ஒட்டுமொத்த நாடும் ஆவலுடன் எதிர்பார்த்த 2-வீலர்ஸ்... 2025இல் மார்க்கெட்டை மொத்தமா புரட்டி போட்டவை!!

2025ஆம் ஆண்டு இந்திய இருசக்கர வாகனத் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டில் பலதரப்பட்ட பிரிவுகள் மற்றும் விலை வரம்புகளில் மிகவும் சுவாரஸ்யமான மோட்டார்சைக்கிள்கள் (Motorcycles) மற்றும் ஸ்கூட்டர்கள் (Scooters) அறிமுகப்படுத்தப்பட்டன. குறிப்பாக, பொது மக்களுக்குப் பயனுள்ள சில வாகன அறிமுகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. 2025ஆம் ஆண்டில் அறிமுகமான மிக முக்கியமான பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் விவரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

best bikes and scooters that launched in 2025

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 (TVS Apache RTX 300): 20 ஆண்டு கால அப்பாச்சி பைக் வரலாற்றில், டிவிஎஸ் மோட்டார் இறுதியாக ஒரு அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியது. இது 2025இன் மறக்க முடியாத பைக் வெளியீடுகளில் ஒன்றாகும். அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 கவர்ச்சிகரமான ரூ.1.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் டிவிஎஸ்-இன் புதிய ஆர்டி-எக்ஸ்டி4 (RT-XD4) என்ஜின், 35 பிஎச்பி ஆற்றலையும், 28.5 என்.எம் டார்க் திறனையும் வழங்குகிறது. மேலும், இது பல தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் ஓட்டுநர் உதவிகளுடன் வருகிறது.

best bikes and scooters that launched in 2025

ஹீரோ கிளாமர் எக்ஸ் (Hero Glamour X): க்ருஸ் கண்ட்ரோல் (Cruise Control) அம்சத்தை கொண்டு வந்த முதல் விலை குறைவான மோட்டார்சைக்கிள் என்கிற பெருமையை க்ளாமர் எக்ஸ் பெறுகிறது. ஒரு 125சிசி பைக்கில் இந்த அம்சம் அவசியமா என்ற கேள்வி இருந்தாலும், அன்றாட பயன்பாட்டிற்கான பைக்குகளை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டதாகவும் மாற்றியமைப்பதில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனக்த்தின் இது ஒரு உறுதியான முயற்சியாகும்.

best bikes and scooters that launched in 2025

2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் (2025 KTM 390 Adventure): 2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளில் இரண்டு பெரிய மேம்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கு முன்பு 390 டியூக் தளத்தை 390 அட்வென்ச்சர் பைக் அடிப்படையாகக் கொண்டிருந்த நிலையில், 2025 மாடலில் ஆஃப்-ரோடிங்கிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தனி சேசிஸ் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், இந்த பைக்கில் வழங்கப்பட்ட புதிய 399சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 46 பிஎஸ் ஆற்றலையும், 39 என்எம் டார்க் திறனையும் வழங்கக்கூடியதாக உள்ளது.

best bikes and scooters that launched in 2025

ஹீரோ விடா விஎக்ஸ்2 (Hero Vida VX2): இந்தியாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) பிரிவு தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் 2025இல் தங்கள் மிகவும் லட்சியமான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. விடா விஎக்ஸ்2, இந்தியாவில் BaaS முறையில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். அதாவது, பேட்டரியை தனியாக பெற்று சார்ஜுக்கு ஏற்ப கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம்.

best bikes and scooters that launched in 2025

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 (Hero Xpulse 210): எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் வெற்றியைத் தொடர்ந்து, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவின் என்ட்ரி-லெவல் ஆஃப்-ரோட் மோட்டார்சைக்கிள் பிரிவில் புதிய எக்ஸ்பல்ஸ் 210 பைக் உடன் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. இது எக்ஸ்பல்ஸ் பைக்குகள் வரிசையில் மிக முக்கியமான மேம்பாடாகும். இதில் 210சிசி லிக்யுடு-கூல்டு, DOHC என்ஜின் ஆனது 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்படுகிறது.

best bikes and scooters that launched in 2025

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250ஆர் (Hero Xtreme 250R): விடா விஎக்ஸ்2 ஹீரோவின் மிகவும் லட்சியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றால், எக்ஸ்ட்ரீம் 250ஆர் ஆனது ஹீரோவின் மிகவும் லட்சியமான மோட்டார்சைக்கிள் ஆகும். இதில் ஹீரோவின் முதல் 250சிசி என்ஜின் உள்ளது. இது லிக்யுடு-கூல்டு என்ஜின் என்பதால், 30 பிஎஸ் ஆற்றலையும், 25 என்.எம் டார்க் திறனையும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வெளியிடுகிறது.

best bikes and scooters that launched in 2025

யமஹா எக்ஸ்எஸ்ஆர்155 (Yamaha XSR155): 150சிசி பைக்குகளைப் பற்றி பேசுகையில், யமஹா இந்தியாவின் மிகவும் விரும்பத்தக்க 150சிசி முதல் 160சிசி பைக்குகளில் ஒன்றான எக்ஸ்.எஸ்.ஆர்155 (XSR155) அறிமுகப்படுத்தியது. இது ரூ.1.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது எம்டி-15 (MT-15) மற்றும் ஆர்15 (R15) பைக்குகளை விட மலிவானது. எம்டி-15 மற்றும் ஆர்15 போலவே இருந்தாலும், இது ஒரு கவர்ச்சிகரமான ஸ்டைலிங் தொகுப்புடன் வந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் மிக பெரும் 2-வீலர் சந்தை இந்தியா என சொன்னால், அது மிகையில்லை. அந்த அளவிற்கு, ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கிலான பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. இத்தகைய சந்தையில் இந்த 2025ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக் மற்றும் ஸ்கூட்டர்களுள் உங்களது சாய்ஸ் எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 31, 2025, 22:10 [IST]
English summary
Best bikes and scooters that launched in this 2025 tvs apache rtx300 and hero glamour x
மேலும்... #Year Ender 2025 #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X