அன்லிமிடெட் கிமீ வாரண்டி உடன் ஸ்கூட்டர் அறிமுகம்! வாட்டர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் மோட்டாருடன்!..

உலக புகழ்பெற்ற பிரீமியம் இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் பிஎம்டபிள்யூ மோட்டாராட் (BMW Motorrad). இந்த நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய புதுமுக ஸ்கூட்டர் மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி (BMW C 400 GT), இதுவே அந்த புதுமுக ஸ்கூட்டர் மாடல் ஆகும். பன்முக சிறப்பம்சங்களைத் தாங்கிய ஓர் ஸ்கூட்டர் மாடலே இதுவாகும். டைனமிக் பிரேக் கன்ட்ரோல் வசதிக் கொண்ட ஏபிஎஸ் ப்ரோ கூட இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுமட்டுமல்ல, டைனமிக் டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் எஞ்சின் டிராக் டார்க் கன்ட்ரோல் போன்ற ஏகப்பட்ட சிறப்பம்சங்களை இந்த ஸ்கூட்டரில் பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் வழங்கி இருக்கின்றன. இதுமட்டுமல்ல இதுபோன்று இன்னும் பல்வேறு அட்வான்ஸ்டு மற்றும் நவீன கால அம்சங்களைத் தாங்கியதாகவே பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி மாடலை பிஎம்டபிள்யூ நிறுவனம் தயார் செய்திருக்கின்றது.

Bmw c 400 gt launched

இதற்கு அறிமுகமாக ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். முழுமையாக கட்டியமைக்கப்பட்ட மாடலாக இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருப்பதாலேயே இந்த அளவு மிக அதிக விலையை பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி கொண்டிருக்கின்றது.

இதன் வருகையைத் தொடர்ந்து பிஎம்டபிள்யூ இரண்டு சக்கர வாகன விற்பனையாளர்கள் தற்போது ஸ்கூட்டருக்கான புக்கிங் பணிகளைத் தொடங்கி இருக்கின்றனர். இந்த ஸ்கூட்டரின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு அன்லிமிடெட் கிமீ அல்லது மூன்று ஆண்டுகள் வாரண்டி திட்டத்தை பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிவித்து இருக்கின்றது.

Bmw c 400 gt front look

அதேவேளையில், நான்கு மற்றும் ஐந்தாண்டுகள் கூட்டப்பட்ட வாரண்டியையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இத்துடன், ரோடு சைடு அசிஸ்டன்ஸ் போன்ற திட்டங்களையும் அது அறிவித்து இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரை கார்களைப் போல சாவியே இல்லாமலேயே ஓட்டிச் செல்ல முடியும்.

ஆனால், உரிமையாளரால் மட்டுமே இதை செய்ய முடியும். இத்துடன், பெரிய விண்ட்ஸ்கிரீன், அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, ஸ்கூட்டரின் அழகிற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக தங்க நிற பூச்சுக் கொண்ட ரிம், கருப்பு நிற இருக்கை, வீல் நிறத்திலான பிரேக் கேலிபர்கள் உள்ளிட்டவையும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கும் எஞ்சின் வாட்டர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் மோட்டார் ஆகும். இது ஓர் 350 சிசி திறன் கொண்டது மோட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது அதிகபட்சமாக 34 எச்பி மற்றும் 35 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது.

சிவிடி (CVT) கியர்பாக்ஸ் வாயிலாகே வீல்களுக்கு ஆற்றல் கடத்தப்படுகின்றது. ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டு இருக்கும் திரை 10.25 அங்குல அளவுள்ள டிஎஃப்டி டிஸ்பிளே ஆகும். இதில் கன்னெக்டிவிட்டி ப்ரோ எனும் அம்சத்தையும் பிஎம்டபிள்யூ நிறுவனம் சேர்த்திருக்கின்றது. அட்வான்ஸ்டு அனுபவம் மற்றும் மிகவும் முக்கியமான தகவல்களை வழங்கக் கூடிய ஓர் திரையே இதுவாகும். இதன் இருக்கைக்கு அடியில் ஸ்டோரேஜ் சுமார் 37.6 லிட்டர் அளவுக் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த டூ-வீலர்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டே பிஎம்டபிள்யூ மோட்டாராட் இந்த அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.

More from DriveSpark

Article Published On: Friday, March 7, 2025, 15:37 [IST]
English summary
Bmw c 400 gt launched with 10 25 tft display connectivity pro feature bookings started from today
மேலும்... #bmw motorrad #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+