2 லட்ச ரூபா கூட செலவு பண்ண வேண்டாம்... காஸ்ட்லீயான பைக்குகளை பார்த்துட்டு கடைசியா இதில் ஒன்றைதான் வாங்குறாங்க!
இந்தியாவில் 100சிசி பைக்குகள் எல்லாம் எப்போதோ ஓரங்கட்டப்பட்டு விட்டன. தற்போது குறைந்த சிசி என்ஜின் என்று பார்த்தாலே 110சிசி தான். ஓரளவிற்கு பவர்ஃபுல்லான பைக்கை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், 125சிசி பைக்குகள் சரியானவை ஆக இருக்கும். 125சிசி பைக்குகள் குறைந்த விலையிலும் கிடைக்கின்றன, அதேநேரம் கேடிஎம் 125 ட்யூக் போன்ற விலையுயர்ந்த 125சிசி பைக்குகளும் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. நாம் இந்த தொகுப்பில் போதுமான அளவிற்கு செயல்திறன்மிக்க மற்றும் ஸ்டைலிஷான 125சிசி பைக்குகளை பற்றி பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider 125): இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் 125சிசி பைக்குகளுள் இதுவும் ஒன்றாகும். ஏனெனில், இளைஞர்களையும் கவரும் அளவிற்கு ஸ்டைலிஷான தோற்றத்தை கொண்டதாக ரைடர் 125 பைக் விளங்குகிறது. இந்த டிவிஎஸ் 125சிசி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.85,010இல் இருந்து துவங்குகின்றன.

அதிகப்பட்சமாக ரூ.1.04 லட்சம் வரையில் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் உள்ளன. இந்த பைக்கில் பொருத்தப்படும் 124.8சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 11.38 பிஎஸ் மற்றும் 11.2 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
இளம் தலைமுறையினரை கவரும் விதமாக எல்இடி டிஆர்எல்-கள் உடன் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில்லைட், ஹலோஜன் இண்டிகேட்டர்கள், யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட், ஐடியல் ஸ்டாப்/ ஸ்டார்ட் பொத்தான், எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இவற்றுடன், ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என்கிற 2 விதமான ரைடிங் மோட்கள் (Riding Modes) கூட இந்த பைக்கில் வழங்கப்படுகின்றன.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் (Hero Xtreme 125R): மேலே கண்ட டிவிஎஸ் ரைடர் 125 பைக்கிற்கு நேரெதிர் போட்டியாக விளங்கும் 125சிசி பைக் இதுவாகும். இன்னும் சொல்லப்போனால், கடந்த சில மாதங்களாக ரைடர் 125 பைக்கை காட்டிலும் எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கை அதிக பேர் வாங்கி வருகின்றனர்.

ஹீரோ மோட்டோகார்பின் இந்த பிரீமியம் தரத்திலான 125சிசி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.96,425இல் இருந்து ரூ.1 லட்சம் வரையில் உள்ளன. இந்த பைக்கில் பொருத்தப்படுகின்ற 124.7சிசி என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 11.55 பிஎஸ் மற்றும் 10.5 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கிலும் எல்இடி டி.ஆர்.எல்-கள் உடன் எல்இடி புரோஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதி உடன் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் (Single-Channel ABS) வசதி கிடைக்கக்கூடிய இந்த ஹீரோ 125சிசி பைக்கை கோபால்ட் நீலம், ஃபையர்ஸ்டோர்ம் சிவப்பு அல்லது ஸ்டாலியன் கருப்பு நிறத்தில் வாங்கலாம்.
பஜாஜ் பல்சர் என்160 (Bajaj Pulsar N160): பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் இருந்து சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் பல்சர் பைக்குகளுள் இதுவும் ஒன்றாகும். ரூ.1.23 லட்சத்தில் இருந்து ரூ.1.37 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் தற்சமயம் விற்பனை செய்யப்படுகிறது.

பல்சர் என்160 பைக்கில் பொருத்தப்படுகின்ற 164.82சிசி ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 16 பிஎஸ் மற்றும் 14.65 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த பல்சர் பைக்கிலும் முன்பக்கத்தில் எல்இடி டிஆர்எல்-கள் உடன் எல்இடி புரோஜெக்டர் ஹெட்லைட் வழங்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், ஸ்விட்ச் கியர் கண்ட்ரோல்கள் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. பல்வேறு விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் பல்சர் என்160 பைக்கில் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வசதி, ரைடிங் மோட்கள் மற்றும் டபுள் டிஸ்க் பிரேக்குகள் போன்றவையும் இடம்பெறுகின்றன.
ஹோண்டா எஸ்பி 160 (Honda SP160): ஹோண்டா நிறுவனத்தில் இது பிரபலமான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றாகும். ரூ.1.22 லட்சம்- ரூ.1.28 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்படும் இந்த பைக்கில் 162.71சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்படுகிறது.

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 13 பிஎஸ் மற்றும் 14.8 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. 4.2-இன்ச் டிஎஃப்டி ஸ்க்ரீன், ஹோண்டா ரோடுசின்க் செயலி, ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி, யுஎஸ்பி-சி சார்ஜிங் வசதி உள்ளிட்டவை இந்த பைக்கில் வழங்கப்படும் முக்கியமான அம்சங்கள் ஆகும்.
பேர்ல் இக்னியஸ் பிளாக், பேர்ல் டீப் கிரவுண்ட் கிரே மற்றும் ஆத்லெடிக் ப்ளூ மெட்டாலிக் கலர் ஆப்ஷன்களில் இந்த ஹோண்டா 125சிசி பைக் கிடைக்கிறது. சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடன் கிடைக்கும் இந்த பைக்கில் டபுள் டிஸ்க் பிரேக்குகள் பாதுகாப்புக்கு பொருத்தப்படுகின்றன. 138 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் 12 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் வழங்கப்படுகிறது.
யமஹா எஃப்.இசட்-எஸ் ஃப்யுல்-இன்ஜெக்டட் ஹைப்ரீட் (Yamaha FZ-S Fi Hybrid): இந்த லிஸ்ட்டில் நாம் பார்க்கும் பைக்குகளிலேயே கொஞ்சம் விலைமிக்கது இதுவாகும். இந்த ஹைப்ரீட் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.49 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. இந்த யமஹா பைக்கில் 149சிசி என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இவற்றை விட முக்கியமானது, இது ஹைப்ரீட் மோட்டார்சைக்கிள் ஆகும். அதாவது, பைக்கின் என்ஜின் ஆனது எலக்ட்ரிக் பவரின் மூலமாக இயங்கக்கூடியது. இதன் மூலம் பைக்கில் இருந்து அதிக மைலேஜ் கிடைக்கும். அத்துடன், இந்த பைக்கில் ஏகப்பட்ட மாடர்ன் தொழிற்நுட்ப வசதிகள் வழங்கப்படுகின்றன.
4.2 இன்ச்சில் முழு-வண்ண டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ப்ளூடூத் மூலமாக மொபைல் போன் இணைப்பு வசதியை பெறலாம். இந்த யமஹா பைக்கிலும் பயணிகளின் கூடுதல் பாதுகாப்புக்கு டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன. 138 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் 13 லிட்டர்கள் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புற சாலைகளுக்கும், குறுகிய தூர பயணங்களுக்கும் 125சிசி பைக்குகளே போதுமானது ஆகும். 125சிசி பைக்காக இருப்பினும் பார்க்க கொஞ்சம் அழகாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த பைக்குகளுள் ஒன்றை வாங்கி பயன்படுத்தலாம். 125சிசி பைக் என்றாலே மைலேஜும் அதிகமாக கிடைக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









