நம்ப முடியாத குறைவான விலையில் களமிறங்கும் புதிய பஜாஜ் பைக்! மார்க்கெட்டை மொத்தமா பிடிக்க போறாங்க!
இந்திய சந்தையில் 125 சிசி பைக்குகளுக்கு (125 cc Bikes) வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும், 125 சிசி செக்மெண்ட்டில் புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. இதில், பஜாஜ் (Bajaj) நிறுவனமும் ஒன்றாகும்.
தற்போதைய நிலையில் 125 சிசி செக்மெண்ட்டில் 4 பைக்குகளை பஜாஜ் விற்பனை செய்கிறது. அவை பஜாஜ் பல்சர் 125 (Bajaj Pulsar 125), பஜாஜ் பல்சர் என்125 (Bajaj Pulsar N125), பஜாஜ் பல்சர் என்எஸ்125 (Bajaj Pulsar NS125) மற்றும் பஜாஜ் ஃப்ரீடம் சிஎன்ஜி 125 (Bajaj Freedom CNG 125) ஆகியவை ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பஜாஜ் நிறுவனத்தின் 125 சிசி பைக்குகளின் ஆரம்ப விலை 85 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் பஜாஜ் நிறுவனத்தின் 125 சிசி பைக்குகளின் அதிகபட்ச விலை 1.11 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இந்த சூழலில் பஜாஜ் நிறுவனம் புத்தம் புதிய 125 சிசி பைக் ஒன்றை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய தயாரிப்புதான் பஜாஜ் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான 125 சிசி பைக்காக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

அனேகமாக பஜாஜ் நிறுவனத்தின் புதிய 125 சிசி பைக்கின் ஆரம்ப விலை 80 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் பஜாஜ் நிறுவனத்தின் இந்த புதிய 125 சிசி பைக் 2026ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதைபோல், இந்தியாவின் 125 சிசி செக்மெண்ட்டை சேர்ந்த பைக்குகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த செக்மெண்ட்டை சேர்ந்த பைக்குகள் ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன.
எனவே பஜாஜ் நிறுவனம் தொடர்ச்சியாகவே இந்த செக்மெண்ட்டில் புதிய பைக்குகளை விற்பனைக்கு களமிறக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம், பஜாஜ் ஃப்ரீடம் சிஎன்ஜி 125 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுதான் உலகின் முதல் சிஎன்ஜி பைக் (World's First CNG Bike) ஆகும்.
இந்த வரிசையில்தான் 125 சிசி செக்மெண்ட்டில் மற்றொரு புதிய பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்ய பஜாஜ் நிறுவனம் தயாராகி வருவதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் பஜாஜ் நிறுவனத்தின் புதிய 125 சிசி பைக்கின் இன்ஜின், வசதிகள் மற்றும் தொழில்நுட்ப விபரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் தற்போது வெளியாகவில்லை. வரும் மாதங்களில் அவை ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பைக்கிற்காக உங்களை போலவே, நாங்களும் ஆர்வமுடன் காத்து கொண்டுள்ளோம்.


Click it and Unblock the Notifications








