இதுக்குமேல் சமாளிக்க முடியல... வெகுண்டு எழுந்து பிஎம்டபிள்யூ எடுத்த முடிவு! ஜனவரி 1இல் தெரிந்துவிடும்!

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா (BMW Motorrad India) நிறுவனம் தனது அனைத்து மோட்டார்சைக்கிள்கள் மீதும் 6 சதவீதம் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. அதிகரிக்கும் செலவினங்கள் மற்றும் அன்னிய செலாவணி ஏற்ற இறக்கங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட புதிய விலைகள் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு, பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா நிறுவனத்தின், இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் மற்றும் முழுமையாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மோட்டார்சைக்கிள்களுக்கும் பொருந்தும். பிஎம்டபிள்யூ 2-வீலர்களின் அம்சங்கள், விவரக்குறிப்புகள் அல்லது உபகரணங்களில் எந்த மாற்றமும் செய்யாமல், தொடர்ச்சியான நிதி நெருக்கடி காரணமாகவே இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

bmw motorrad india announces price hike

பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஹர்தீப் சிங் பிரார் பேசுகையில், "அமெரிக்க டாலர் மற்றும் யூரோவிற்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்ததால் ஏற்பட்ட அன்னிய செலாவணி அழுத்தம் பல மாதங்களாக குறையவில்லை. கச்சா எண்ணெய் பொருட்கள் மற்றும் ஏற்றுமதி/இறக்குமதி செலவுகளும் கணிசமாக அதிகரித்துள்ளன.

இந்த விலை உயர்வு நிறுவனத்திற்கும் எங்கள் டீலர் பார்ட்னர்களுக்கும் தேவையான லாபத்தையும் தொடர்ச்சியான மதிப்பையும் உறுதி செய்யும்" என்று குறிப்பிட்டார். இந்தியாவில் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் ஸ்போர்ட், அட்வென்ச்சர், ரோட்ஸ்டர், ஹெரிடேஜ், டூர் எனப் பல வகையான மோட்டார்சைக்கிள்களை வழங்கி வருகிறது.

bmw motorrad india announces price hike

இதில், இந்தியாவில் தயாரிக்கப்படும் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்.ஆர் (G310 RR) மற்றும் பிஎம்டபிள்யூ 'சிஇ 02' (CE 02) போன்ற மாடல்களும், முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்போர்ட், அட்வென்ச்சர், டூரிங் மற்றும் க்ரூஸர் வகைகளில் பல்வேறு விதமான மோட்டார்சைக்கிள்களும் அடங்கும்.

பிஎம்டபிள்யூ எஃப்900 ஜிஎஸ் (F 900 GS), பிஎம்டபிள்யூ ஆர்1300 ஜிஎஸ் (R 1300 GS), பிஎம்டபிள்யூ எஸ்1000 ஆர்.ஆர் (S 1000 RR), பிஎம்டபிள்யூ கே1600 ஜிடிஎல் (K 1600 GTL), பிஎம்டபிள்யூ ஆர்18 டிரான்ஸ்காண்டினெண்டல் (R 18 Transcontinental) மற்றும் பிஎம்டபிள்யூ சி400 ஜிடி (C 400 GT) போன்ற இறக்குமதி பைக்குகளுக்கு புதிய விலைகள் பொருந்த வாய்ப்புள்ளது.

bmw motorrad india announces price hike

மோட்டார்சைக்கிளின் மாடல் மற்றும் அதன் விலைக் கட்டமைப்பைப் பொறுத்து விலை உயர்வின் அளவு மாறுபடும் என்றும், முழுமையாக கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் (CBU) நாணய மதிப்பின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் சர்வதேச ஏற்றுமதி/இறக்குமதி செலவுகளால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய விலை திருத்தங்கள் 2026 ஜனவரி 1 அன்று அல்லது அதன் பிறகு செய்யப்படும் முன்பதிவுகளுக்கும், டெலிவரி ஆகாத முன்பதிவுகளுக்கும் நாடு முழுவதும் உள்ள அனைத்து டீலர்ஷிப்களிலும் பொருந்தும். மூலப்பொருட்களின் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவுகள் மற்றும் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது ஆகியவை இந்திய வாகனச் சந்தையில் விலைகளைத் தொடர்ந்து பாதித்து வருவதால், பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா நிறுவனத்தின் இந்த முடிவு மற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களின் அறிவிப்புகளுடன் ஒத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 20, 2025, 16:27 [IST]
English summary
Bmw motorrad india plan to hike prices of motorcycles upto 6 percent from 2026 january 1
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X