போர்ச்சுகல் நாட்டில் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தவர்! ஒன்றல்ல.. 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தந்திருக்காங்க!
பலுதூக்கும் வீரர் ஹர்ஷ் வியாஷ், சமீபத்தில் போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற பலுதூக்கும் போட்டியில் பங்குபெற்று இந்தியாவிற்காக ஐந்து தங்க பதக்கங்களை வென்றுக் கொடுத்தார். இவரை கௌரவிக்கும் விதமாக ஓர் நிறுவனம் அவருக்கு தன்னுடைய ஐந்து இ-ஸ்கூட்டர்களை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபல மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பிகாஸ் ()-தான் இந்தியாவிற்கு பெருமிதம் சேர்த்தவருக்கு இ-ஸ்கூட்டரை வழங்கி இருக்கின்றது. நாசிக் எம்பி சீமா தாய் மஹேஷ் ஹைர் வாயிலாக இந்த நிகழ்வு நிறுவனம் நிகழ்த்தி இருக்கின்றது.
அதாவது, ஸ்கூட்டர்களுக்கான சாவியை எம்பி-யே பலுதூக்கும் போட்டியின் சாம்பியனுக்கு வழங்கி இருக்கின்றார். ஆர்யூவி 350 மேக்ஸ் (RUV 350 Max), சி12ஐ இஎக்ஸ் (C12i EX) மற்றும் சி12ஐ மேக்ஸ் 2.0 (C12i Max 2.0) மாடலின் மூன்று யூனிட்டுகளை அவருக்கு டெலிவரி கொடுத்திருக்கின்றனர்.

இந்தியாவிற்கு பெருமிதம் சேர்த்தவரை கௌரவிக்கும் விதமாக இந்த நிகழ்வு அமைந்திருப்பதாக நிறுவனம் கருத்து தெரிவித்திருக்கின்றது. பிகாஸ் வழங்கி இருக்கும் இந்த மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுமே அதிக சிறப்புமிக்க வாகனங்களாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாக, ஆர்யூவி 350 மேக்ஸ் நிறுவனத்தின் அதிக சிறப்புகளைத் தாங்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாகக் காட்சியளிக்கின்றது.
மிக முக்கியமாக 3500 வாட் திறன் கொண்ட பிஎம்எஸ்எம் எலெக்ட்ரிக் மோட்டார் இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. அது அதிகபட்சமாக மணிக்கு 75 கிமீ எனும் வேகத்தில் பயணிக்கும். இதுமட்டுமல்ல இதில் ஓர் முழு சார்ஜில் 145 கிமீ ரேஞ்ச் தரக் கூடிய பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
3 kWh திறன் சிஏஎன் (CAN) தொழில்நுட்பம் கொண்ட எல்எஃப்பி (LFP) வகை பேட்டரி பேக்கே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் செய்ய 2 மணி நேரங்கள் 40 நிமிடங்களே போதுமானது.
இத்துடன், 5 அங்குல டிஎஃப்டி திரை, திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதி, செல்போனுக்கு வரும் தகவல்களை அறியும் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்டு கன்ட்ரோல் என ஏகப்பட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இதைபோலவே பிகாஸ் நிறுவனத்தின் சிறந்த தயாரிப்பாக சி12ஐ இஎக்ஸ் மாடல் உள்ளது. ஆனால், இதில் 2500 வாட் திறன் கொண்ட பிஎம்எஸ்எம் ஹப் வகை மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீட்டு மணிக்கு 60 கிமீ ஆகும். அதேவேளையில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிமீ ஆகும்.
2.0 kWh திறன் கொண்ட சிஏஎன் தொழில்நுட்பம் கொண்ட எல்எஃப்பி வகை பேட்டரி பேக்கே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 3 மணி நேரங்களே போதும். இத்துடன், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் மோட், சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இலகு ரக எடை, சிறந்த சஸ்பென்ஷன் ஆகியவற்றை இது தாங்கி இருக்கின்றது.
இந்த மாடல் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த ஒன்றாகக் காட்சியளிக்கின்றது. பிகாஸ் சி12ஐ மேக்ஸ் 2.0 மேலே பார்த்த மாடலைவிட சற்றே அட்வான்ஸ்டு அம்சங்களையும், வசதிகளையும் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது. இதில் 2500 வாட் திறன் கொண்ட பிஎம்எஸ்எம் ஹப் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீ ஆகும். இதில் ஓர் முழு சார்ஜில் 135 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். 3.2 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதிலும், மற்ற இ-ஸ்கூட்டர் மாடல்களைபோலவே அட்வான்ஸ்டு தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கணிசமான அளவு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் பிராண்டாக பிகாஸ் இருக்கின்றது. இந்த நிறுவனமே தற்போது இந்தியாவிற்காக தங்க பதக்கத்தை வென்றவருக்கு டூ-வீலரை வழங்கி அதன் வாயிலாக விளம்பர ஆதாயம் தேடி இருக்கின்றது. அதுமட்டுமல்ல புதுமுகங்களை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரவும் அது திட்டமிட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








