ஒரே குடும்பத்திடம் 20ஸ்கூட்டரா! அனைத்தும் ஒரே பிராண்டுடையதா! ஆக்டிவா கிடையாது.. இத தமிழ்நாட்டுல தயாரிக்கிறாங்க

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் ஒரே நிறுவனத்தின் ஸ்கூட்டர் மாடலை பயன்படுத்தி வருவதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு குடும்பத்திடம் ஒன்று அல்லது இரண்டு ஸ்கூட்டர்கள் இருப்பதை வேண்டுமானால் நாம் பார்த்திருப்போம். அதுவும் அவை வெவ்வேறு பிராண்டுகளுடையதாகவே இருக்கும். உதாரணமாக, ஓர் வீட்டில் இரண்டு இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்றால், ஒருவர் ஹோண்டா டியோ பயன்படுத்தினால் மற்றொருவர் யமஹா ரே இசட்ஆர் மாடலை பயன்படுத்துவார். இவ்வாறு மாறுபட்ட ரசனையிலேயே அவர்கள் டூ-வீலரை வாங்கியிருப்பர்.

அப்படியே ஒரே மாடல்தான் வாங்க வேண்டும் என்றாலும் ஒன்று அல்லது இரண்டு யூனிட்டுகளை மட்டுமே வாங்குபவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். உதாரணமாக, ஒரு சிலர் குறிப்பிட்ட வாகனத்தின் அதிக மைலேஜ் திறன் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவில் மயங்கி அதன் ஒரு சில யூனிட்டுகளை வீட்டில் வாங்கி வைப்பர். எடுத்துக் காட்டாக ஹோண்டா ஆக்டிவாவை கூறலாம்.

Bengaluru family owns 20 ather scooters

ஒரே வீட்டில் இரண்டு என்ன மூன்று யூனிட்டுகள்கூட இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், இங்கோ 20 பேரும் ஒரே பிராண்டுடைய தயாரிப்பையே பயன்படுத்தி வருகின்றனர். இதுவே நம்மில் பலருக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

கோத்தாரி குடும்பம், எனும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேரே ஒரே பிராண்டின் தயாரிப்பை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் பயன்படுத்தி வருவது ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆகும். ஆமாங்க, இந்த நிறுவனம் தயாரிக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே கோத்தாரி குடும்பத்தைச் சேர்ந்த மொத்த பேரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த தகவலை ஏத்தர் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான தருண் மேத்தாவும் உறுதிப்படுத்தி இருக்கின்றார். இந்த குடும்பத்தைச் சென்ற ஆண்டு நடைபெற்ற ஏத்தர் கம்யூனிட்டி தினத்திலேயே அவர் முதல் முறையாக சந்தித்திருக்கின்றார். அப்போது அவர்களில் 10 பேர் மட்டுமே ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்டுத்தி வந்திருக்கின்றனர்.

ஆனால் இப்போது அந்த பத்து என்பது 20ஆக அதிகரித்திருக்கின்றது. அந்த 20 பேரும், 20 ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் நிற்கும் படத்தையே இப்போது தருண் மேத்தா வெளியிட்டுள்ளார். இதன் வாயிலாக குடும்பங்கள் விரும்பும் இ-ஸ்கூட்டர் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பது தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக, இதன்மீது ஏற்பட்ட அதீத நம்பிக்கையே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேரும் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்தத் தொடங்கி இருக்காங்க.

ஏத்தர் 450 சீரிஸையே அவர்களில் அதிக பேர் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் ஏத்தர் ரிஸ்தா-வையும் பயன்படுத்தி வருகின்றனர். முழுக்க முழுக்க குடும்ப பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலே ரிஸ்தா ஆகும். இருக்கைக்கு அடியில் பெரிய ஸ்டோரேஜை இதில் நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

அதில், வீட்டுக்கு தேவையான பொருட்களை அதிகளவில் நிரப்பிக் கொள்ள முடியும். அத்துடன், இரண்டு ஹெல்மெட்டுகள் வரை அதில் வைத்துக் கொள்ள முடியும். ஏத்தர் நிறுவனத்தின் 450 சீரிஸைக் காட்டிலும் பலநிலைகளில் மாறுபட்டதாகவும் இந்த ரிஸ்தா காட்சியளிக்கின்றது. 450 சீரிஸ் உள்ள அனைத்து மாடல்களும் ஸ்போர்ட்டி லுக் மற்றும் அதிக ஆற்றலை வெளியேற்றக் கூடியதாக இருக்கும்.

ஆனால், ரிஸ்தா வயதனாவர்களும் பயணிக்க உகந்தது என நிறுவனம் தெரிவிக்கின்றது. இதன் அடிப்படையிலேயே பெரிய இருக்கை வசதியும் அதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கும் இருக்கையை விட அது சற்று பெரிதாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

ஏத்தர் ரிஸ்தா 99,999 ரூபாய்-க்கும், 450எஸ் 1,19,999 ரூபாய்க்கும், 450எக்ஸ் 1,46,999 ரூபாய்க்கும் மற்றும் 450 அபெக்ஸ் ரூ. 1,99,999-க்கும் விற்கப்படுகின்றது. அனைத்தும் ஆரம்ப விலைகள் ஆகும். இதேபோல், அவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், இந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஓசூரிலேயே அமைந்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்தி வருவது உள்ளது. குறிப்பாக, குடும்பங்களுக்கான வாகனமான ரிஸ்தாவிற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 8, 2025, 17:36 [IST]
English summary
Bengaluru family owns 20 ather electric scooters a trust story
மேலும்... #ather energy #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+