்து இன்னும் முழுமையான அதிகாரப்பூர்வ வார்த்தைகள் பஜாஜிடம் இருந்து வெளியாகவில்லை. அதேநேரத்தில், புதிய பைக்கின் நிழற்படத்துடன் சேர்த்து 'பல்சர்' மற்றும் 'நினைவுகள் திரும்புதல்' என்கிற வாக்கியங்களைக் கொண்ட புதிய டீசரை பஜாஜ் வெளியிட்டு இருக்கின்றது.

இதை வைத்தே முன்பு விற்பனையிலிருந்து அகற்றப்பட்ட புல்சர் பைக் மாடலே மீண்டும் தன்னுடைய மறுவருகையை பதிவு செய்ய இருக்கின்றது என மிகவும் உறுதியாக நம்பப்படுகின்றது. மேலும், பல்சர் ஆர்எஸ் என்கிற வெர்ஷனாகவே அது விற்பனைக்கு வரும் என்றும் நம்பப்படுகின்றது. இந்த பைக் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியீட்டைக் காண இருப்பது மட்டும் உறுதியாகி இருக்கின்றது.

அந்தவகையில், வருகின்ற 09 ஆம் தேதிக்குள் பஜாஜின் இந்த பைக் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பைக் மாடல் பல்சர் வரிசையில் இணைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 160 சிசி அல்லது 200 சிசி அல்லது 400 சிசி இந்த மூன்றில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த மூன்றில் எதுவாக இருந்தாலும் முன்பு விற்பனையில் இருந்ததைக் காட்டிலும் மிக அதிக அழகான, அதிக சிறப்பம்சங்களை தாங்கிய மற்றும் அட்வான்ஸ்டு அம்சங்களைத் தாங்கியதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், அப்சைடு டவுன் ஸ்போர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன் ஆகியவை சிறந்த ரைடு அனுபவத்திற்காக இந்த பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்துடன், இரண்டு வீல்களிலும் டிஸ்க் (Disc) பிரேக்குகள், ஏபிஎஸ் (ABS) ஆகியவையும் புதிய பஜாஜ் பைக்கில் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது. இதுமட்டுமல்ல, அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய டிஜிட்டல் கன்சோல், ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் இந்த பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த அம்சத்தின் வாயிலாக பைக்கையும், செல்போனையும் இணைக்கும்பட்சத்தில் செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் பிற நோடிஃபிகேஷன்களை செல்போன் திரையிலேயே பார்த்துக் கொள்ள முடியும். இதுதவிர, பைக் பற்றிய முக்கிய தகவல்களை செல்போனிலேயே பார்த்துக் கொள்ள முடியும். இப்போதைய இந்த தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் புதிய பஜாஜ் பைக் பற்றிய பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் டூ-வீலர் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டுருக்கின்றது. இந்த நிலையிலேயே பல்சருக்கு வலுசேர்க்கும் விதமாக புதிய அம்சங்களுடன் தன்னுடைய இந்த பல்சரை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் பஜாஜ் நிறுவனம் தற்போது களமிறங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, January 6, 2025, 15:18 [IST]
English summary
Bajaj teases upcoming new pulsarspeculations on model name and features
மேலும்... #bajaj auto #bajaj pulsar #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+