வாங்குனா இப்படி ஒரு வண்டிய வாங்கனும்! பிஎம்டபிள்யூ கொண்டு வரும் வண்டியில் இவ்வளவு விஷயம் இருக்குதா?

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் புதிதாக எஃப் 450 ஜிஎஸ் என்ற பைக்கை அறிமுகப்படுத்த தயாராகிவருகிறது. இந்த பைக் அந்நிறுவனத்தின் புதிய 420 சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் இன்ஜினை கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த பைக் மீது இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் தனது எஃப் 450 ஜிஎஸ் என்ற பைக்கை வெளியிட தயாராகி வரகிறது. இந்நிறுவனம் இந்த பைக்கை வரும் டிசம்பர் மாதம் 19-20 ஆகிய தேதிகளில் கோவாவில் வைத்து நடக்கும் இந்தியா பைக் வீக் நிகழ்ச்சியில் அறிமகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் ஏற்கனவே EICMA கண்காட்சியில் முதன் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. இந்த பைக் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளிலும் விற்பனைக்கு வருகிறது.

BMW F 450 GS

இந்த பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் பைக் சற்று உயரமான பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்கம் எக்ஸ் வடிவ எல்இடி ஹெட்லைட் வஙழ்கப்பட்டுள்ளது, இந்த பைக்கில் புதிதாக உருவாக்கப்பட்ட 420 சிசி பேரலல் ட்வின் மோட்டார் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளுது. இது 135 டிகிரி கிராங்க் பின் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இன்ஜின் அதிக என்கேஜாகவும், வைப்ரேஷன் குறைவாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் ஸ்விஃப்ட் அசிஸ்ட் ப்ரோ அம்சம் இருக்கிறது. இது கிளட்ச் இல்லாமல் கியரை மாற்ற உதவும். ஜிஎஸ் டிராஃபி வேரியன்டில் ஸ்டாண்டர்டாக இ்நத சிறாஅடம் இரகு்கிறது. இது லோயர் வேரயின்டில் புதிய டியூப்லர் ஸ்டீல் பிரேம் வழங்கப்பட்டுள்ளுது. இந்த பைக் 178 கிலோ எடை கொண்டது. சஸ்பென்சன் செட்டப்பை பொருத்தவரை கேஒய்பி காம்போனென்ட்கள் உள்ளது. இதில் 43 மிமீ தலைகீழாக பொருத்தப்பட்ட ஃபோர்க் முன்பக்கமும், பின்பக்கம் மோனோ ஷாக சஸ்பென்சன் சிஸ்டம் வழங்கப்ப்டடுள்ளது.

BMW F 450 GS

டாப் வேரயன்டில் அட்ஜெஸ்டபிள் ஸ்போர்ட் சஸ்பென்சன் செட்டப் வழங்கப்பட்டுள்ளது பிரேக்கிங்கை பொருத்தவரை முன்பக்ககம் பைபிரே பிரேக்கிங் சிஸ்டம் உள்ளுது. இதில் கார்னரிங் ஏபிஎஸ் சப்போர்ட் சிஸ்டம் உள்ளது. இன்ஜின் பிரேக் கண்ட்ரோல், டைனமிக் பிரேக் கண்ட்ரோல், உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த பைக் பேஸிக் எக்ஸ்க்ளூஸிவ், ஸ்போர்ட் மற்றும் ஜிஎஸ் டிராஃபி ஆகிய வேரியன்ட்களில் கிடைக்கிறது.

இந்த பைக்கில் அட்வெஞ்சர் வடிவிலான அம்சங்கள் உள்ளது. முக்கியமாக ஆஃப்ரோடு பைக்கில் உள்ளதை போல பூட் ரெஸ்ட்கள் வழங்கப்ப்டடுள்ளது. இது போக அலுமினியம் இன்ஜின் கார்டு, ஹேண்ட் கார்டுகள், ஸ்போர்ட் சஸ்பென்சன், மற்றும் ரேஸிங் ரெட், ரேஸிங் ப்ளூ மெட்டாலிக் ஆகிய கலர் ஆப்ஷன்கள் உள்ளது. இந்த காரில் ரெயின் , ரோடு, எண்டியூரே, எண்டியூரோ ப்ரோ ஆகிய ரைடு மோடு ஆப்ஷன்கள் உள்ளன எண்டியூரோ ப்ரோ ஆப்ஷன் மட்டும் டாப் வேரியன்டில் மட்டுமே உள்ளுது.

BMW F 450 GS

மேலும் இந்த பைக்கில் 6.5 இன்ச் டிஎஃப்டி ஸ்கிரீன், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, நேவிகேஷன் சப்போர்ட், ரைடு டேட்டா, ஸ்மார்ட் ஃபோன் இன்டகரேஷன், ஹீட்டட் கிரப்ஸ், யூஎஸ்பி டைப்சி சார்ஜிங் போர்ட் பிஎம்டபிள்யூ நிறுவனம் இ்நத பைக்கை ரூ4.70 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த பைக் சிறப்பான விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த பைக்கின் விற்பனையை பொருத்தவரை வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதத்திலேயே விலை, புக்கிங், டெலிவரி குறித்த தகவல்கள் வெளியிடப்படலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 22, 2025, 12:05 [IST]
English summary
Bmw f 450 gs india launch next month key details
மேலும்... #bmw motorrad
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X