எல்லாருக்கும் கிடைக்காது! லிமிடெட் எடிசன் பைக்கை வெளியிட்ட பிஎம்டபிள்யூ!

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது ஜி310 ஆர்ஆர் பைக்கின் லிமிடெட் எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஸ்டாண்டர்ட் வேரியன்டை விட விலை ரூ18,000 அதிகமாக உள்ளது. இந்த பைக் மொத்தம் 2 விதமான பெயிண்ட் ஸ்கீம்களில் விற்பனைக்கு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது ஜி 310 ஆர்ஆரு் பைக்கின் லிமிடெட்ட எடிசனை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கை இந்தியாவில் 10,000 பைக்கிற்கு மேல் விற்பனையானதை கொண்டாடும் வகையில் இந்த லிமிடெட் எடிசன் பைக்கை உருவாக்கியுள்ளது. இந்த ஸ்பெஷன் வெர்ஷன் பைக் இந்திய மார்கெட்டில் ரூ2.99 லட்சம் என்ற விலையில் உருவாக்கப்பட்டுள்ளது.

BMW G 310 RR Limited Edition

இந்த புதிய பிஎம்டபிள்யூ ஜி 310 லிமிடெட் எடிசைன் பைக்கில் புதிய ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக டேங்க் மற்றும் ரிம் பகுதியில் இது வழங்கப்பட்டுள்ளுது. இந்த பைக்கின் மற்ற வடிவமைப்புகள் எல்லாம் அப்படியே தான் உள்ளது. பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர் பைக்கின் வடிவமைப்பை அடிப்படையாககொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக் ஸ்டாண்டார்ட் வெர்ஷனை விட ரூ18,000 கூடுதல் விலையில் கிடைக்கிறது.

இந்த பைக்கை தனித்துவமாக தெரிய வைப்பதற்காக இந்த பைக்கின் டேங்க் பகுதியில் "1/310" என்ற பேட்ஜ் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. இது லிமிடெட் எடிசன் தோற்றத்தை மேலும் அதிகரிக்கும். இந்த பைக்கை வாடிக்கையாளர்கள் காஸ்மிக் பிளாக், போலார் ஒயிட் ஆகிய நிறங்களில் தேர்வு செய்து கொள்ள முடியும். இந்த பைக்கில் ஆங்குலர் ஹெட்லைட், டெயில் வைசர், டிராக் ஃபோக்ஸ்டு சீட்டிங் எர்கோனாமிக்ஸ், அக்ரஷிவ் ரைடர் டிரைஆங்கிள்.

BMW G 310 RR Limited Edition

கோல்டு யூஎஸ்டி ஃபோர்க், அலுமினியம் ஸ்விங் ஆர்ம், மெக்கலின் பைலட் ஸ்டிரீட் ரேடிகல் டயர்கள், பிரிமியமான ஃபினிஷ் டச்கள் ஆகியனவ பைக்கிற்கு ஸ்போர்ட்டியான லுக்கை வழங்குகிறது. இந்த பைக்கின் ரேம் ஏர்இன்டேக் டக்ட்ஸ் மற்றும் கில் வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இது சூடான காற்று இன்ஜின் பக்கம் வருவதை குறைக்கிறது.

இந்த பைக்கினல் மெக்கானிக்கல் மாற்றம் எதுவும் இல்லை. இந்த பைக்கில் 312 சிசி லிக்யூட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 34 எச்பி பவரையும், 27.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தம் வகையில் உருவாக்கப்பட்டுள்ளுது. இது 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள ஆண்டி ஹோப்பிங் கிளட்ச் வாகனத்தின் இன்ஜின் பிரேக்கிங்கை அதிகரிக்கிறது.

BMW G 310 RR Limited Edition

இந்த பைக்கில் 4 விதமான ரைடு மோடுகள் உள்ளன. டிராக், ஸ்போர்ட், அர்பன், ரெயின், இது திராட்டல் ரெஸ்பான்ஸ் மற்றும் ஏபிஎஸ்ஆகியவற்றை கண்டிஷன்களுக்கு ஏற்ப மாற்றியுள்ளது. இந்த பைக்கின் ரைடு பை ஒயர் டெக்னாலஜி திராட்டல் ரெஸ்பான்ஸை ஷார்ப்பாக வைத்திருக்கம். ட்வின் சேனல் ஏபிஎஸ், பின்பக்க வீல் தூக்குவதிலிருந்து பாதுகாக்கிறது.

இந்த பைக்கில் டியூப்லர் ஃபிரேம் போல்ட் ஆன் ரியர் ஃபிரம் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் தலைகீழாக பொருத்தப்பட்ட ஃபோர்க், பின்பக்கம் நேரடியாக பொருத்தப்பட்ட மேனோஷாக் சஸ்பென்சன் ஆகிய அம்சம் உள்ளது. இந்த பைக்கில் 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.

இதில் வேகம், ரெவ், ரைடிங் தகவல்கள், மோடு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறுகிறது. இதை ஹேண்டில் பாரில் பொருத்தப்பட்ட ஸ்விட்ச் மூலம் கண்ட்ரோல் செய்ய முடியும். இந்த பைக்கிற்கு 3 ஆண்டுகளுக்கு வரன்முறை இல்லாத கி.மீ அளவிற்கு வாரண்டி கிடைக்கிறது. இதை 5 ஆண்டுகள் வாரண்டியாக நீட்டித்துக்கொள்ள முடியும். 24X ரோடு சைடு அசிஸ்டென்ஸ் கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிஎம்டபிள்யூ பைக்கிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் இதில் லிமிடெட் எடிசன் பைக்கை அறிமுகப்படுத்தியது நிச்சயம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும். தனித்துவமாக தெரிய வேண்டும் என நினைக்கும் பலர் இந்த பைக்கை வாங்க வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 27, 2025, 8:11 [IST]
English summary
Bmw g 310 rr limited edition launched at 2 99 lakh
மேலும்... #bmw motorrad #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X